Search This Blog

11.8.08

கிருஷ்ண ஜெயந்தியாம்...

கோகுலாஷ்டமி என்றும் ஜென்மாஷ்டமி என்றும் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கூறி கண்ணன் எனும் கடவுளின் பிறப்பு நாளைக் கொண்டாடுகிறார்கள். பிறப்பு இறப்பு இல்லாதது கடவுள் என்று கூறிக் கொண்டே கடவுளுக்குப் பிறந்த நாளும் இறந்த நாளும் கொண்டாடும் வேடிக்கை இந்து மதத்தில் மட்டுமே உண்டு.

கிருஷ்ணன் என்றால் கருப்பன். நீலமேக சியாமள வண்ணம் கொண்டவன் என்பார்கள். சியாமளம் என்றாலும் கருப்புதான். ஆனாலும் இந்து மதத்தவர்கள், நீலச் சாயத்தைப் பூசிக் கடவுள் பொம்மைகளைச் செய்து வைத்துள்ளார்கள். இவனைக் கடவுளாகக் கருதிக் கும்பிடலாமா என்பதற்கு இவனது கல்யாண குணங்களைக் காட்டும் கீழ்வரும் நிகழ்ச்சியை பாகவதத்தில் இருந்தே படியுங்கள்:

"முன்போலவே கோபகன்னியா ஸ்திரீகள் யாவரும் ஸ்ரீ கிருஷ்ணகுண கீர்த்தனங்களைச் செய்துக் கொண்டு நதி தீர சமீபத்திற்கு வந்து பரிசுத்தமான ஏகாந்த பிரதேசத்தில் தங்கள் விலையுயர்ந்த வஸ்திரங்களைக் களைந்து அடையாளமாக வைத்து நிர்ப்பயர்களாய் அம்மகா நதியிலிறங்கி ஸ்ரீ ஹரியோஹரியென்று ஸ்ரீபகவன்னாமங்களை தியானித்துக் கொண்டு ஸ்நானஞ்செய்து அந்த ஜலமத்தியில் சரஸாநந்தத்துடன் ஸ்ரீ கிருஷ்ணபகவா னுடைய லீலாகுண வைபவங்களைப்பாடி அந்த ஜலத்தை வாரிவாரி யொரு வர்க்கொருவர் ஜலவசந்தங்களாடி அடைதற்கரிய பகவத் குணாதிசயங்களை யனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் சர்வ லோகரக்ஷகரான ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகள் தீர்த்தமாடுகின்ற வைபவங்களை அறிந்து தாம் வெகு தூரத்திலிருந்து ஏதோ ஒரு கார்யார்த்தமாய் வருகின்றவரைப் போலத் தன்னுடன்கூட வந்தவர்களை கண் ஜாடை காட்டி ஒரு பிரதேசத்தில் சந்தடி செய்யாமலிருக்கச் செய்து, தாம் ஒருத்தராகப் புறப்பட்டு சந்தடி செய்யாமல் அங்கங்கு ஒளித்து மெதுவாய் மறைந்து வந்து தாமே களைந்து வைத்தவரைப்போல எல்லா வஸ்திரங்களையும் கிரகித்து கொண்டு உடனே கனைத்து மதயானையைப் போலக் கம்பீரமாக நடந்துவிட புருஷனைப் போல அந்த வஸ்திரங்களையெல்லாம் கைகளில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு தமது லீலைக்கனுகுணமாய் ஒத்த பருவங்களையுடைய இந்த கோப கன்யாகுமரிகளைப் பார்த்து ஏளனமாகிய வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு அந்நதிக் கரையில் தழைத்து புஷ்பித்து விருத்தியடைந்திருக்கின்ற ஒரு கடம்ப விருக்ஷத்தின்மீது தாவி ஏறி, அதன்மீது இவ்வஸ்திரங்களை வைத்துத் தாம் அவ்விருக்ஷகத்தின்மேல் நின்று அதன் பூர்வகர்ம பாபத்தை நீக்கிப் பரிசுத்தஞ்செய்து மோக்ஷத்திற்குக் காரணமாகும்படி கிருபை செய்தார், அத்தருணத்தில் அந்தச் சுந்தரவதிகள் கழுத்தளவு ஜலத்திலிருந்து ஸ்ரீ பகவானுடன் சுகுமாரமாக வசனிக்கலாயினர்:

ஹே! எமதுயிர்க்குயிரான ஸ்ரீ முத்துகிருஷ்ண பகவானே! நீரிந்த நந்த விரஜத்தில் அவதரித்து எங்கள் மனதை யபகரித்ததுமின்றி எங்களுடைய மர்மாவயவமான தனங்களையும் அபகரிக்கின்றது தர்மமோ? ஈதென்ன ஆச்சரியம். நாங்கள் களைந்து வைத்த விழுப்பு வஸ்திரங்களை ஸ்பரிசித்து அவற்றைச் சுமந்து போகக் கூடுமோ? உமது கிருபையினால் எங்களை யடிமைகொண்டு எங்கள் இஷ்டங்களைத் தீர்க்கும்படியான அம்மான் மகனாகிய மைத்துனனாகவேயிருக்கின்றீர். இப்போது எங்களை மன்னித்து அவைகளை கிருபையோடுக் கொடுத்து எங்கள் மானதனங்களை நிலை நிறுத்தி ரக்ஷிக்கக் கடவீர் என்று பிரார்த்தித்தார்கள்.
ஸ்ரீ பகவானானவர் புன்னகையுடன் அந்தக் கன்னியா ஸ்திரீகளைப் பார்த்துக் கம்பீரமாக சொல்லுகின்றார்:

வாருங்கள் ஹே பெண்களே! நீங்களெல்லாரும் வெகு காலமா யொன்றாகச் சேர்ந்து ஒரே மனதுடைய வர்களாய் உங்கள் முன்னோர்களுக்குத் தெரியாமல் மனதிலொன்றும் வாக்கிலொன்றுமாய் விரதங்களை யநுஷ்டிக்கின்றீர்கள். உங்களைப்போல விரத மனுஷ்டப்பவர்கள் எந்த லோகத்திலுங்கிடையார்கள். உங்களுடைய மோசகரமான சித்த விர்த்தியைக் கொண்டு என்னைத் தூறு செய்வது என்ன சாதுர்யமோ? ஆம். நீங்கள் நன்றாய்த் தெரிந்தவர்களே? தயவு செய்து ஜலத்தை விட்டு வெளியில் வந்து உங்கள் வஸ்திரங்களை வாங்கிக் கொள்ளுங்களென்றார்."

---------------நன்றி: "விடுதலை"

0 comments: