Search This Blog
11.9.08
இன்றைக்கு ‘ராமர் பாலம்’ பற்றி எழுந்துள்ள சர்க்சைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய விளக்கம்
எரியிட்டார் என்செய்தீர்?
(அன்றைக்கு காந்தியார் வெளியிட்ட கருத்துக்களை வைத்து அறிஞர் அண்ணா அவர்கள் 1946-ல் எழுதிய கட்டுரை இன்றைக்கு ‘ராமர் பாலம்’ பற்றி எழுந்துள்ள சர்க்சைக்கு அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய விளக்கம் இது.)
“இராமாயணம், புண்யகதை என்பதற்காகப் படிக்க வேண்டியதில்லை, அதிலே உள்ள கதை அழகு, காவியஇரசம், கலை அருமை ஆகியவற்றுக்காகப் படியுங்கள். இராமனைத் தெய்வமென்று எண்ணிக்கொண்டு, பூஜைநூலாக இராமாயணத்தைக் கொள்ளவேண்டியதில்லை. கலாபெட்டகமாகக் கொள்க” என்று நம்நாட்டுக் கலாவாணர்கள் கூறுகின்றனர் - வாதாடுகின்றனர் - பாடுபடுகின்றனர்.
“இராமாயணம்” நம்ப முடியாத கதை. அதிலே கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டவர்களில் குணங்கள், அர்த்தமற்றதாக உள்ளன. ஆரிய தர்மத்தைப் பரப்பவந்த நூல் அது. ஆரிய ஆதிக்கம் ஒழிய வேண்டுமானால், அந்த ஏடுகளைக் கண்டிக்கும் அறிகுறியாக, அதனைத் தீயிலிடவேண்டும் என்று நாம் கூறுகிறோம்.
“அட, பாவிகளே! இராமாயணம் புண்யகதை அல்லவா? அதனையா குறைகூறுவது! இராமனுடைய திருககல்யாண குணங்களைக் காட்டும அந்தக் கதையையா குறைகூறுகிறாய்? மகாபாபம் சம்பவிக்குமே!” என்று வைதீக அன்பர்கள் நம்மைக் கண்டிக்கின்றனர்.
காந்தியார், சென்னையில் “இராமாயணக் கதையைப் படித்தால், நமக்கு இராமனுடைய செயலைப்பற்றிப் பல சந்தேகங்கள் உண்டாகும். உதாரணமாகச் சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பலாமா என்பன போன்ற சந்தேகங்கள் வரும். ஆகையால், கதைகளை விட்டுவிட்டு இராமநாமத்தை மட்டும் பூஜிககவேண்டும். கதையை நீக்கிவிட்டு, இராமனை மட்டுமூ எடுததுக்கொள்ளவும்” என்று கூறினார்.
அதாவது, இராமாயணக் கதையில் கருத்துக்கு ஒவ்வாத, பகுத்தறிவுக்குப் பொருந்தாத பல விஷயங்கள் உள்ளன. ஆகையால், அந்தக் கதையைக் கவனிக்க வேண்டியதில்லை, என்று காந்தியார் கருதுகிறார்.
நாம், அத்தகைய நூலைக் கண்டிக்கிறோம் என்பதன் அறிகுறியாக அதனைத் துயிலிடுக என்கிறோம். காந்தியார், அந்தக் காரியத்தையே வேறு வகையில் செய்கிறார். நாம் அந்தக் கதையைக் கண்டிக்கிறோம், அவர் அந்தக் கதையைத் தள்ளிவிடச் சொல்கிறார்.
இதிலே இன்னொரு வேடிக்கை! கலாவாணர் சொல்கேட்டார், இராமாயணம் வேண்டும், இராமனைத் தெய்வமெக் கொள்ள வேண்டியதில்லை. காந்தியார் கூறுவது கேட்டால், இராமன் வேண்டும், இராமாயணம் வேண்டியதில்லை. கலாவாணர் இராமனைக் கைவிடுகிறார்கள். காநிதியார் இராமாயணம்யத்தைக் கைவிடுகிறார்! நாமோ, இராமாயணமும் வேண்டாம், இராம நாம பாராயணமும் வேண்டாம் என்கிறோம்.
இராமாயணத்தை இங்ஙனம் அலட்சியப் படுத்தி, அந்தக் கதையைப்படிக்க வேண்டியதில்லை. படித்தால் பல சந்தேகங்கள் பிறக்கும் என்று காந்தியார் கூறுகிறார், பண்டிதரும், பாவாணரும் கலாசசிகரும், காவிப்விரியவரும், காந்தியாரின் வார்த்தையை மறுக்கம் துணிவு பெறாது உள்ளனர்.
இதுகண்டு, “வீரன்”, காந்தியாரின் கருதது, கலாவாணர் சிலைமை, திராவிடரரின் தீர்ப்பு எனபனவற்றைச் செய்யுள் வடிவிலே தொகுத்தனுப்பினான். செய்யுள், எந்த வகையிற் சேருமோ நாமறிவோம். செய்யுள் அமைப்பைச் செப்பனிடக் கூடியவர்கள் செய்து கொள்ளட்டும், நாம் கருத்து விளங்கட்டும என்று கருதிக் கவிதையை வெளியிடுகிறோம்.
