Search This Blog
8.9.08
"மானமுள்ள சுயமரியாதைக்காரன் நான்" என்பதால் இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது
தக்கார் ஒருவர் பெயரால்
(வீரமணி) எனக்கு வழங்கப்பட்ட விருது இது!
சமூகநீதிப் போராட்டம் - இன்னும் முற்றுப்பெறவில்லை
"சமூகநீதிக்கான வீரமணி விருதினை"ப் பெற்ற தமிழக முதலமைச்சர்
மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் எழுச்சியுரை
சென்னை, செப். 8- தக்கார் ஒருவரின் பெயரால் எனக்கு இந்த சமூகநீதி விருது அளிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.
சென்னை - பெரியார் திடலில் நேற்று (7.9.2008) மாலை சிறப் பாக நடைபெற்ற ப.க. மாநாட்டில், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் அமைப்பின் சார்பில் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு "சமூகநீதிக்கான வீரமணி விருது" அளிக்கப்பட்டது.
விழாவில், முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்றியதாவது:-
திராவிடர் கழக முன்னோடிகள், கடல் போல் திரண்டிருந்த கறுஞ்சட்டை வீரர்கள், அமைச்சர் பெருமக்கள், கழகத்தவர் முன்னிலையில் ஏற்புரையாற்றிய முதல்வர் கலைஞர் அவர்கள், "இது `அவார்டு (Award) அல்ல; `ஸ்வார்ட்(sword)” என்று பெருமை படக் குறிப்பிட்டார்.
"திராவிடர் கழகத் தலைவர் - எனது ஆருயிர் இளவல் வீரமணி அவர்கள், பெரும் படையை தயாரித்து வைத்திருக்கிறார். எனவே பெரியாரின் கொள்கைகள் என்றைக்கும் சாயாது - சரியாது! என முதல்வர் கலைஞர் அவர்கள் உணர்ச்சி மேலிடக் குறிப்பிட்டார்.
மேலும், முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பெரியார் பன்னாட்டு மையத்தின் சார்பில் தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய பெயரால் சமூக நீதி விருது வழங்க நான் அழைக்கப் பெற்று, உங்களுடைய அன்பு கலந்த வாழ்த்துக் களோடு, பாராட்டுக்களோடு, பெருமிதமான கைதட்டல்களோடு அந்த நிகழ்ச்சி ஓரளவு நிறைவுற்று, என்னுடைய நன்றி உரையோடு நிறைவுறவிருக்கின்றது. இதிலே கலந்து கொண்டு, என்னை வாழ்த்தியுள்ள அனைவருக்கும், பாராட்டி மகிழ்ந்த அனைவருக்கும், என்னுடைய இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
நம்முடைய இனிய இளவல் வீரமணி அவர்கள் உரையாற்றும் போது, இது விருது அல்ல, போர்வாள் என்று சொன்னார்கள். ஆம், ஆங்கிலச் சொல்லை சற்று மாற்றிச் சொன்னால் - இது அவார்டு (Award) அல்ல - ஸ்வார்ட் (Sword) (பலத்த கைதட்டல்).
தக்கார் ஒருவருடைய பெயரால்
எனக்கு வழங்கப்பட்ட விருது!
இந்த வாளை நான் பெரியாரிடத்திலே பெற்று - பல்லாண்டு காலம் - பகுத்தறிவுவாதியாக, சுயமரியாதைக்காரனாக, மான முள்ள தமிழனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அறிந்திருக்கின்ற காரணத்தால்தான் என்னை அழைத்து பொருத்தமான விருது இது என்று தேர்ந் தெடுத்து வீரமணியின் பெயரால் உள்ள விருதை எனக்கு வழங்கி யிருக்கிறீர்கள்.
சிலர் சொல்லக்கூடும், இவர் வயதென்ன, இவருடைய பதவி என்ன, இவருடைய செல்வாக்கு என்ன, இவர் போய் வீரமணியின் பெயரால் ஒரு விருதை பெறுவதா என்று எப்போதுமே இயற்கையாக சிண்டு முடிகின்றவர்கள் இதைச் சாக்காக வைத்துப் பேசக் கூடும், எழுதக் கூடும். நான் தக்கார் ஒருவருடைய கையால்தான் - ஒருவருடைய பெயரால் தான் இந்த விருதைப் பெற்றிருக்கிறேன் என்பதை மிகப் பெருமையோடு எண்ணிப் பார்த்து விருது வழங்கிய பெரியார் பன்னாட்டு மய்யத்திற்கு என்னுடைய அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சுயமரியாதைக்காரன் என்பதற்காக, சமூக நீதியிலே அக்கறை உள்ளவன் என்பதற்காக - சமூக நீதி தழைக்க வேண்டும், நிலைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகின்ற பட்டாளத் திலே ஒரு சிப்பாய் என்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக் கிறது என்பதை நான் மறந்து விடவில்லை. இந்த விருதை எனக்கு வழங்கிய நம்முடைய பெரியார் பன்னாட்டு மையத்தின் நண்பர்கள் கடல் கடந்து அமெரிக்க நாட்டிலே வாழ்கின்ற நண்பர்கள் என்றாலும்கூட, எங்கிருந்தாலும் நம்மையெல்லாம் இணைக்கக் கூடிய கொள்கை உணர்வு, இன உணர்வு - இன் றைக்கு அந்தப் பிணைப்பின் காரணமாக பெரியார் திடலிலே ஒன்றுசேர்ந்து உங்களுடைய அன்பான வாழ்த்துக்களை எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்.
வீரமணியின் பெயரால் ஒரு விருது என்றதும் அது என்ன விருது, சமூக நீதிக்கான விருது என்றால் பல பேருக்குப் புரிகிறது. சமூக நீதிக்காகப் போராட்டம் இன்று நேற்றல்ல, ஏறத்தாழ 1920-ஆம் ஆண்டிலேயிருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, சமூக நீதிக்கான போராட்டம். அந்தப் போராட்டத்தை மேலும் வேகப்படுத்தி பல வெற்றிகளைக் குவித்த பெருமை தந்தை பெரியார் அவர்களுக்கும், அவர் வழி நின்று போராடிய பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் - அவர்களையெல்லாம் தலைவர்களாக, தளபதிகளாக ஏற்றுக் கொண்டு களத்திலே நின்ற இன்றளவும் நின்று கொண்டிருக்கின்ற எங்களுக்கும் உண்டு என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.
எனக்கு இந்த விருதை வழங்கும் நேரத்தில் இளவலும் இந்தத் தமிழகத்தினுடைய மக்களின்- தமிழ் மக்களின்- தமிழர்களின் தலைவருமான வீரமணி அவர்கள் சொன்னார்கள் - நான் ஒரே வரியில் என்னைப் பற்றி ஒரு நிருபருக்கு பேட்டி கொடுத்ததைச் சொன்னார்கள். உங்களைப்பற்றி ஒரே வரியில் சொல்லுங்கள் என்று கேட்ட பத்திரிகை செய்தியாளரிடம் நான் சொன்ன பதில் - நான் மானம் உள்ள சுயமரியாதைக்காரன் என்று சொன்னதை நினைவூட்டினார்கள். ஆம், இன்று நேற்றல்ல, என்னுடைய பாலப் பருவத்திலேயே அந்த உணர்வு எப்படியோ என்னுடைய உடலில், உள்ளத்தில், ரத்தச் சுழலில் ஒட்டிக் கொண்டு அது என்னை வளர்த்திருக்கின்றது.
குக்கிராமத்தில் பிறந்த எனக்கு இந்த விருது
கிட்ட காரணம் - பெரியார் தந்த அறிவு!
நான் பிறந்த ஊர் - ஒரு சாதாரண குக்கிராமம். இன்றைக்கும் அது ஒரு பெரிய கிராமமாக வளர எம்பி எம்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இன்னும் முடியவில்லை. நகரத்தோடு கை கோர்க்கலாமா, பக்கத்திலே இருக்கின்ற பட்டினங்களோடு சேரலாமா என்றெல்லாம் அந்தச் சின்ன ஊர் இன்றைக்கும் தன் ஆசையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது. அப்படிப் பட்ட குக்கிராமத்திலே நான் பிறந்தேன் என்றால், எவ்வளவு மூட நம்பிக்கை சூழ்ந்த ஒரு பகுதியிலே, ஒரு வட்டாரத்திலே நான் பிறந்திருப்பேன் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அங்கிருந்து கிளம்பி வந்து இன்றைக்கு பெரியார் மண்டபத்தில், அவரால் உருவாக்கப்பட்ட கருப்புச் சட்டைக் கண்மணிகளின் மத்தியில் இன்றைக்கு நான் அமர்ந்திருக்கிறேன் என்றால், இதை நான் புராணீகர்களுடைய மொழியிலே சொல்ல வேண்டுமேயானால் - நான் கொடுத்து வைத்த பாக்கியம், பேறு என்று சொல்ல மாட்டேன், பெரியார் தந்த அறிவு, அதன் விளைவு - இதுதான் இந்நிலைக்குக் காரணம் என்பதை (கைதட்டல்) அந்த நிலைக்காகக் கிடைத்த விலைதான் இந்த விருது என்பதையும் நான் சுட்டிக்காட்டாவிட்டால் நன்றி மறந்தவனாக ஆகிவிடு வேன்.
நானே வளர்ந்தேன் - இவைகளையெல்லாம் நானே கற்றுக் கொண்டேன் - நானே இவைகளையெல்லாம் சிந்தித்தேன் - நானே புதிய ஞானோதயம் பெற்றேன் - எனவே இவைகளை யெல்லாம் சொல்லுகிறேன் என்று சொல்வது சுலபம். அதுவும் முதலமைச்சர் என்ற பெரிய பதவியிலே இருப்பவர்களுக்கு அது பெரிய பதவியோ, சிறிய பதவியோ உங்கள் எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன் - அந்தப் பதவியிலே இருப்பவர்களுக்கு அது சுலபம். இவைகளையெல்லாம் நானேதான் தயாரித்தேன், நானேதான் சிந்தித்தேன், நானேதான் இவைகளை வெளியிடுகிறேன் என்று சொல்வது சுலபம். அப்படிச் சொல்லிவிடலாம். ஆனால் எதிர் காலத்திலே வரலாறு எழுதுகின்றவர்கள் உண்மைகளைத்தான் எழுதுவார்கள். அந்த உண்மைகளை எழுதும்போது, அதிலே ஒரு பொய்யனாக நான் இருக்க விரும்பவில்லை. அதிலேயும் நான் உண்மையானவனாகத்தான் இருக்க விரும்புகிறேன்.
பெரியாரால் தயாரிக்கப்பட்டவன்! அண்ணாவால் சீர் செய்யப்பட்டவன்!
நான் பெரியாரால் தயாரிக்கப்பட்டவன் (கைதட்டல்). நான் தட்டித் தட்டி சீர் செய்யப்பட்டவன் - அறிஞர் அண்ணா அவர்களால். (கைதட்டல்) நான் வலுப்பெற்றது - என்னுடைய கழகக் கண்மணிகளால், உங்களைப் போன்ற கருப்புச் சட்டை வீரர்களால் (கைதட்டல்) நம்முடைய இளவல் வீரமணியைப் போன்ற அன்புக்குரிய சகோதரர்களால் நான் இன்றைக்கு இந்த அளவிற்கு உலவிக் கொண்டிருக்கிறேன்.
இன்று நீங்கள் தருகின்ற விருதைப் பெறுகின்ற அளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்றால் நான் எப்படிப்பட்ட சூழ்நிலை யிலே, எப்படிப்பட்ட குடும்பத்திலே, எப்படிப் பட்ட உற்றார் உற வினர்களுக்கு மத்தியிலே வளர்ந்தேன் என்பதை நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொண்டால்தான் - என்னைப் போல இப்போது வளர்ந்து கொண்டிருப்பவர்கள் நாமும் எதிர்காலத்தில் ஒரு கருணாநிதியாக ஆகலாம், நாமும் பெரியார் விருது பெறலாம், நாமும் வீரமணி விருது பெறலாம் என்ற நம்பிக்கையை நீங்கள் பெற முடியும். அவைகளை உணர்ந்தால்தான் அது முடியும்; இல்லாவிட்டால் முடியாது.
நான் பிறந்த பகுதி - நான் வாழ்ந்த பகுதி - யாரோடு பழகினேன் என்றெல்லாம் என்னுடைய சுய வரலாற்றிலே எழுதியிருக்கிறேன். இருந்தாலும் ஒன்றிரண்டை உங்களுக்கு இப்போது ஞாபகப் படுத்துவது என்னுடைய கடமை என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு புரோகிதர்களை வெறுக்கிறோம் என்றால் - அவர்கள்மீது நமக்கு இயற்கையாக ஏற்பட்ட காழ்ப்போ, கசப்போ, வெறுப்போ, விருப்பமின்மையோ காரணம் அல்ல. என்ன காரணம்? அதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். என்னுடைய தந்தை முத்துவேலர் - அவர் தன்னுடைய தந்தையை அவர் பிறந்தபோதே இழந்து விட்டவர். ஏறத்தாழ நான் குழந்தையாக இருந்தபோது, திருக்குவளையிலே அவருடைய தந்தையாருக்கு ஆண்டுதோறும் தெவசம் கொடுப்பார். தெவசம் என்றால் உங்களுக்குத் தெரியும். தெரியாமல் இருந்தால் நல்லது. (கைதட்டல்) இறந்துபோன பெரியவர்கள், பெற்றவர்கள், நம்முடைய குடும்பத்தார் மேல்உலகத்திலே ஆவிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அதிகப் பசி எடுக்கும்! அப்படி பசி எடுக்கும்போதெல்லாம் அவர்களுக்கு திதி, தெவசம் கொடுத்து அதை புரோகிதர் மூலமாக அனுப்பி வைத்தால், அதை அவர்கள் சாப்பிட்டு பசியாறு வார்கள். அங்கிருந்து நமக்கு வாழ்த்துக் கூறுவார்கள். நம்முடைய குடும்பம் வாழும் என்பதற்காக தெவசம் ஆண்டுதோறும் கொடுப்பது வழக்கம்.
இதை நான்பள்ளிப் பிள்ளையாக திருக்குவளை ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே கேலி செய்து எதிர்த்தவன். அப்போதே பெரியாருடைய பேச்சைக் கேட்கின்ற வாய்ப்பு பெற்றவன். அதனால் அதை எதிர்த்து கேலி செய்து, கிண்டல் செய்து என் தந்தையிடம்கூட வாதிடக்கூடியவன். அவர் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று என்னைக் கண்டிப்பார். சில நேரத்தில் அடிக்கவும் வருவார்; அடிக்கவும் செய்வார். இது என்னுடைய இளமைப் பருவத்தில் நடந்தது.
எனது தந்தையும் மந்திரங்களை புறந்தள்ள
காரணமாக அமைந்த நிகழ்வு!
ஒருநாள் இங்கேதான் ஒரு திருப்புமுனை. என் வீட்டில் விடியற்காலை அய்ந்தரை மணி அளவில் புரோகிதருடைய மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்போது இடையி டையே என்னுடைய தந்தையின் குரல் எழுகிறது. மந்திரம் ஒலிக்கும்போது தந்தையின் குரல் குறுக்கிட்டு என்னய்யா, விளக்கேற்றவில்லையா என்று கேட்கிறார். தெவசம் கொடுக்கிற இடத்தில் விளக்கேற்றி வைத்துவிட்டுத்தான் மந்திரத்தை ஆரம் பித்திருக்க வேண்டும். மறையவர் அன்றைக்கு மறந்துவிட்டார் போலும். ஆகவே பரவாயில்லை என்று சொல்லி, இப்போது ஏற்றி விட்டால் போகிறது என்று விளக்கேற்றுகிறார். அப்படி சொல்லுகிறவரின் வாய் குழறுகிறது. என் தந்தை கேட்கிறார், என்ன வாய் குழறுகிறது, வெற்றிலை பாக்கா? என்று கேட்கிறார். ஆமாம், ஆமாம் என்கிறார் அவர். அந்த ஆமாமாம் என்று சொல்லும்போதே குதப்பிக் கொண்டு சொல்கிறார். ``என்னய்யா வாயெல்லாம் வெற்றிலை பாக்கைப் போட்டுக் கொண்டு, வேத மந்திரம் வேற கேடா, என் பையன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கிறது, எந்திரியா (கைதட்டல்) என்னய்யா ஆச்சாரம் இதிலே இருக்கு? இதெல்லாம் ஆச்சாரமா? இதெல்லாம் ஆண்டவனுக்குச் செய்கிற துரோகம் அய்யா, நான் உன்னுடைய மந்திரத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன், எழுந்திரு! என்று சொன்னார். அப்படிப்பட்ட நிகழ்ச்சி நடந்தது. அது முடிந்த வுடன், அவரிடத்திலே என் தந்தை சொன்னார், ``அய்யரே, இன் னைக்கு உன்னைப் போகச் சொல்கிறேன், இன்றோடு சரி, எங்கள் வீட்டில் இனிமேல் திதி, தெவசம் எதுவும் கிடையாது! பையன் சொன்னது சரியாகி விட்டது என்கிறார். ஆக ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தின் அடிப்படை யாக நான் இருந்திருக்கிறேன். நான் சாட்சியாக இருந்திருக் கிறேன் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்.
திருக்குவளையிலிருந்து திருவாரூர் வருகிறோம். திருவாரூரில் நம்முடைய வீரமணியாருக்குத் தெரியும் - டி.என். ராமன், டி.என். லெட்சப்பா, ரெங்கராஜன், தண்டவாளம், சிங்கராயர், முத்து கிருஷ்ணன், யாகூப் என்றெல்லாம் இந்த இயக்கத்தின் தோழர் களை - எங்களைப் போன்றவர்களையெல்லாம் வளர்ப்பதற்கு ஊக்கப்படுத்துவதற்காக உழைத்தவர்களை அவருக்கும் தெரியும் - எனக்கும் அவர்கள் எல்லாம் நண்பர்கள். அவர்கள் வாழ்ந்த அந்த நேரத்தில் திருவாரூரிலே ஒரு பயங்கரமான சடங்கு நடைபெறும். அதற்குப் பெயர் ``ஓங்காரம் என்பதாகும். ஓங்காரம் என்றால், இரவு 12 மணிக்கு நடுநிசியில் ஒரு பத்து பேர், வீதிகளில் ``ஓம் என்ற கூச்சலோடு வருவார்கள். இந்த பத்து பேர், அய்ந்து அய்ந்தாகப் பிரிந்து - ஒரு அய்ந்து பேர் ஒவ்வொருவருடைய கையையும் பிடித்துக் கொண்டிருப்பார்கள். ``ஓம் என்று ஆரம்பிக்கும்போது ஒருவருக்கு மூச்சு விட இடைவெளி தேவைப்படும்போது, இன்னொருவர் கையைக் கிள்ளுவார். அவர் உடனே அடுத்த கையைக் கிள்ளு வார், இப்படி தொடர்ச்சியாக ``ஓம் என்பது ஒலித்துக் கொண்டே இருக்கும். இரவு 12 மணிக்கு நான்கு வீதிகளிலும் திருவாரூரில் இந்த ஓங்காரம் நடைபெறும். ஆண்டில் மூன்று நாட்கள் இது நடைபெறும். இந்த ஓங்காரத்தை யாரும் குறுக்கிடக் கூடாது, குறுக்கிட்டு தடுத்தாலோ, குறுக்கே போனாலோ ரத்தம் கக்கி செத்து விடுவார்கள் என்று ஒரு அய்தீகம், ஒரு பயமுறுத்தல், ஒரு எச்சரிக்கை, ஒரு மூட நம்பிக்கை. இது பரவலாக இருந்த காலகட்டத்தில் எங்களையெல்லாம் இயக்கத்திலே வளர்த்துவிட்ட - நான் முதலிலே குறிப்பிட்ட நண்பர்கள் - என்ன செய்தார்கள் என்றால் - ஒரு நாள் - இன் றைக்கு ஓங்காரம் வரும்போது நாங்கள் மறிக்கப் போகிறோம் என்று துண்டு அறிக்கை வெளியிட்டு ஓங்காரத்தை மறைப்பதற்கு ஆதரவு தாரீர் என்று திருவாரூர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். வழக்கம்போல் ஓங்காரம் இரவு 12 மணிக்குப் புறப்பட்டது. இவர்கள் குறுக்கே வந்து மறித்தார்கள். வந்த ஓங் காரம் சற்று நேரம் தன்னுடைய ஆங்காரத்தைக் காட்டி விட்டு வந்த வேகத்தி லேயே கலைந்து ஓடிவிட்டது. அதற்குப் பிறகு திரு வாரூரில் ஓங்காரமே கிடையாது. அந்தச் சடங்கே நின்றுவிட்டது.
இரண்டு நிகழ்ச்சிகளை உங்களுக்குச் சொன்னேன். இன்னொரு நிகழ்ச்சி - என்னுடைய வீட்டிலேயே நடைபெற்றது - நான் நெஞ்சுக்கு நீதியிலே கூட எழுதியிருக்கிறேன். திருவாரூரில் துர்க்கை அம்மன் கோவில் என்று ஒன்று உண்டு. எங்களுடைய உறவின ரும், முரசொலியில் இருக்கிறாரே சொர்ணம், அவருடைய தந்தையாருமான கிருஷ்ணமூர்த்தி பிள்ளை நல்ல இசைவாணர், வித்வான். ஒவ்வொரு நாளும் துர்க்கை அம்மன் கோவிலுக்குப் போனால் இரவு 12 மணி வரையிலே அங்கேயிருந்து பூஜைகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவார். அவ்வளவு தீவிரமான பக்த சிரோன்மணி. அவர்தான் சொன்னார் - ஒரு பெரிய மந்திரவாதி வந்திருக்கிறான், கேட்டதற்கெல்லாம் பதில் அளிக்கிறான், எதிர்காலத்தைப் பற்றியெல்லாம் சொல்லுகிறான், உன்னுடைய எதிர்காலத்தைப் பற்றி அவரிடம் கேட்கலாம், என்று சொன்னார். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொன்னேன். அவர் வீட்டிலே இருந்து, அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். நீ நம்ப மாட்டாய், நாளைக்கு வருகிறான் பார் என்றார். வரட்டும் பார்க் கிறேன் என்றேன். மறுநாள் காலையில் அந்த மந்திரவாதியும், அவரோடு ஒரு நடுத்தரப் பெண்மணியும் (அவருடைய மனைவி) வந்தார்கள். வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலே சொல்லியும் கேளாமல், அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு இடத் திலே அமர்ந்தார்கள். என்னுடைய உறவினர், சொர்ணத்தின் தந்தையார் கேள்வி கேட்க ஆரம்பித்தார். எனக்கு எத்தனை வீடு இந்தத் தெருவிலே இருக்கிறது - சொல்லுங்கள் என்று அவர் கேட் டார். அதற்கிடையே கூட வந்த அந்த அம்மையார் அங்கிருந்து ஜாடையாக அவருக்கு தந்தி அனுப்பிக் கொண்டிருக்கிறார். அந்த அம்மாள் என்னைப் பார்த்து, நான் அவருடைய தம்பி அல்ல, மகன் என்று கருதிக் கொண்டு என்னிடத்திலே கேள்விகளை ஜாடையாகக் கேட்கிறார். எத்தனை வீடு இந்தத் தெருவிலே என்று கேட்ட போது, நான் அய்ந்து விரல்களைக் காட்டுகிறேன். இதை அந்த அம்மையார் தன் கணவருக்கு, ஜோசியருக்கு அங்கி ருந்து ஜாடை மூலம் தெரிவிக்கிறார். அதைப் பார்த்து விட்டு ஜோசியர் இந்தத் தெருவிலே உங்களுக்கு அய்ந்து வீடுகள் இருக்கின்றன என்கிறார்.
உடனே என்னுடைய உறவினர் - அண்ணனின் முகம் சுருங்கி விடுகிறது, தவறாகப் போய் விட்டதே என்று. உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்? என்று கேட்கிறார். அதற்கும் உடனே ஜோசியர் தன் மனைவியைப் பார்க்கிறார். மனைவி அங்கிருந்து ஒரேயொரு விரலைக் காட்டி ஒரேயொரு பிள்ளை என்கிறார். ஜோசியர் உடனே ஒரேயொரு பிள்ளை என்கிறார். அதுவும் தவறு. அய்யா - எழுந்திரு என்று சொர்ணம் அவர்களின் தந்தை அங்கிருந்து அவரை விரட்டி விடுகிறார். உடனே ஜோசியருக்கு கோபம் வந்து விடுகிறது. தன்னுடைய மனைவி ஜாடை காட்டியதைத் தானே சொன்னோம். எப்படி தவறாகி விட்டது என்று. தவறாகச் சொல்வதற்கு, அந்தக் குறும்பை செய்தது நான் தான் என்பதையும் அந்த அம்மையார் ஜோசியருக்கு விளக்கி விட்டார்கள். உடனே ஜோசியர் என்னைப் பார்த்து அந்தப் பையனைக் கூப்பிடுங்கள் என்றார். வந்தேன். இந்தப் பையன் ஆறு மாதத்தில் செத்து விடுவான் (கைதட்டல்) என்று எனக்கு ஆருடம் கணித்து விட்டு அவர் போய் விட்டார். சொர்ணத்தின் தந்தைக்கு வந்தது கோபம். நீ ஜோசியத்தை நம்பக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருந்தாய்; நான் நம்பிக் கொண்டே இருந்தேன். இன்றைக்குத் தான் ஜோசியம் எவ்வளவு பொய், புளுகு என்பது தெரிந்தது என்றார். எனவே என்னுடைய வாழ்க்கையில் சுயமரியாதை உணர்வுகள் ஏற்படக் கூடிய அளவிற்கு எனக்கு மாத்திரமல்ல, என்னால் - என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் ஏற்படக் கூடிய அளவிற்கு பல சம்பவங்கள் - தந்தை பெரியார் என்ன எடுத்துச் சொன்னாரோ, அதைத் தழுவிய சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன என்பதற்குத்தான் இவைகளையெல்லாம் நான் எடுத்துக்காட்டினேனே அல்லாமல் வேறல்ல.
எனவே ஒருவன் சுயமரியாதைக்காரனாக இருப்பதற்கு என்ன முக்கியமான காரணம்? நான் இன்றைக்கு பெரிய கல்லூரி வரை சென்று படிக்கவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. வரையிலே தான் படித்தேன். அதிலும் தேறவில்லை. (சிரிப்பு) இதற்காக நாமும் தேறாமல் இருந்தால், முதலமைச்சர் ஆகலாம் என்று யாரும் தப்புக் கணக்கு போடவேண்டாம். (கைதட்டல்) இன்றைக்கு உங் களால் போற்றப்படுகிற தலைவனாக இருக்கிறேன், உங்களால் அன்பு பாராட்டப்படுகிற தலைவனாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த நிலைமைக்கு நான் வருவதற்குக் காரணம் நம்முடைய கருத்துக்கள், பகுத்தறிவு எண்ணங் கள் பெரியாரால் போதிக்கப்பட்ட அந்தச் சுயமரியாதைச் சுடரொளி. அதுதான் இன்றைக்கு என்னை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கின்றது. (கைதட்டல்)
நான் ஒரு இசைக் குடும்பத்திலே பிறந்தவன். என் தந்தை பெரிய நாதஸ்வர வித்வான். சொல்ல வேண்டுமேயானால் திருவாவடு துறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அடிக்கடி திருக்குவளைக்கு வந்து என் தந்தையிடம் சில ராகங்களைக் கற்றுச் செல்வார். அந்த அளவிற்கு அவர் பெரிய இசை மேதை. அவர் என்னை பக்கத்து வீட்டிலே இருந்த முத்துக் குமரன் என்கிற தீவிர காங்கிரஸ் பக்தரிடம், என்னை நாதஸ்வரம் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்தார். நான் ஒரு நாள் சென்றேன். மறுநாள் என் தந்தையிடம் வந்து நான் அங்கே போக மாட்டேன் என்று சொன்னேன். ஏன் என்று கேட்டார். அங்கே யார் யாரோ பெரியவர்கள் எல்லாம் வருகிறார்கள், அய்யர் வருகிறார்; பண்ணை முதலியார் வரு கிறார்; அவர்கள் எல்லாம் வந்தவுடன் குருநாதர், மேலே போட் டிருக்கின்ற துண்டையெடுத்து இடுப்பிலே கட்டிக் கொள்கிறார். அது அவமானமாக இருக்கிறது. அது சுயமரியாதைக்கே அழகல்ல. சுயமரியாதையை விட்டு விட்டு எனக்கு இந்த சங்கீதம் வேண்டாம் என்று சொன்னேன். அதற்குப் பிறகு தான் என்னை அங்கிருந்து 7 மைல் தொலைவிலே உள்ள திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையத்திற்கு அழைத்து வந்து, அங்கிருந்து பத்து மைல் தொலைவிலே உள்ள திருவாரூர் பள்ளியிலே என்னை சேர்த்து - அங்கேயும் இருந்த ஆசிரியர் - நீ எதுவரையிலே படித்திருக்கிறாய், எந்த வகுப்பிலே சேர விரும்புகிறாய் என்று கேட்ட போது, நான் எட்டாவது வகுப்பில் சேர விரும்புகிறேன் என்று சொன்னபோது, எட்டாம் வகுப்புக்கு பரிட்சை எழுதி அதிலேயும் தோற்று - ஏழாவது வகுப்புக்கு பரிட்சை எழுதி, அதிலேயும் வெற்றி பெறாமல் - ஆறாவது வகுப்புக்கு பரிட்சை எழுதி அதிலேயும் இடம் கிடைக்காமல் போய், பிறகு என்னை அய்ந்தாம் வகுப்பிலே தான் சேர்த்துக் கொண்டார்கள். அதுவும் எப்படி என்றால், நீங்கள் இதிலும் சேர்க்காவிட்டால், எதிரிலே உள்ள குளத்தில் விழுந்து மாண்டு விடுவேன் என்று பயமுறுத்தி, அதற்குப் பிறகு நான் அந்தப் பள்ளியிலே சேர்ந்தேன். இப்போது உங்கள் முன்னால் இருக்கிறேன்.
மானமுள்ள சுயமரியாதைக்காரன் நான்!
அதனாலேயே எனக்கு இந்த விருது!
இதிலே தான் நான் சொன்ன சுயமரியாதை உணர்வு ஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. அன்றைக்கு பரவாயில்லை துண்டை தோளிலே போட்டால் என்ன? இடுப்பிலே கட்டினால் என்ன? என்ன சுயமரியாதை வேண்டியிருக்கிறது என்று நான் எண்ணியிருந்தால், இன்றைக்கு நானும் உங்கள் முன்னால் துண்டை இடுப்பிலே கட்டிக் கொண்டு இங்கே ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பேன். அன்றைக்கு நான் மறுத்த காரணத்தினால் தான் - என்னுடைய இளவல் வீரமணி அவர்கள் சொன்னார்களே, மானம் உள்ள சுயமரியாதைக்காரன் என்று சொன்னவர் என்று - அந்த மானம் இருந்த காரணத்தால் தான் உங்களோடு இன்றைக்கு உட்காரவும் - எனக்கு வீரமணி விருதை வழங்கவுமான ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே இந்த விருதை பெறுவது என்பது சாதாரணமான விஷயமல்ல! அதுவும் எந்த இடத்தில் - திராவிடர் கழகத்தின் தலைமையகத்தில், திராவிடர் கழகத்தை தந்தை பெரியாருக்குக் கட்டிக் காத்து வருகின்ற என்னுடைய ஆருயிர் இளவல் வீரமணி கரத்தால் பெறுகின்ற அந்த விருது - நான் முதலிலே சொன்னதைப் போல இது அவார்ட் அல்ல ஸ்வார்ட் என்று கூறி உங்களிடமிருந்து நன்றி கூறி விடைபெற்றுக் கொள்கிறேன்.
- இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
திராவிட முண்டம் அரை யிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
பட்டங்கள் வாங்க நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலையும்,இந்த முண்டத்துக்கு,ஏன்
ஆயிரம் பட்டம் கட்டப்பட்ட மஞ்ச துண்டு மாமன்னன் என்ற தூய திராவிட பட்டத்தை மானமிகு முண்டம் வழங்கி ஜல்லி அடிக்கவில்லை என்பதை விளக்குவீர்களா?
பாலா
அறிவில்லாத பார்ப்பனனின் பய உளறல் அப்பட்டமாக வெளிப்படுகிறது.
பார்ப்பான் திருந்திவிட்டான் என்று சொல்லுபவர்களின் பார்வைக்கு இந்த அயோக்கியப் பார்ப்பான் பாலாவின் பின்னூட்டங்களை சமர்பிக்கிறேன்.
//பார்வைக்கு இந்த அயோக்கியப் பார்ப்பான் பாலாவின் பின்னூட்டங்களை சமர்பிக்கிறேன்//
திராவிட முண்டம் அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,
திராவிட கருப்பு சட்டை வெறி பிடித்த சொறிநாய்களெல்லாம் இப்போதெல்லாம் குரைப்பதில்லை என்று சொல்பவர்களுக்கு,உங்களுடைய கட் அண்ட் பேஸ்ட் பதிவுகளே போதுமான சாட்சியங்களாகும்,அவர்கள் இன்னும் திருந்தவில்லை,மனம் வருந்தவில்லை என்பதற்கு.முண்டம்,முண்டம்.
பாலா
இந்தப்பார்ப்பான் என்ன சொல்லியும் திருந்தப் போவதில்லை. மூளை உள்ளவன், மானமுள்ளவனிடம் போராடலாம். கழிசடைப் பார்ப்பானிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்.
கருப்பு சட்டை பொறிக்கி, திராவிட முண்டம், அரை டிக்க்ட் தமிழ் ஓவியா அய்யா,
தங்கள் குருவான மானமிகு முண்டத்திடம், மஞ்சத் துண்டு அய்யாவுக்கு "ஆயிரம் பட்டம் கட்டப்பட்ட மஞ்ச துண்டு மாமன்னன்" என்ற தூய திராவிட பட்டத்தை கொடுத்து கெளரவப்படுத்தி ஜல்லி அடிக்கலாம் என்ற சூப்பர் யோசனையை சொல்லிவிட்டீர்களா?மானமிகு முண்டம் மகிழ்ந்து போய் உங்களுக்கு ப்ரொமோஷன் கொடுத்திருக்குமே?
பாலா
Post a Comment