Search This Blog

1.12.09

இன்று மகாதீபமாம்! அதாவது மகா கிரிமினல் செயல்பாடு!


தீபம்!

இப்படி ஒரு கொடுமையா? பக்தி என்றால் அங்கு மனிதநேயத்துக்குக் கிஞ்சிற்றும் இடம் கிடையாதா?

ஆறறிவுடையவன் மனிதன் என்றால், அவன் எண்ணத்தில் இரக்கம் என்ற ஒரு பொருள் கசியவேண்டாமா?

தாய் பசித்திருக்க தனயன் கோதானம் செய்தானாம் இந்தப் புத்தி பக்தி என்னும் புற்றுநோயின் சேட்டையாகும்.

இந்தியாவின் நிலைமை என்ன? சர்வதேசப் பட்டினி அட்டவணையில் மொத்தம் 88 நாடுகள் உள்ளன என்றால்,, அதில் இந்த புண்ணிய பாரதம் 66 ஆவது இடத்தில் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்திருக்கிறது.

இவ்வளவுக்கும் இந்த நாட்டில் படைத்தல் கடவுள், காக்கும் கடவுள்களும் இருக்கின்றனவாம். வெட்கம் இல்லாமல் இப்படியும் சொல்லித் திரிகின்றனர்.

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படும் குழந்தைகள் 50 விழுக்காடு என்று தேசிய மனித உணவு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராஜேந்திரபாபு கூறியுள்ளார்.

உலகில் ஆண்டு ஒன்றுக்குக் குழந்தைகளின் மரணம் 1.25 கோடியென்றால், இந்தியாவில் மட்டும் 25 லட்சமாம். ஆயிரத்துக்கு 58 குழந்தைகள் இந்தியாவில் மரணம் அடைகின்றன. எடைக் குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் 35 சதவிகிதமாகும். (குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில் இந்தியா இருக்கிறதாம்! _ ஹி.... ஹி.... வாயால் சிரிக்க முடியவில்லை!)

இந்தியாவில் சராசரியாக 57.8 விழுக்காடு கர்ப்பிணிப் பெண்களும், 56.1 விழுக்காடு திருமணம் ஆன பெண்களும், 79.1 விழுக்காடு குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கூறினார் (தினமணி, 15.3.2007).

இப்படிப்பட்ட நாட்டில் பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் என்ன நடக்கிறது?

இதோ ஒரு சேதி. திருவண்ணாமலையில் இன்று மகாதீபமாம்! அதாவது மகா கிரிமினல் செயல்பாடு! ஆயிரம் மீட்டர் திரியில், 3500 கிலோ நெய்யைப் பயன்படுத்தி திகுதிகுவென எரியவிட்டு கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்களாம் பக்த கே()டிகள்! இப்படி ஆண்டு ஒன்றுக்கு இந்தியாவில் பாழாவது ரூபாய் 58 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுப் பொருள்களாம்! பக்தி என்பதே உற்பத்தி நாசமாகும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்.

இரத்தம் கொதிக்கவில்லையா? பச்சிளம் பிள்ளைகள் பாலுக்கு அழுகையில், குழவிக் கல்லுக்கு நெய் கேட்கிறதா?

கல்லைக் கும்பிட்டுப் பழகியதால், அவர்களின் மனமும் கல்லாகிப் போய்விட்டதோ!

கடவுளை மற, மனிதனை நினை என்றார் தந்தை பெரியார். ஒரே ஒரு கணம் இதனை இந்த மனிதநேய உணர்வை சீர்தூக்கிப் பார்க்கக் கூடாதா?

-------------- மயிலாடன் அவர்கள் 1-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

3 comments:

Azhagan said...

It is obvious that you dont know anything about Sabari mala. No use in talking to you about it, but you mean to say that coconuts are produced ONLY in kerala?. By the way, in the very temples you hate, there is daily Annadhanam being done. Would you condemn this also? Would you save 50% of extravagant expenditure every month and use it to provide for the poor?. If you do so, please tell us what are the things you do.
EMPTY VESSELS MAKE MORE NOISE.

ராஜவம்சம் said...

http://onlinepj.com/books/arthamulla-islam/

தோழரே ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி உங்களுக்கு வரும் நியாயமான சந்தேகத்திற்கு விடை தேடிக்கொள்ளுங்கள்

தயவு செய்து மேலோட்டமாக வாசிக்கவேண்டாம்

நன்றி

புலவன் புலிகேசி said...

இத ஒரு வியாபாரமா பன்றானுங்க..இவனுங்கள எல்லாம் திருத்தவே முடியாது போல...

"சானிய காட்டி சந்தணம்னு சொன்னா நம்ப மாட்டானுங்க...ஆனா கல்ல காட்டி கடவுள்னு சொன்னா கால்ல உழுவானுங்க...