Search This Blog
17.8.08
சேது சமுத்திரத் திட்டம் ஜெயலலிதாவின் அந்தர் பல்டி
2001-ஆம் ஆண்டு அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது என்ன?
பக்கம் 83-ல் உள்ளதைப் படிக்கின்றேன். இந்திய தீபகற் பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது.
இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத் திட்டம். இத்திட்டத்தின்படி ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன் னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் (இப்பொழுது அதைத்தான் ராமர் பாலம் என்று சொல்லுகின்றார்கள்) கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம். 100 ஆண்டு காலத் திட்டம்
இத்திட்டம் காலம் காலமாக ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு வருகிறதே தவிர, சரியாக, உருப்படியாக உருவாகவில்லை.
ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசத் தொடங்கி, நாடு விடுதலை பெற்றபின் சற்று அதிகமாகப் பேசப்பட்டு, பல்வேறு நிபுணர் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டு பின் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
அண்ணா, எம்.ஜி.ஆருக்குத் துரோகம்
இந்தத் திட்டத்திற்கு ஒரு உந்துதலை 1981-ல் ஆட்சியில் இருந்த பொழுது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசு தான் கொடுத்தது என்று தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டி ருக்கிறது. சரி அப்படியே இருக்கட்டும்.
சரி - எம்.ஜி.ஆரே கொடுத்திருக்கட்டும். இந்த அம்மையார் ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்குத் துரோகம் பண்ணுகிறார். அண்ணாவுக்குத் துரோகம் பண்ணுகிறார். மக்களுக்குத் துரோகம் பண்ணுகிறார் என்று தானே பொருள். நேற்றைய பேட்டியில் சேது சமுத்திரத் திட்டமே கூடாது என்றல்லவா அந்த அம்மையார் சொல்லுகின்றார். திட்டமே கூடாது என்பது இலங்கைக்காரன் குரல் அல்லவா?
(14.8.2008 சென்னை தேனாம்பேட்டை பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையிலிருந்து)
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment