Search This Blog

17.8.08

பார்ப்பனர்களின் பகல் கொள்ளை பாரீர்

பார்ப்பான் பண்ணையம் கேட்பார் இல்லையா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற தங்க டாலர் மோசடிபற்றி ஏடுகள் விலாவாரியாக செய்திகளை வெளியிட்டன. கோயில் அறங்காவலர் குழுத் தலைவ ராகவும், தலைக்கோயில் அதிகாரி எனப் பல பேர் இருந்தாலும்கூட, ஏழுமலையான் கோயில் பொக்கிஷப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்தவர் சேஷாத்திரி என்னும் பார்ப்பனர் ஆவார். கடந்த 10 ஆண்டுகாலமாக இவர் வைத்ததுதான் சட்டம் என்னும் நிலை இருந்து வந்தது.

கோயிலில் குவியும் நகைகள், தங்கங்கள் இவற்றை உருக்கி, ஏழுமலையான் உருவம் பொறித்த தங்க டாலர் விற்கப்படுவது உண்டு. 2006 ஆம் ஆண்டு 5 கிராம் எடை கொண்ட 300 தங்க டாலர் உரிய ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ஏழுமலையான் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி ரமணகுமார் பணிக்கப்பட்டார். விற்பனைப் பிரிவில் பணியாற்றிய வெங்கடாசலபதி என்பவர் தற்காலிகப் பணி நீக்கமும் செய்யப்பட்டார்.

விசாரணை அதிகாரி மேற்கொண்ட நடவடிக்கையால் அதிர்ச்சியூட்டக் கூடிய மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2001 ஆம் ஆண்டிலிருந்தே இந்த மோசடி திட்டமிட்ட வகையில் நடந்திருக்கிறது. இதற்கு முழு உடந்தையாக இருந்தவர் சேஷாத்திரி என்கிற குட்டு உடைபட்டு விட்டது.

இந்த மோசடிக்கு எல்லாம் கருவான சேஷாத்திரி பார்ப்பனர், பணி ஓய்வுக்குப் பிறகும்கூட இரண்டாண்டு பதவி நீட்டிப்பும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்.


சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதெல்லாம் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று விசாரணை அதிகாரி ரமணகுமார் - அறிக்கையும் தாக்கல் செய்துவிட்டார்.
இவ்வளவுக்கும் பிறகு நேற்று வெளிவந்த செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருக்கிறது. பதவி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் மீண்டும் உத்தியோகத்தில் சேர்ந்துவிட்டார்களாம்!
கோயில் பணியாளர்கள் போராட்டத்தையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற வழக்கு நம் நாட்டில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அது நூற்றுக்கு நூறு துல்லியமாக சரியானது என்பதற்கு இந்த நிகழ்வு நம் கண் முன்னே நடந்துவிட்டதே!

விசாரணை அதிகாரி கொடுத்த தகவல் குற்றம் உடையது என்று சொல்லப் போகிறார்களா? தங்க டாலர் மோசடி என்பதே நடக்கவில்லை - அது அபாண்டமாகக் கற்பிக்கப் பட்டது என்று விளக்கம் அளிக்கப் போகிறார்களா?

அந்தச் செய்தி எப்படி வெளியில் வந்தது? அதனை வெளி யில் கொண்டு வந்தவர்கள் யார் என்கிற உண்மையாவது தெரிவிப்பார்களா?

திருப்பதி கோயில் பணியாளர்களின் போராட்டம் - வற்புறுத்தல் காரணமாக, பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர் என்றால், ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காகவே குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டு விட்டனர் என்று முடிவுக்கு வரலாமா?
ஒரு நிறுவனத்தில் அளவுக்கு அதிகமாக பார்ப்பனர்கள் அலுவலர்களாக நியமிக்கப்பட்டால், இதுபோன்ற கூட்டுக் கொள்ளைகள் நடைபெறுவதும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முயலும்போது அந்தக் கூட்டுக் கொள்ளையர்கள் கைகோர்த்துக் கொண்டு நிர்ப்பந்தம் கொடுப்பதுமான காரியம்தான் நடைபெறும் என்பது இதன்மூலம் விளங்க வில்லையா?
ஆந்திர மாநில அரசு இந்தக் கோயில்களுக்குச் சம்பந்தம் இல்லாத அதிகாரிகளைக் கொண்டு முழு விசாரணை நடத்தி, ஊழல் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


நியாயமாக, நாணயமாக பக்தர்களேகூட இதில் தலையிட்டு, நீதி விசாரணைக்கு வற்புறுத்தவேண்டும். பக்தர்கள் கொடுத்த காணிக்கை இப்படி ஒரு நரிக்கூட்டத்தால் ஏப்பமிடப் படுகிறது என்றால், இது எவ்வளவு பெரிய மோசடியும் துரோகமும் ஆகும்.
குத்துக்கல்லாக அங்கே அடித்து வைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் இந்த அநியாயங்களையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறான்! தன் முன்னே நடக்கும் குற்றங்களைக்கூட தடுக்க முடியாதவனா மக்களுக்கு அருள்பாலிக்கப் போகிறான்?


பக்தர்களே - சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

-----------"விடுதலை" தலையங்கம் -16-8-2008

0 comments: