
இன்று தந்தைபெரியார் அவர்களின் 130 ஆவது பிறந்தநாள். இந்த நாளில் உங்கள் பார்வைக்கு அவரின் சிந்தனைகள் சில..........
இத்தனைக் கடவுள்களால் பலன் என்ன?
“இத்தனைக் கடவுள்கள் இருந்தும் நம்மை தாழ்ந்த ஜாதி மக்களாக, சூத்திரர்களாக, பஞ்சமர்களாகத்தானே வைத்துள்ளன? ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கடவுளுக்காக நாம் எவ்வளவு பணத்தைப் பாழ் செய்து உற்சவம் முதலியன நடத்துகிறோம். இதனால் பார்ப்பனரின் வயிறு நிறைகின்றதே ஒழிய, கீழ் ஜாதி மக்களென்னும் நமக்கு என்ன பலன்? இதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?’’
--------------`விடுதலை’, 24.8.1962
அறிவைக் கொண்டு சிந்தியுங்கள்!
யார் எந்தக் கருத்தினைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சியடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.
----------------விடுதலை, 25.7.1968
0 comments:
Post a Comment