வேதமொழியினரின் பேதவழி அதனைத்
தீதெனவே இயம்பும் தென்னவர்கட்க்கு
காதளவேயாகும் குருத்தென்னும் கொள்கையினால்.
காந்தி, மகரிஷியாய்க் காணவே வந்துசேர்ந்து
கதை ஓதினார் மன்றுள் கண்ட பாதிமதியனரை நம்பி
காடுபுகுவான் இராமன், கர்ப்பிணியைக் கைவிடுவான்!
நாடு பிடித்திடுவான் நம்பியை நமனாக்கி!
வெம்பிய கனியினையும் விருந்தென்றே விளம்பிடுவான்
அரும்புமே பலஐயம், அக்கதையில் சிக்கல்பல.
ஆகையால் வால்மீகி, அருளும் நூலதனைத்
தாவியே படித்து வோதீர் இராமனிடம்,
ஆவி அணையான் இராமன், அவன் கதையோ நாம் வேண்டோம்
கூவி அழைத்திடுவோம் குளிர்நாமம்!
இம்முறையில் இறங்கிடுவீர் இராமன் அருள் பெறுவீர்
இன்னுமுள தெய்வங்கள் எல்லமம் சரிசமமே
பொன்னுலகு புகுவதற்குப் போடுவீர் தாளமதை
கன்னல் மொழிக்கீதம் இதுகேட்டு.
காந்தியார் உரைசெய்த சுவின்முறை இதுவாமே
காலமுழுதும் படித்துக கலையின் இரசம் குடித்த
கவிவாணர்களே! கேண்மின்!
எரி என்றோம் ஏங்கிநின்றீர்
எரியிட்டார், கரியிட்டார், என்செய்தீரே!”
கதைகூறக் கருத்தினிலே கறைஏறும்
கண்டறிந்த காந்தியார் குழறுவது அஃதன்றோ?
என்செய்வீர்? ஏந்தல் எதிர்மொழியும் கேட்டாரோ
என்னாகும் உம்கதைகள் இனியும்?
இராமாயண மதனைப் பாராயணமே செய்யும்
ஜோரான பண்டிதர்காள்! சிந்துங்கால் செந்நீர் தாமோ உங்கள் கண்ணீர்!
தொட்டாலும் துயர்நீக்கும்
மேல்பட்டாலும் பாவம்போக்கும்
கொட்டாவி விட்டேனும் கூறும் கதை கேட்பின்
பட்டாபிராமன் பாலிப்பான் அருள் என்றீர்!
மட்டமானதோ உங்கள் மதியும்
இராமனே போதும் அவன் அயணமும் வேண்டாம்.
ஐயமே பிறந்துநம்மை அலைக்ழிக்குமே அதனால்
செய்யவேண்டுவது ஜே! ஜே! என்றே கூவி
ஐயனை அழைத்திடலே அழகென்றால் அண்ணல்
பொய்யுமே யானதேஉம் போர்த்திறமும் ஆத்திரமும்
கையுமே போயினதே சிரமேல்!
தீயிடுதல் அன்றோ? அச்சொல் தித்திக்குதோ? நன்றோ?
வாயிடு தனலையும் உண்டோ? வழி உண்டோ? வகையும் உண்டோ?
காதிடுவதற் குதவாக் கதைஎன்றுமே யன்றோ
காந்தியார் கழறிநின்றார், காதுமே உண்டேகொண்டும்
கழலடி தொழுவோராகி விழலிடை நீருமானீர்
வியப்பிது அன்றோ! வேறும் உண்டோ?
இராமன் ஒருதேவனென்று ஏன்கொண்டு வாதிடுகிறீர்?
இரசித்திடு நல்கதைஎன்றே ஏற்றிடுவீர் நாட்டினரே!
பாட்டுமொழிச் சுவை அதிகம், பண்புமிகு கலைஉயர்வு
நாற்றமுள நறும்பூங்கா, நண்ணுவீர் இனிதே என்றீர்!
பூங்காவில் பாம்புண்டு புகவேண்டாமாம் ஆங்கதனுள்
பாங்காக அவன் நாமம் பூஜித்திடலே பண்பென்றார்
ஏங்காணும்! எவர் உறையின் வழிநிற்பீர்?
எவருரையில் இதம் காண்பர்?
ஏதுக்கோ இந்த ஏறுமாறும்!
தூங்காத தமிழரசிலர் தூண்டியே விட்டதனால்
தொடர்ந்தே காணும், தூயபகுத் தறிவொளியும்.
துயரமே தெரிந்துவிட, துதிபாடகரும்
தூவி யெதென்றார் பதரை ஒருவாவியும் இல்லா வயலில்!
சாவியே குமென்று, சாற்று!!
குறிப்பு:
நம்பியை நமனாக்கி = விபீஷணனை இராவணனுக்கு விரோதியாக்கி
வெம்பியகனி = அகலிகை
விருந்தாம் என்றார் = கௌதமர் (அகலிகையை) ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறினார்.
பாதிமதியினர் = அரைகுறை அறிவுள்ளவர்கள்.
(17.02.1946 - திராவிடநாடு)
----------------நன்றி:http://www.arignaranna.info
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment