Search This Blog

16.9.08

மதச் சார்பற்ற என்பதற்கு என்ன பொருள்?




மதச்சார்பற்ற என்ற சொல்

இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து எந்த மொழியில் - செக்குலர் ஸ்டேட் என்று குறிப்பிட்டார்களோ, அந்த நாடுகளில் அந்த மொழிக்கு - செக்குலர் என்பதற்கு என்ன பொருள் இருக்கிறதோ - அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அந்தப் பொருளில்-தானே நாமும் பயன்படுத்த வேண்டும்? அதை விட்டுவிட்டு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, செக்குலர் என்றால் மதச் சார்பற்றது என்று பொருளல்ல; எல்லா மதங்களையும் ஒன்றுபோலக் கருதவேண்டும் என்றுதான் பொருள் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும், பெண்கள் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போலக் கருதி நடந்து கொள்ள வேண்டும். அது தான் பதிவிரதத் தன்மை என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதைவிட, அயோக்கியத்தனமாகும் - மதச் சார்பற்ற என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்றுபோலக் கருத வேண்டுமென்பது! எனவே, மதச் சார்பற்ற என்றால், எந்த மதத்தையும் சாராத என்பதுதான் பொருள்.

-------------------- தந்தைபெரியார் - நூல்: "மதச்சார்பின்மையும் நமது அரசும்", பதிப்பு: 1968

0 comments: