Search This Blog

29.8.08

இந்தியாவின் பொருளாதாரத் துறையைச் சீர்படுத்துவதற்கு ......




முதலாவது,

வருணாசிரம முறை ஒழிய வேண்டும்;

இரண்டாவது,

மதசம்பந்தமான எண்ணங்கள் அகற்றப்பட வேண்டும்;

மூன்றாவது

கோவில், குளம், சடங்கு, சாத்தான் ‘சனி விலக்கு' ஆகிய எண்ணங்கள் அழிக்கப்பட வேண்டும். பிறகு அரசன், ஜமீன்தாரன் முதலிய தத்துவங்கள் அழிக்கப்பட்டாக வேண்டும்.

பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால், அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல், மக்களுடைய மதியீனத்தையும் பகுத்தறிவற்றத் தன்மையையும் ஆதரவாய் உபயோகித்துக் கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடி விடுவதாலும், பொருளாதாரத் துறையை சரிப்படுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதும், அறிவுடைமையானதோ, காரியத்தில் பயன் கொடுக்கக் கூடியதோ என்பதாகச் சொல்லிவிட முடியாது.

--------------- ‘குடி அரசு' இதழில் 13.9.1931 அன்று தந்தைபெரியார் அவர்கள் எழுதிய தலையங்கத்திலிருந்து