Search This Blog

22.12.09

பெரியாழ்வார் பொய்யரா? அல்லது ராஜாஜி பொய்யரா?


‘ஆண்டாள்’

சைவ சமயத்தில் நாயன்மார்கள் 63 பேர்கள் என்றால், வைணவ மதத்தில் ஆழ்வார்கள் 12 பேர். அந்தப் பட்டியலில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் என்னும் ஆண்டாளும் அடங்குவார்.

பக்தையாகிய ஆண்டாள் என்னும் பெண், கடவுளாகிய திருமாலை தன் கணவனாக வரித்துப் பாடியதாகக் கூறப்படும் திருப்பாவையைப் படித்தால், காம வெறி மேலிட்ட ஒரு பெண் விரகதாபத்தால் விகாரமாகப் பாடியிருப்பதாகத்தான் கருதிட முடியும். அந்த அளவுக்கு வெறியின் உச்சத்தில் இருந்திருக்கிறார் அந்தப் பருவப் பெண்.

பெரியாழ்வார் ஆண்டாளின் தந்தையாகக் கூறப்படுகிறார். காலாகாலத்தில் அந்தப் பெண்ணுக்கு ஒரு காளையிடம் கைபிடித்துக் கொடுத்திருந்தால், இந்த அளவுக்கு அந்தப் பெண் பருவக் கோளாறு என்னும் நோயால் தலைவிரித்து ஆடியிருக்கமாட்டாள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஆண்டாள் என்ற ஒரு பக்தையே கிடையாது என்று சொல்லுபவர் சாதாரண ஆசாமியல்ல, சாட்சாத் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி)தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார். அவர் சைவர் என்றால், வேண்டும் என்றே சொல்லுகிறார் என்று உள்நோக்கம் கற்பிக்க முடியும்; ஆனால், ஆச்சாரியார் அசல் வைஷ்ணவர் ஆயிற்றே!

என்ன சொல்லுகிறார் ஆச்சாரியார்?

‘ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததேயில்லை. நாலாயிரம் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல; பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி, அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார்’’ என்று திரிவேணி என்னும் மாதப் பத்திரிகையில் 1946 செப்டம்பர் இதழில் எழுதியிருக்கிறாரே!

பெரியாழ்வார் பொய்யரா? அல்லது ராஜாஜி பொய்யரா? வைணவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?


குறிப்பு: மார்கழி மாதத்தில் கோயில்களிலும், பஜனைகளிலும் திருப்பாவை பாடுவதால், அதனையொட்டியே இந்தத் தகவல் துணுக்கு

---------------- மயிலாடன் அவர்கள் 22-12-2009 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

Srinivasan K of QC. Canada said...

ஆண்டாள் நிஜ பெயரா இல்லை எழுத்தாளரின் கற்பனை புனைப்பெயரா என்பது முக்கியமா? இத்தனை அழகான தமிழ்க்கவிதை நமக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்வோம்.

அப்பாதுரை said...

திருப்பாவையில் காமம் தலைதூக்கி நிற்பது பற்றி நீங்கள் சொல்வது உண்மை. காதலனைப் பற்றி கவி பாடினால் உதைக்க வரப்போகிறார்களே என்று கடவுள் மேல் போதை கொண்டது போல் பாடியிருக்கலாம். கடவுளை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஒரு பெண் துணிவுடன் தன் நிலையை வெளிப்படுத்தினாள் என்று கொள்ளலாமே? பக்தி முக்தி என்பதெல்லாம் பாசாங்கு தான் - ஆனால் திருப்பாவை அருமையான சுய வெளிப்பாடு என்பதில் எனக்கு ஐயமில்லை. (அந்தக் காலத்து மஞ்சள் இலக்கியம்?)

பெரியாழ்வாரோ இன்னொரு ஆழ்வாரோ ஒர் பெண் பெயரில் இதை எழுதியிருக்கலாம் என்பது ஒரு சாத்தியம் தான். இது வரை கேள்விப்பட்டதில்லை - ராஜாஜியின் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி ஓவியா. கொஞ்சம் கிண்டிப் பார்த்தால் உப்புமாவில் என்னவெல்லாம் தெரிகிறது பாருங்கள்.

Thiruvaazhmaarban said...

ungala maari arivukettathanama evanume yosikka maataan. paapanutha suvaikkama ungalaala irukkave mudiathu apdithane. en ithae oru christuva ilakkiyathaio,muslim ilakiyathaiyo vimarsinga paakalam? Burkha system, Kevalamaana melnaatu avuthu pottu adura nadanam, prasangam,poosaingara perula wine kudikkara kalachaaram. mathavangala ozhichittu namma kadavula mattum parapungada apdingara ayokya velai. en ithallam kannula pada matenguthu.