
தேவாரப் பாடல்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே
(திருவலிவலம் கோயில் கொண்ட இறைவனைப்பற்றி திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் இது. பிடி - பெண் யானை உருவுமை கொள - உருவத்தை பார்வதியார் கொள்ள, கரியது வடிகொடு - சிவன் ஆண் யானை உரு கொள்ள)
சிவன் ஆண் யானை உரு கொண்டும் பார்வதி பெண் யானை உருகொண்டும் கலவி செய்ததால் பிறந்த கணபதி என்பது இதன் பொருள்.
கடுகளவு பகுத்தறிவும் ஒழுக்கமும் உள்ளவர்கள் இதனை ஏற்பார்களா?
---------- நன்றி: "விடுதலை" 29-8-2008
0 comments:
Post a Comment