Search This Blog

29.9.08

தமிழ் நாட்டு மண் - தந்தை பெரியாரால், அவர்தம் தன்மான இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மண்

அனுமான்

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில் 24 அடி உயரமுள்ள அனுமான் சிலையை எந்தவித அனுமதியுமின்றி, இரவோடு இரவாக இந்துத்துவா வாதிகள் நிறுவியுள்ளனர்.

சட்ட விரோதமாக வைக்கப்பட்ட இந்த சிலையை அகற்ற முயன்றபோது, இந்து போர்வையைப் போர்த்திக் கொண்ட ஒரு கும்பல் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக சிலையை அகற்றும் பணி தடைப்பட்டு நிற்கிறதாம்.

அடாவடித்தனமும், சட்ட மீறலும் என்பது இந்தக் கூட்டத்திற்கு ஜீவிய சுபாவம் என்றுதான் கூறவேண்டும்.

தமிழ்நாட்டின் முக்கிய சாலைகளில் (National High Ways) எல்லாம் இத்தகு அனுமான் சிலைகளை இரவோடு இரவாக (திருட்டுத்தனமாக) அமைப்பதை ஒரு திட்டமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஒரு கூட்டம் என்பதை மாநில, மத்திய அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். அதேபோல, அரசு அலுவலக வளாகங்களிலும் இந்த நச்சு விதை ஊன்றப்பட்டு வருகிறது.

இது ஓர் ஆபத்தான போக்கு - குறிப்பிட்ட ஒரு பருவத்தில் விபரீதத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டு மண் - தந்தை பெரியாரால், அவர்தம் தன்மான இயக்கத்தால் பக்குவப்படுத்தப்பட்ட மண்; அமைதித்தென்றல் - நல்லிணக்க மணத்துடன் வீசிக்கொண்டு இருக்கிறது இங்கு.

இத்தகு சூழ்நிலையில் ஒரு மோதலை உருவாக்கவே இந்த அனுமான் சிலையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளனர்.

அனுமதியின்றி வைப்பது - அதனை அகற்றச் சென்றால் மத அடிப்படையில் பிரச்சினையை உருவாக்குவது - அதன்மூலம் குறிப்பிட்ட பகுதியில் இந்துக்களிடம் செல்வாக்கைத் தேடிக் கொள்வது என்கிற யுக்தியைக் கையாண்டு வருகிறார்கள்.

நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் சிலைகளை வைப்பது என்றால், அதற்கு ஆயிரம் ஆயிரம் நடைமுறைகள் (Formalities) இருக்கின்றன.

ஆனால், அனுமான் போன்ற சிலைகளை நிறுவிட எந்தவித நடைமுறையும் தேவையில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே சட்டங்களைக் கையில் எடுத்துக்கொண்டு - அடாவடித்தனத்திலே இறங்குகிறார்கள்.

இந்த நிலையிலேயே இந்தப்போக்கைத் தடுப்பது தான் புத்திசாலித்தனம்; முளையிலேயே கிள்ளாவிட்டால், மரமான நிலையில் கோடரியை எடுக்கவேண்டிய அவசியம் அல்லவா ஏற்படும்!

- மயிலாடன் அவர்கள் 29-9-2008 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

1 comments:

Thamizhan said...

இந்து என்ற மாயையில் தமிழர்களைப் பிரித்து வன்முறைக்கு வழி வகுத்துக் கடைசியில் ஒழிந்திருந்து சண்டையை வேடிக்கை பார்க்கும் நரிகளிடம் இன்னும் ஏமாறலாமா?
தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர இந்த அயோக்கியக் கும்பல் செய்யும் நல்ல காரியம் ஏதாவது இருக்கிறதா?
அவாள் வீட்டிலே நாமோ,நம் வீட்டிலே அவாளோ மனிதர்களாகப் பழகி சாப்பிட முடியுமா?