Search This Blog

18.9.08

நமது கொள்கை தமிழனுக்கு மதம் இருக்கக்கூடாது



தேவ -அசுர என்னும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமே இன்றைய அரசியல் போராட்டம்!

இன்றைய தினம் என்னுடைய 90 ஆவது பிறந்த நாள் விழா என்னும் பெயரால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாலையில் சிறப்பான சிற்றுண்டி விருந்து நடைப்Nபெற்றது. அதற்கும் பல அறிஞர்கள் வந்து என்னைப் பாராட்டிப் பேசி மகிழ்வித்தனர். இங்கேயும் பல அறிஞர்கள் என்னைப் பாராட்டிப் பேசி மகிழ்வித்தனர். இங்கேயும் பல அறிஞர்கள் என்னைப் பாராட்டியதோடு சால்லை பணமுடிப்பு மாலைகள் இவை மூலம் தங்களின் பாராட்டை அன்பைக் காட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிறந்தநாள் கொண்டாடுவது ஒரு கொள்கையைப் பரப்புதைற்காகவே ஆகும். வரவர மனிதர்களும் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். மக்கள் இராமன் கிருஷ்ணன் கந்தன் சிவன் விஷ்ணு இவர்கள்பிறந்தநாள் விழாக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால் அதைக் கொண்டு கவுள் கொள்கைப் பரப்புகின்றார்கள். இவர்கள் உண்மையில் பிறந்தார்கள் இருந்தார்கள் செத்தார்கள் என்று சொல்ல முடியாது. இராமனைக் கடவுள் என்கிறான். அவன் மனைவி இராவணனால் சிறையாக்கப்பட்டிருகிறாள். கிருஷ்ணன் வேடனின் அம்பால் உயிர் துறந்தான் என்று எழுதி வைத்திருக்கிறான். கடவுளை உண்டாக்கியவன் அதற்குப் பிறப்பு - இறப்பு இல்லை உருவம் இல்லை என்று சொல்லி இருக்கும் போது அவன் எப்படி பிறந்து இருக்க முடியும்? இதனைச் சிந்திக்க வேண்டும்.

கடவுள் பிறந்த நாளோடு நாயன்மார் - குருமார் - ஆழ்வார் இவர்களின் பிறந்த நாள்களையும் கொண்டாடுகின்றனர். இவாகளும் உண்மையில் பிறந்தவர்கள் இல்லையானாலும் இவற்றின் மூலம் மக்களிடையே கடவுள் மத கொள்கைகளைப் பரப்புவதற்கு இதனைச் (பிறந்த நாள்) சாக்காக வைத்து பரப்பிக் கொண்டு வருகின்றனர். அதுபோன்று எனது கொள்கைகளைப் பரப்புவதறகாகவே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக கருதுகின்றேன்.

எனது விழாவில் கலந்து கொள்ளும் பெரியவர்கள் அறிஞர்கள் எல்லாம் என்னைப் பாராட்டித் தான் பேசுகிறார்களே ஒழிய எனது கொள்கைகளை எடுத்துச் சொல்வது கிடையாது என்றாலும் என்னைப் பாராட்டுவதன் மூலம் எனது கொள்கைகளைப் பாராட்டுகிறார்கள் என்றே கருதுகின்றேன்.

எனக்கு 90 வயதாகிறது. 51 வயது முதல் இன்றுவரை நான் எவரிடமும் எனக்காக ஒரு காசு கேட்டதில்லை. எனக்காக எவரிடமும் போய் உதவி செய்யும்படி கேட்டதுமில்லை. ஆனால் மற்றவர்களுக்காக உதவி செய்திருக்கின்றேன். உதவி கேட்டிருக்கின்றேன் - பொதுவாழ்வில் நான் தலைவனாகத் தான் இருந்திருக்கின்றேனே தவிர தொண்டனாக இருந்தது கிடையாது. காங்கிரசில் ஒரு ஆறுமாதம் உறுப்பினராக இருந்து உடன் செகரட்டரியானேன். பிறகு தலைவனாக ஆனேன். சிறு வயது முதலே நான் தலைவனாகவே இருக்கப் பிரியப்படுவேனே ஒழிய தொண்டனாக இருக்க எனக்குப் பிரியம் கிடையாது. நான் சிறு வயதிலிருந்து துடுக்காகவே இருந்தேன். எனக்கிருந்த வசதியால் துடுக்காகவே பேசி வருகின்றேன். அதனால் தான் யாரும் ஏற்காத செய்யத் துணியாத இத்தொண்டினை ஏற்று என்னால் இயன்ற அளவுக்கு பாடுபட்டுக் கொண்டு வருகின்றேன். எனது கொள்கைகளைத் தவிர வேறு எவருமே எடுத்துச் சொல்ல துணியமாட்டார்கள். நம் நாட்டில் எவ்வளவோ பெரியவர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்றாலும் எவருமே நம் இழிவினைப் போக்க வேண்டுமென்று கவலை கொள்ளவில்லை. இந்த இழிநிலை போக வேண்டுமென்று எவருமே பாடுபடவில்லையே யாராவது இருந்தால் சொல்லுங்கள் நான் எழுந்து வணங்குகின்றேன்.

நம் இழிவினை நிலை நிறுத்தும் சாம்பலையும் மண்ணையும் பட்டையாகப் பூசிக் கொண்டு கோயிலுக்குப் போகிறான் என்றால் அது தான் சூத்திரன் - பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் - குச்சுக்காரி மகன் கையெப்பம் போட்டுவிட்டுப் போவது போன்றது தானே. இன்றைக்கும் நீ வணங்கும் கடவுள் பின்பற்றும் மதம் மத சாஸ்திரங்கள் தானே உன்னைச் சூத்திரன் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் குச்சுக்காரி மகனாக ஆக்கி வைத்திருக்கிறது. அவையெல்லாம் பின்பற்றிக் கொண்டு சூத்திரத்தன்மை மட்டும் போக வேண்டுமென்றால் அது எப்படிப் போகும்? இதையெல்லாம் அடித்து நொறுக்கிக் கொளுத்தி சாம்பலாக்கினால் தானே உன் இழிவு நீங்க முடியும். அதில்லாமல் நீக்குவதற்கு வேறு வழி இல்லை.


இந்த 1968 இல் நம் மந்திரி இந்த சீரங்கத்துகக் கோயில் குட்டிச்சுவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப் போகிறேன் என்றிருக்கிறார். புதிது புதிதாக எந்த கோயில் கட்டினாலும் சூத்திரன் என்பதையும் இழிமகன் நாலாஞ்சாதி என்பதையும் நிலை நிறுத்துவதற்குத் தானே அது பயன்படும். நம் மந்திரிகள் பகுத்தறிவாளர்கள் என்றாலும் ஓட்டு வாங்க வேண்டியவர்ககளானதால் நம் மந்திரிகள் என்றாலும் ஓட்டு வாங்க வேண்டியவர்களானதால் என்றாலும் ஓட நம் மந்திரிகள் இப்போது பயந்து விட்டார்கள். கோயில் கட்டுகின்றார்கள். உன் பாட்டன் - உன் தகப்பன் நீ இழிமகனாக பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக நாலாஞ்சாதிக்காரனாக இல்லாமலிருக்க வேண்டாமா? உலக மக்களைப் போல இழிவற்று சுதந்திரத்தோடு அறிவோடு வாழவேண்டாமா? உலக மக்களைப் போல இழிவற்று சுதந்திரத்தோடு அறிவோடு வாழவேண்டாமா? என்பதைச் சிந்திக்க வேண்டுகின்றேன். நீ எந்தக் கோயில் கட்டினாலும் எத்தனைக் கோயில் கட்டினாலும் அங்கு போனால் நீ வெளியே நிற்க வேண்டியவன் தானேயொழிய உன்னால் உள்ளே போக முடியாதே. நீ சூத்திரன் வெளியே நில் என்று தானே பார்ப்பான் சொல்வான். கோயில் கட்டியதால் உன் சூத்திரத்தன்மையை பயன்படுத்திக் கொள்கின்றாயே தவிர வேறில்லையே.


பொதுவாக யாருக்குப் பிறந்த நாள் கொண்டாடினாலும் பிறந்தநாள் என்பது கொள்கையைப் பாராட்ட பரப்ப என்கின்ற கருத்திலேயே ஆகும். வாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும். அந்த வார்த்தைக்கு உண்மையில் மதிப்பே கிடையாது. நாமம் போட்டுக் கொள்வது எப்படி முட்டாள்தனமோ அப்படிப்பட்ட முட்டாள்தனம் தான் வாழ்த்துக் கூறுவதுமாகும். பார்ப்பான் பிச்சை எடுப்பதற்கு ஆசிர்வாதம் என்று ஆரம்பித்தான். அதையே தமிழாக்கி இவன் வாழ்த்து என்கிறானே ஒழிய அதில் எந்தப் பலனும் கிடையாது. ஒருவன் நூறு வருஷம் வாழவேண்டும் என்று சொன்னாலேயே எவனும் வாழ்ந்துவிட முடியாது. அதுபோல வசை கூறுவதால் எவரும் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை. என்னை வாழ்த்துகிறவர்களைவிட வசை சொல்கிறவர்கள் தான் அதிகம். அதற்கு உண்மையான பலனிருக்குமானால் நான் இத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்திருக்க முடியாது. எனவே வாழ்த்துவதற்கும் வசை கூறுவதற்குமுள்ள பலன் உன்றேயாகும். வாழ்த்துவது வாய்க்கும் காதுக்கும் இனிமையாக இருக்கமே தவிர பலனில் ஓன்றுமில்லை என்றாலும் என்னைப் புகழ்ந்து பேசிய அறிஞர்களுக்கு மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பார்ப்பானுக்குப் படிப்பே தங்களுக்கு விரோதியாக இருப்பவர்களைக் கொல்வதுதான். புராணத்தை எடுத்துக் கொண்டாலும் சரி கடவுள் அவதாரங்களை எடுத்துக் கொண்டாலும் சரி இதிகாசங்களை எடுத்துக் கொண்டாலும் இவையெல்லாம் பார்ப்பானுக்கு விரோதியாக இருந்தவர்களைக் கொல்வதற்காகத் தான். இரணியன் இராவணன் சூரபத்மன் போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் இரணியன் என்ன தவறு செய்தான்? யாகம் செய்யக் கூடாது என்று தடுத்தான். பார்ப்பனர்களைக் கண்ட இடத்தில் கொல்லச் செய்தான் இது தான் அவன் செய்தது. இராவணன் யாகங்களை அழித்தான். பார்ப்பனர்களுக்குத் தொல்லை கொடுத்தான். அதனால் தன் மனைவியை அவனுக்கு விட்டுக் கொடுத்து அவனுக்கு (இராவணனுக்கு) மாசு ஏற்படுத்தி அவனைக் கொன்றான்.

இப்படி எந்தக் கடவுள் அவதாரத்தை எடுத்தாலும் புராண இதிகாசங்களை எடுத்தாலம் அத்தனையிலும் நடைப்பெற்றிருப்பது தேவ - அசுர (பார்ப்னர் - பார்ப்பனரல்லாதார்) போராட்டமேயாகும். இது தான் அசியல் போராட்டமும் ஆகும். இனறைக்கு நடப்பதும் இந்த போராட்டமேயாகும்.

இரணியன் இராவணன் சூரபத்மன் இவர்களெல்லாம் உண்மையில் இருந்தார்களா? இந்த நிகழ்ச்சிகள் உண்மையில் நடந்தனவா? என்பது ஒருபுறமிருந்தாலும் பார்ப்பானுக்கு விரோதமாக நடந்து கொண்டால் இந்தக் கதிதான் ஏற்படும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் பார்ப்பனர்கள் எதை விட்டுக் கொடுத்தும் இனத்தைக் காக்க வேண்டுமென்தற்காகவும் எழுதப்பட்டவையேயாகும்.

கடவுளை நம்புபவர்களுக்குத் தான் காங்கிரசில் இடம். சில நல்லவர்களும் இருக்கலாம் என்றாலும் அவர்கள்மற்றவர்களுக்குப் பயந்து வெளியில் சொல்ல முடியாதவர்களாக ?ரக்கின்றார்கள். இன்றைக்கு அமைந்திருக்கிற தி.மு.க ஆட்சியானது அவர்கள் துணிந்து நாங்கள் மத சம்பந்தப்பட்டவர்கள் அல்ல நாங்கள் பகுத்தறிவாளர்கள் எனச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். காரியம் செய்கிறார்களோ இல்லையோ என்பது ஒரு புறமிருந்தாலும் சொல்லிக் கொள்ளக்கூடிய தைரியம் வேறு எவருக்கும் இல்லையே!

இவர்கள் (தி.மு.காரர்கள்) எதையாவது துணிந்து செய்யலாம் என்று முயற்சித்தால் பார்ப்பானும் காங்கிரஸ்காரனும் சேர்ந்து கொண்டு அதைச் செய்யவிடாமல் தடுக்கின்றனர். அவர்களும் தங்கள் பதவிகயைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல காரியங்களைச் செய்யமால் விடவேண்டி இருக்கிறது. பொது மக்களின் ஆதரவு நல்ல அளவிற்கு இருந்தால் துணிந்து காரியம் செய்வார்கள்.
இவ்வளவு வருஷம் ஆகி இவ்வளவு பிரச்சாரம் செய்து இன்னம் மாறவில்லையே! 1925 இல் சுயமரியாதை இயக்கத்தினை ஆரம்பித்து இன்று 42 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் திருந்தவில்லையே! இன்னும் குட்டிச்சுவரில் தானே போய் முட்டிக் கொள்கின்றான்.

நமது கொள்கை தமிழனுக்கு மதம் இருக்கக்கூடாது. எவன் ஒருவன் தன்னை இந்து என்கின்றானோ அவன் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் ஆவான். இதை நான் குன்றக்குடி அடிகளாரிடமே சொல்லி இருக்கின்றேன். அவரும் நான் இந்து அல்ல. இநதுமதத்தை ஒத்துக்கொள்வதில்லை எனறு சொலல்லிவிட்டார். இந்து மதம் என்கின்ற ஒரு மதம் கிடையாது. அதற்கு ஆதாரமும் கிடையாது.

நான் காங்கிரசை விட்டு விலகியபின் ஒருமுறை காந்தியாரைச் சந்தித்த போது அவர் நீ என்ன இந்து மததத்தை ஒழிய வேணடும் என்று சொல்கிறாயா? உன்னனால் எப்படி அதனை ஒழிக்க முடியும்? அப்படி ஒரு மதம் இருந்தால் தானே நீ ஒழிப்பதற்கு? இந்துமதம் என்று ஒரு மதமே கிடையாதே! என்று சொன்னார்.

பின் எப்படி இந்து என்கின்றபெயர் வந்தது என்றால் எப்படி தஞ்சாவுர்க்காரன் தஞ்சாவூரான் என்கின்றோமோ அதுபோல் சிந்திக் கரையில் வசித்து வந்தவர்களைச் சிந்து சிந்து என்று அழைத்து வந்தனர்.

அதபோல நாளடைவில் மாறி இந்துவாயிற்று. சங்கராசாரியாரே இந்துமதம் என்ற ஒரு மதம் கிடையாது. தேவ மதம் வைதீக மதம் என்று சொல்வது தான் சரி என்று சொல்லியிருக்கிறார். அது இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாடது. அதற்காக குறிப்பிட்டுக் காட்டக்கூடிய ஒரு நூலும் கிடையாது.


முஸ்லிம் மதம் கிறிஸ்து மதம் இருக்கிறதென்றால் அம்மதங்களை ஏற்படுத்திய தலைவனிருக்கின்றான். அம்மதத்திற்காக நூல் இருக்கிறது. அது தோன்றிய காலமிருக்கிறது. இப்படி அம்மதங்களுககெல்லாம் ஆதாரம் அடிப்படை இருக்கிறது. இந்து மதத்திற்கு இதில் எதுவமே கிடையாது எனபதோடு அகராதியில் இந்து மதத்திற்கு என்ன எழுதுகிறான் என்றால் கிறிஸ்து - முஸ்லிம் மதத்தைச் சாராதவர்கள் என்று பொருள் சொல்லி இருக்கின்றானே ஒழிய இதுதான் இந்துமதம் என்று சொல்ல முடியவில்லை. குறிப்பிட்டுக் காட்ட முடியவில்லை. இருந்தாலல்லவா காட்டுவதற்கு? இந்துமதம் என்பது நம்மை அடிமை கொள்ளவும் இழிமக்கள் - நாலாஞ்சாதி மக்களாக்கவும் பார்ப்பானால் கடவுள கற்பிக்கப்பட்டது போல் கற்பிக்கப்பட்டதே ஒழிய உண்மையில் அப்படி ஒரு மதம் கிடையாது. இதனை நம் மக்கள் நன்னு உணர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

உன்மதப்படி உன் யோக்கியதை என்ன? ஒரு முஸ்லிம் மதக்காரன் பிச்சைக்காரனாக இருந்தாலும் முகமது நபிக்குச் சமமானவன் என்று மற்ற முஸ்லிம் கருதுகிறான். அதுபோலத் தான் ஒரு கிறிஸ்தவன் ஏசுநாதருக்குச சமமானவனென்று மற்ற கிறிஸ்தவன் கருதுகின்றான். ஆனால் நீ அவன் பறையன் சக்கிலி தீண்டத்தகாதவன் - அவன் நிழல் படக்கூடாது. இவன் நாலாஞ்சாதிக்காரன் சூத்திரன் இவன் தொட்டவைகளைத் தொடக்கூடாது அவன் முதலி இவன் நாயக்கன் படையாச்சி வெள்ளாளன் என்று பாகுபடுத்தி ஒருவனுக்கு ஒருவன் பேதத்தை வளர்த்து வைத்திருக்கின்றாயே தவிர மற்ற மதக்காரனைப் போல அத்தனை பேர்களையும் சமமாகக் கருதச் செய்யவில்லையே!


உண்மையாகப் பார்க்கப் போனால் தமிழனுக்கு மதமும் இல்லை கடவுளுகளும் இல்லை. கடவுள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு கும்பிடத்தான் தெரியுமே தவிர அது என்ன என்பது எவனுக்குமே தெரியாது.

கடவுளை உண்டாக்கின முட்டாள் அதற்குச் சொன்ன தத்துவம் கடவுள் கண்ணிற்குத் தெரியாது. பிறப்பு இறப்பு அற்றது உருவமற்றது அய்புலன்களால் அறிந்துக் கொள்ள முடியாதது என்றெல்லாம சொல்லி இருக்கின்றான். ஆனால் இவன் கல்லையும் குழவிக்கல்லையும் வைத்துக் கொண்டு கடவுள் என்று முட்டிக்கொள்ளுகின்றான். ஒரு பொருளுக்கு வஸ்துவிற்குள்ள இலட்சணம. இலக்கணம் எதுவுமே கடவுளுக்குக் கிடையாடு. இதை மக்கள் உணர வேண்டும்.
நாம் 50 கோடி இருக்கின்றோம். நம்மில் 100 க்கு 3 பேர்களாக இருக்கின்ற பார்ப்பானுககு நாம் ஏன் அடிமையாக தேவடியாள் மகனாக இரக்க வேண்டும். கடவுள் மதம் கோயில் சாம்பல் நாமம் இவைதான் நம்மைச் சூத்திரனாக பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனாக வைத்திருக்கிறது என்கின்ற உண்மையை உணர்ந்து அவற்றை எல்லாம் நாம் கைவிட வேண்டும். நாம் இழிவோடு சூத்திரத்தன்மையோடு இருப்பதைவிட துலுக்கனான பின் மனிதனானாலும் சரி கிறிஸ்தவனானதன் பின் மனிதனானாலும் சரி அயல்நாட்டுக்காரன் நம்மை ஆட்சி செய்வதால் மனிதனானாலும் சரி அதை நான் வரவேற்கவே செய்வேன்.


பாகிஸ்தான்காரனுக்கு விசுவாசமாக இருந்தால் அவன் நம்மை மனிதனாக்குவான். நம் இழிவை அகற்றுவர் என்றால் அவனுக்கு விசுவாசமாக இருப்பதில் தவறு இல்லை என்றே சொல்லுவேன். அதுபோல ரஷ்யாக்காரனானாலும் சைனாக்காரனானாலும் எவனானாலும் சரி நம்மை மனிதனாக்குகின்றவனுககு விசுவாசமாக இருப்பதையே நான் விரும்புகின்றேன்.

இந்தக் கூட்டத்தில் வந்ததன் பயனாக இனிமேல் கோயிலுக்குப் போவதில்லை - சாம்பல் பூசுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும். இங்கு கேட்டுவிட்டு வீட்டிற்குப் போய் சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொண்டால் அதில் பயனில்லை. நாளைக்கு ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்போகிறார்கள். அதில் மந்திரி முதல் எத்தனை மடையர்கள் நுழையப் போகிறார்கள். சும்மா அடைத்துக்கிடந்த கதவைத் திறந்தால் சொர்க்கவாசலாம்! அது எப்படி சொர்க்கமாகும். இதையெல்லாம் சிந்திக்க வேண்டும்.

இறுதியாக காமராசர் நாகர்கோவில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குக் காமராசர் வெற்றி பெற வேண்டுமென்று மனப்பூர்வமாகக் கருதுகின்றேன். தமிழன் நன்றியுள்ளவனாக உண்மைத் தமிழனாக இருந்தால் அவன் அவர் வெற்றி பெற வேண்டுமென்றேக் கருதுவான்.


-------------------06-12-1968 அன்று திருச்சியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை. 12-12-1968

0 comments: