Search This Blog

27.9.08

பார்ப்பனர்களுக்கு நல்ல புத்தி வரவே வராது!

தி.நகராம்!

என்னதான் இடித்து உரைத்தாலும் பார்ப்பனர்களுக்கு நல்ல புத்தி வரவே வராது என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு.

சென்னை - தியாகராயர் நகர் தியாகராயர் மண்டபத்தில் நீதிக்கட்சியின் முப்பெரும் தலைவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் அஞ்சல் தலை வெளியிட்டு பெருமை சேர்க்கப்பட்டது.

அந்தச் சிறப்புமிக்க விழாவில் பங்கேற்ற மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நீதிக்கட்சியின் தந்தை என்று போற்றப்படும் ஒரு தலைவரால் வழங்கப்படும் இந்தத் தியாக ராயர் நகரை அவர் பெயரால் அழைக்காமல் தி.நகர் என்று போடுகிறார்களே என்று தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி னார். திருவல்லிக்கேணியை தி.கேணி என்று எழுதாத ஒரு கூட்டம், தியாகராயர் நகரை மட்டும் தி.நகர் என்று போடுவானேன் என்று நாக்கைப் பிடுங்க வும் வினா எழுப்பினார்.

என்னதான் நீங்கள் இடித் துக் கூறினாலும், தமிழர்கள் என்றால் நாங்கள் நஞ்சுதான் - எங்களுக்கு உரைக்கவே உரைக் காது என்பதைக் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் காட்டிக்கொள் ளும் வண்ணம் - திருவாளர் வைத்தியநாதய்யர் தலைமையில் இயங்கும் - அசல் ஆர்.எஸ்.எஸ். ஏடாக உருவெடுத்துக் கொக்கரிக்கும் தினமணி இன்றுகூட மூன்றாம் பக்கத்தில் தி.நகர் நடைபாதை கடைகள் குறித்து இன்று ஆய்வு என்று செய்தி போடுகிறது.
பார்ப்பனர்களும் தமிழர்கள் தான் என்று இன்றைக்குக்கூடப் பம்மாத்துப் பேசும் தமிழன்பர்கள், பார்ப்பனர்களின் பச்சையான தமிழ் - தமிழர் விரோதப் போக்கை இதன் மூலமாகவாவது புரிந்துகொள்ளட்டும்!

தந்தை பெரியார் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில், தந்தை பெரியார் அவர்களின் நாள் குறிப்பிலிருந்து ஒரு தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

ராஜேந்திர பவன், உடுப்பி பவன், டூரிஸ்ட் லாட்ஜ், வசந்தா விஹார், ராமச்சந்திர விலாஸ், ஷண்முகானந்த பவன், ராம விலாஸ், உட்லண்ட்ஸ், அம்பாள் பவன், சென்ட்ரல் லாட்ஜ், லக்ஷ்மி கப்பே, எவரெஸ்ட், போர்டிங் லாட்ஜிங், ஸ்ரீ கிருஷ்ணா பவன், கோதண்ட விலாஸ், சென்ட்ரல் கப்பே, ஸ்ரீ நிவாஸ் கப்பே, மாடர்ன் கப்பே, லஞ்சு ஹோம்
இதில் எது தமிழ்?
என்று தந்தை பெரியார் குறிப்பு எழுதி வைத்துள்ளார்.


நூற்றாண்டு விழா நாயகரான அறிஞர் அண்ணா அவர்களும் தமிழ் என்றால் பார்ப்பனர்களின் நடப்பு என்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழ ரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர் கள் தமிழிடத்திலே அன்பு கொள் வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத் தின்மீதுதான் (திராவிட நாடு, 2.11.1947) என்கிறார் அறிஞர் அண்ணா.

இதற்குமேலும் பார்ப்பனர் களைபற்றி புரிந்துகொள்ள என்ன இருக்கிறது?

----------- மயிலாடன் அவர்கள் 24-9-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: