Search This Blog

15.9.08

அண்ணாதுரை கருத்துப் புரட்சி செய்து வரும் வீரர்!

தமிழ்மொழி பாமரர்க்கு எட்டாக் கனியாக இருந்தது - ஒரு காலத்தில்; நண்பர் அண்ணாத்துரை, தமது பேச்சாலும் - எழுத்தாலும், பண்டிதத் தமிழுக்கும் - பாமரர் தமிழுக்கும் இடையே ஓர் உறவை ஏற்படுத்தினார் மக்களுக்கும் - இலக்கியத்திற்கும் இடையே நிலவிய இடைவெளியைக் குறைத்தார்; அதன் விளைவாகப் புதிய புதிய எழுத்தாளர்களை - பேச்சாளர்களைத் தோற்றுவித்த பெருமைக்கு உரியவரானார்! தமிழ் மொழியின் வளர்ச்சியில் நாட்டமுடைய எவரும் இதனை மறுக்க மாட்டார்கள்.

------------ம.பொ.சிவஞானம்

தமிழ் என்பது தமிழ்ப் புலவர்கட்கு மட்டும் உரிய தனி உடைமை எனக் கருதப்பட்டு வந்தது; அந்நிலையை மாற்றி, தமிழ் யாவர்க்கும் உரியது என ஆக்கி, இனிய தமிழில் பேசுதலையும் - எழுதுதலையும் நாகரிகப் பெருவழக்காக நாட்டில் நிலைநாட்டிய பெருமை அறிஞர் அண்ணா அவர்களையே சாரும்!

-------------சி.இலக்குவனார்

திராவிட நாடு எழுத்து மூலங்கள் புத்தகமாக வெளியிடப்பட்டால், அவை வருங்காலத்தில் அய்ந்து கண்டங்களும் போற்றத்தக்க தமிழ் இலக்கியப் பகுதிகளாக விளங்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

------------------கா.அப்பாதுரை

தோழர் அண்ணாதுரை கருத்துப் புரட்சி செய்து வரும் வீரர்! அவர் எழுதும் தலையங்கங்களிலும் பேசும் பேச்சுக்களிலும் புரட்சி வித்துகள் நிறைந்துள்ளன! அவை படிப்பவர் உள்ளத்திலும்.... கேட்பவர் நெஞ்சிலும் கருத்துப் புரட்சியை விதைத்து வளர்க்கின்றன.

-----------------டாக்டர் மு.வரதராசனார்

நன்றி:-------------------"முரசொலி" அண்ணா மலர்

2 comments:

சுப.நற்குணன்,மலேசியா. said...

அறிஞர் அண்ணா அவர்களை இன்றைய தலைமுறை நினைவுக் கூர்வது பெருமைக்குரியதாகும்.

எனது வலைப்பதிவில் அண்ணா நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை பார்க்கவும்.

தமிழ் ஓவியா said...

நன்றி அய்யா