Search This Blog

11.8.08

கோயில் நுழைவுப் போராட்டங்கள் ஒரு பார்வை

சில கோயில் நுழைவுப் போராட்டங்கள்



சுசீந்திரம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக் கூடாது என்ற தடையை எதிர்த்துக் கிளர்ச்சிகளில் பெரியார் தலைமையில் சு.ம. இயக்கமும் கலந்து கொண்டது (குடிஅரசு 31.1.1926, 14.2.1926 6.7.1930)

1921-இல் மதுரை மீனாட்சி கோயிலில் போராட்டம். கல்லடித் தாக்குதல். 300 வழக்குகள் தாக்கல்.

திருச்சி தாயுமானவன் கோயிலுக்குத் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச் சென்ற ஜே.என். இராமநாதன் தடியால் தாக்கப்பட்டு படிகளில் உருட்டி விடப்பட்டார்.

திருவண்ணாமலைக் கோயிலில் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக் கொண்டு போன ஜே.எஸ். கண்ணப்பர் கோயிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டப்பட்டார் (குடிஅரசு 6.5.1928)

மயிலாடுதுறை கோயிலில் கி.ஆ.பெ. விசுவநாதம் 1000 பேர்களுடன் நுழைந்தார். (1927).
12.8.1928-இல் திருவானைக் கோயிலில் 25.6.1928-இல் திருச்சி மலைக்கோயிலில் தாழ்த்தப்பட் டோருடன் நுழைவுப் போர்.

ஈரோட்டில் கோயிலுக்குள் நுழைந்த சா. குருசாமி உள்பட தோழர்கள் கோயிலுக்குள் வைத்துப் பூட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது (குடிஅரசு 21.4.1929)

மதுரை `குள்ளநரி வைத்திய நாதய்யர் மதுரை கோயிலில் நுழைவுப் போராட்டம் நடத்தியது 1939-இல் தான் (`குடிஅரசு 16.7.1939).

0 comments: