Search This Blog

21.12.09

தன்மான உணர்வை ஊட்டியவர் பெரியார்


பேராசிரியர் பேசுகிறார்

தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான மானமிகு மாண்புமிகு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் 23.10.2009 அன்று மாலை சென்னை பாவாணர் நூலகக் கட்டடத்தில் பெரும்புலவர் மணியன் அவர்களால் எழுதப்பட்ட “பெரியார் காவியம்’’ வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை:

இங்கே பேசிய பேராசிரியர், ‘‘அ. இராமசாமியாக இருந்தாலும் சரி, அவருக்குத் தூண்டுகோலாக இருந்த கவிஞர் கருணானந்தமாக இருந்தாலும் சரி, இந்நூலை யாத்த புலவர் மணியனாக இருந்தாலும் சரி, நானாக இருந்தாலும் சரி, இப்படி மேடை அமைத்தும், அதில் நம் சிந்தனைகளை பேசுவதுமான எல்லா நிலைகளுக்கும் அடித்தளமே தந்தை பெரியார்தான். முன்னேர் சென்ற முதல் வீரர்தான் தந்தை பெரியார். அண்ணா அறிஞர்தான் பெருமைக்குரியவர்தான் ஆனாலும் பெரியார் என்ற மாமனிதர் இல்லை என்றால், அண்ணா இல்லை. அண்ணாவே இல்லை என்றால், நாம் இல்லை என்று அர்த்தம்’

‘தமிழன் மிராசுதாரராக இருப்பான் வயதிலும் முதிர்ந்தவனாக இருப்பான் ஒரு பார்ப்பானை நேரில் கண்டுவிட்டால் தோளில் போட்டிருந்த துண்டினை எடுத்து கக்கத்தில் வைத்துக்கொள்வான், ஏன், இன்னும் சொல்லப்போனால், அந்தச் சிறுவனான பார்ப்பனர் காலிலும் விழுவான்.’ “நீ மனிதன் _ நீ ஏன் அவன் காலில் விழவேண்டும்? எவன் காலிலும் எவனும் விழவேண்டாம் என்ற தன்மானத்தை நம் உணர்வில் ஊட்டியவர்தான் தந்தை பெரியார்.’’

------------------- நன்றி:- “விடுதலை” 19-12-2009

0 comments: