Search This Blog
8.8.08
கார்த்திகை தீபம்
சித்திரபுத்திரன் கேள்வி
பாலர் பாலுக்கழ, பட்டினியாற் பலர் மடிய,
எத்திசையோரும் இகழும்படி
வெண்ணெய்யும் நெய்யும் கொண்டு
கல்லிலும் நெருப்பிலும் கொட்டும்
கயமை தானே கார்த்திகை தீபம்?
நமது மதமும், தெய்வமும், உற்சவமும் முட்டாள்தனமான தென்றும், இவை நமது செல்வத்தைப் பாழாக்குகிறதென்றும், மக்களுக்கு யாதொரு பலனையுமளிக்கின்றதில்லை என்றும் சொல்லப்பட்டு வருவதோடு, நேர்முக உதாரணம் திருவண்ணாமலை, திருச்செங்கோடு முதலிய ஊர்களிலும் கார்த்திகை தீப உற்சவம் நடத்துவதும் கூம்பு என்கிற சொக்கப்பனை கொளுத் துவதுமாம். இந்த உற்சவத்தின் போது குடம்குடமாய், டின் டின்னாய், நெய்யையும் வெண்ணெய்யையும் கொண்டுபோய் நெருப்பில் கொட்டுவது முட்டாள்தனமும் ஆகும்.
இம்மாதிரி விழாக்களால் வீண் செலவு கொஞ்சமா? இதனால் செல்வமெல்லாம் பாழாவது போதாதா? பக்தர்களும், பார்ப்பனப் புரோகிதர்களும், தேசியப் பத்திரிகைகளும் என்ன சமாதானம் சொல்லப் போகின்றன?
--------------- 'சித்திரபுத்திரன்'என்ற புனைபெயரில் தந்தை பெரியார் எழுதியது - 'விடுதலை' 2.12.1962
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இந்த மாதிரி கவிதை எழுதுவதை த்தவிர்த்து பெரியார் எத்தனை
பாலகர்களுக்குப் பால் வார்த்தார்?
நெய்யயையும் பாலையும் வார்ப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு
கொடுக்காமல் வார்த்தில்லை. ஏன்? என் பெற்றோர்கள்
எனக்குக் கொடுக்காமல் கோவிலுக்கோ, மற்றவர்களுக்கோ கொடுத்ததில்லை.
நல்ல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனித்து விட்டுத்தான்
கோவிலுக்குக் கொடுப்பார்கள்.
ஒரு குழந்தை பாலில்லாமல் அழுதால் அது அதன் பெற்றோர்களின்
கொடுமை.
பிழைக்கத்தெரிந்த பார்ப்பனரல்லாத (பங்காரு அடிகளார், குன்றக்குடி அடிகளார்,
இன்னும் பலர்) கடவுள் பெயரைச் சொல்லிப் பிழைத்தனர். பெரியார் கடவுளைத் திட்டிப்
பிழைத்தார். என்ன வித்தியாசம்?
//பெரியார் கடவுளைத் திட்டிப்
பிழைத்தார். என்ன வித்தியாசம்//
ரங்குடு அய்யா,
ஆமாங்கய்யா.பெரிய வித்தியாசமில்லை தான்.தமிழ் ஓவியா கூட தாடிக்கார சகுனி மாமாவுக்கு ஜல்லி அடித்து ஓசி பிரியாணியால் வயிறு வளர்த்து பிழைக்கறாங்க.போகட்டும்.தண்ட சோத்து தடியனுங்க.இந்த மூஞ்சிகளுக்கு வேற உருப்படியா வேலை எதுவும் செய்து பிழைக்க முடியாதே.என்ன செய்வது.
பாலா
பார்ப்பனர்களின் பகல் கொள்ளையை சுட்டிக்காட்டினால் பெரியார் கடவுளை திட்டிப் பிழைத்தாராம் உளறுகிறது பார்ப்பனியம்.
பிச்சை எடுத்துப் பிழைக்கும் பார்ப்பனர்களுக்கு சிண்டு முடியும் வேலையைத் தவிர எதுவும் தெரியாது.
தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்.
Post a Comment