Search This Blog

7.8.08

உனது உயிர் லேசானதல்ல! என்பார் மறைமலையடிகள்




எனக்கு 79 ஆண்டு ஆகிறது. பலபேர் தங்களைப் பத்திரமாகக் காப்பாற்றிக் கொள்ளுகிறார்கள். தமிழறிஞர் மறைமலையடிகள் எனக்கு அடிக்கடி அப்பா! உனது உயிர் லேசானதல்ல; காப்பாற்றிக் கொள் என்பார். நூறு ஆண்டு வாழ்வதெப்படி என்றுகூட புத்தகம் எழுதினார். போகிற இடமெல்லாம் வெகு ஜாக்கிரதையாக நடந்து கொள்வார். அவர்கூடச் செத்துப் போய்விட்டார். நான் அப்படியில்லை; ஏதோ கண்டதைத் தின்கிறேன். நான் இருப்பதால் என்ன இலாபம்? ஏதோ நான் சொல்வது சரி என்று உங்களுக்குப் பட்டு, என்னால் ஏதாவது காரியம் நடக்கும் என்றால் இருப்பதில் இலாபமுண்டு; நான் சொல்வது உங்களுக்குக் கசப்பாக இருக்கிறது என்றால் நான் 100 ஆண்டு வாழ்ந்துதான் என்ன பிரயோசனம்?

காந்தி இத்தனை பாதாம் பருப்பு என்று கணக்குப் போட்டு சாப்பிட்டார். 120 ஆண்டு இருப்பேன் என்றார். பார்ப்பனன் நினைத்த மாத்திரத்தில் சுட்டுக் கொன்று விட்டான்! அதுபோல என் நிலை ஆனால்தான் என்ன கண்டோம்? எத்தனை ஆபத்து வருகிறது! அதையெல்லாம் மீறி இன்னும் எத்தனை நாளைக்கு இருப்பேனோ யார் கண்டார்கள்? உடம்பைப் பொறுத்தவரையில் நன்றாகயிருப்பதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள். மக்கள் அன்பைப் பார்க்கும் போது கொஞ்சகாலம் இருக்கலாம் என்ற உற்சாகம் இருக்கிறது.

----------------- 29.9.1957-இல் சேலம் எடப்பாடியில் தந்தை பெரியார் சொற்பொழிவு, (விடுதலை, 7.10.1957

0 comments: