Search This Blog

5.9.08

கடவுளைபற்றி சிங்காரவேலர்

கடவுள் என்பது ஒரு பழைமையான சொல். இந்தச் சொல்லுக்குரிய பொருளை யாரும் பார்த்த தில்லை. இந்தச் சொல்லால் குறிக் கப்படும் பொருளை மெய், வாய், கண், மூக்கு, செவிகள் மூலமாகவாவது அல்லது எந்தவிதக் கருவிகளாலா வது ஆராய்ந்து அறிந்தவர் உலகில் ஒருவரும் இல்லை.

ஒரு காலத்தில் மனிதன் பல்லாயிரம் வருஷங்களாகப் பேசத் தெரியாதவனாக இருந்தான். அந்தக் காலத்தில் கடவுள் என்ற சொல் உலகில் வழங்காதிருந்தது. இதைப் பற்றி யாரும் பேசுவாரில்லை; யாரும் சொல்லுவாரில்லை. இது லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முந்தி யிருக்கலாம். ஆனால் உலகில் உயிர் முளைத்து நூறு கோடி ஆண்டுகளி ருக்கும். இந்தக் காலங்களில் வாழ்ந்து மடிந்த உயிர்கள் பல கோடி. இவ்வுயிர்களுக்கு இச்சொல்லைச் சொல்லத் தெரிந்திருக்காது. இந்தக் காலங்களில் எந்த உயிரும் இச் சொல்லைச் சொல்லவும் இல்லை. மனிதன் மிருகத்திலிருந்து விடுபட்ட பின் பேச ஆரம்பித்தான். இவன் பேசத் தெரிந்து கொண்ட பிறகும் வெகுகாலம் இச்சொல்லை உச்சரிக் காதிருந்தான். மனித மொழி அபிவி ருத்தியடைந்த பிறகே கடவுள் என்ற சொல்லைக் கற்பனை செய்யத் தொடங்கினான்.


------------- "கடவுளும் மனிதனும்" நூலில்... மா.சிங்காரவேலர் எழுதியது.

0 comments: