Search This Blog

26.9.08

கருத்துக்குப் பதில் கல்லடியா?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11 ஆவது மாநில மாநாட்டுத் தொடக்க விழாவும், தந்தை பெரியார் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் 22.9.2008 மாலை சென்னையை அடுத்த போரூரில் நடைபெற்றது.

காவல் துறையினரின் அனுமதியைப் பெற்றுத்தான் நடந்தது. இந்த நிலையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குண்டர்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கற்களை வீசியும், நாற்காலிகளை உடைத்தும் பெண்கள் என்றும் பாராமல் தாக்கியும் கோரத்தாண்டவம் ஆடியிருக் கின்றனர்.

இதற்கு முன்பும்கூட இரண்டு ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கலை நிகழ்ச்சியிலும் இவ்வாறே இந்து முன்னணியினர் நடந்துகொண்டுள்ளனர்.

இதே போரூரில் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்திலும் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுண்டு. ஒருமுறை புத்தகச் சந்தையை அங்கு திராவிடர் கழகம் நடத்தியபோதும், இதே கூட்டம் காலித்தனத்தில் ஈடுபட்டது.

தமிழ்நாட்டில் மாற்றுக் கட்சியினர் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களை வன்முறைமூலம் தடுத்து நிறுத்தலாம் என்கிற அணுகுமுறையை இந்தக் கும்பல் கடைபிடிப்பதாகத் தெரிகிறது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற இரு பொதுக்கூட்டங்களின்போதும்கூட கூட்டத்தை நடத்தவிடாமல் கலாட்டா செய்துள்ளனர். அந்த நேரத்தில் எல்லாம் காவல்துறையினர் காலித்தனத்தில் ஈடுபடும் கூட்டத்தைத் தடுத்து நிறுத்தாமல், கூட்டம் நடத்துபவர்களிடம், கூட்டத்தை விரைவாக முடியுங்கள் என்கிற போக்கில் பேசியிருக்கின்றனர்.

இது ஒரு விரும்பத்தகாத போக்காகும். காவல்துறை அனுமதி பெற்று பிரச்சாரக் கூட்டங்களை நடத்தும்போது அதனைத் தடுத்திட யாருக்கும் உரிமை கிடையாது. வேண்டு மானால், அதற்கு மாற்றாக வேறு ஒரு நாளில் கூட்டம் போட்டு பதில் கூறலாம். அதனை விட்டுவிட்டு கூட்டத்தையே நடத்தக் கூடாது என்று அராஜகம் செய்தால், அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இதே முறையை இந்து முன்னணி வகையறாக்கள் கூட்டம் போட்டால், மற்றவர்கள் பின்பற்ற முடியாதா? அது என்ன முடியாத காரியமா?

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பொதுக்கூட்டம் போட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் என்கிற ஒருமுறை - திராவிடர் இயக்கத்தால் தொடங்கப்பட்டு, இப்பொழுது மற்ற மற்ற கட்சிகளும் அந்த முறையைக் கடைபிடித்து வருகின்றன. கருத்தினை கருத்தால் வெல்ல முடியாத பாசிசக் கும்பல், கருத்துக்குப் பதில் கல்லடி என்ற கேவலமான ஒரு கலாச்சாரத்தைத் திணிக்கிறது.

இந்தப் போக்கைத் தடுத்து நிறுத்தவேண்டிய அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்கள் சபாஷ் போட்டு தூண்டி விடுகிறார்கள். பொறுத்தது போதும் என்று இந்துக்கள் பொங்கி எழுந்துவிட்டனர் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக இருக்கக் கூடிய திரு. இல. கணேசன் அறிக்கை வெளியிடு கிறார்.

வட மாநிலங்களில் காலித்தனம் செய்து, வன்முறையில் ஈடுபட்டு மத வாரியாக மக்களைக் கூறுபடுத்தி தங்கள் அமைப்பு களை வளர்த்தெடுப்பது போல, தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்ற யுக்தியில் சங் பரிவார்க் கும்பல் செயல்படுவதாகத் தெரிகிறது.

இதனைத் தமிழ்நாடு நிச்சயம் அனுமதிக்காது - சங் பரிவார் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது
.

கட்சிகளுக்குக் கொள்கைகளைச் சொல்லிக் கொடுப்பது காவல்துறையினரின் வேலையல்ல. அவர்கள் பேச்சில் வன் முறை இருக்குமானால், அதன் அடிப்படையில் வழக்கினைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழக பா.ஜ.க.வின் துணைத் தலைவராக எச். ராஜா என்கிற ஆசாமியிருக்கிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூரில் நின்று கட்டிய தொகையைத் திரும்பப் பெறாத இந்த சூராதி சூரர் மேடைகளில் பேசும் முறை மிகமிக ஆபாசமானது - அருவருக்கத்தக்கது.

தமிழகத்தின் மதிக்கத்தக்க தலைவர்களை - சாக்கடை மொழியில் அர்ச்சிக்கிறார்; வன்முறையைத் தூண்டும் வகையில் பச்சையாகப் பேசுகிறார். அவர் பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக்கூட்டப் பேச்சும் கிரிமினல் வழக்குத் தொடரத்தக்கவையாகும். புழுத்த நாய் குறுக்கே போகாது என்பார்களே அந்த அளவுக்குத் தரமற்றது. இத்தகு உரைகளை அனுமதிக்கும் காவல்துறை கொள்கை ரீதியாகப் பொதுக்கூட்டம் நடத்துவோருக்கு நெருக்கடிகளை அழுத்தங்களைக் கொடுப்பது சரியல்ல.

வன்முறையைத் தூண்டுமாறு பேசும் சங் பரிவார்க் கும்பலைச் சேர்ந்தவர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை தேவை! தேவை!! என்று வலியுறுத்துகிறோம்.

--------------நன்றி: "விடுதலை"தலையங்கம் 26-9-2008

1 comments:

bala said...

கருப்பு சட்டை பொறிக்கி திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

எல்லாம் சரிதான்.மானமிகு அண்ட் கோ வில் குரைக்கும் கருப்பு சட்டை நாய்கள் தங்கள் ஒரிஜினல் சொறி பிடித்த வெறி நாய் குணத்தை ஏன் வெறி பிடித்த சொறி நாய் குணமாக மாற்றிக் கொண்டனர் என்பதை விளக்குவீர்களா?

பாலா