Search This Blog

23.8.08

கமலஹாசன் ஆத்திகரா?, நாத்திகரா?


நாத்திகம் - ஆத்திகம்! - கமல் பதில்


கமலஹாசன் ஆத்திகரா?, நாத்திகரா? இந்தக் கேள் விக்கு அவரே பல்வேறு சந் தர்ப்பங்களில் பதில் அளித் திருக்கிறார்.

கமலஹாசன் நற்பணி மன்ற விழா ஒன்றில், அவர் பேசியதாவது:

நான் எட்டாம் வகுப்பு வரைதான் படித்தேன். அப் போதைய மன நிலையில், இனி அங்கு (பள்ளிக்கூடத் தில்) இருந்து தெரிந்து கொள்வதற்கு ஒன்றுமில்லை என்று நினைத்தேன் - வெளியேறிவிட்டேன்.

எனக்கிருந்த தாகத்துக்கு, அப்போது தண்ணீராக இருந்தது தந்தை பெரியாரின் பேச்சுக்கள்தான்.

13 வயதில் பூணூலை அறுத்துப் போட்டுவிட்டு அவருடைய பேச்சில் ஈடு பாடு கொண்டு அலைந் தேன். என் குடும்பத்தில் பலர் என்னை எச்சரித்தார்கள். ஆயிரம் தான் இருந்தாலும், அந்த சுயமரியாதை இயக் கத்தினரை நம்பாதே. கடை சியில், பிராமணப் பையன் என்று உன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என் றார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அதற்குக் காரணம் என் அப்பா தான்.

நான் பூணூலைக் கழற்றி எறிந்தபோதே, என்னை நாலு சாத்து சாத்தி, போடுடா, பூணூலை! என்று அதட்டியிருந்தால், நான் ஒரு வேளை பூணூ லைப் போட்டிருப்பேன். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்து சிரித்தார். நானும் என் குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக் கொண்ட போது, எல்லோரும் இப் படித்தான் சொன்னார்கள்! என்று எனக்கு ஆறுதலாகப் பேசினார்.

கோவிலில் நடந்த சம்பவம் ஒரு சமயம், கோவில் ஒன்றில் படப்பிடிப்பில் கமல் கலந்துகொண்டார்.

மதியம், சாப்பாட்டு இடைவேளை - எல்லோரும் கோவிலுக்குள் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ஆனால், கமல் கோவிலுக்கு வெளியே அமர்ந்து சாப்பிட்டார். இதுகுறித்து கமல் கூறிய தாவது: என்னை கோவிலுக் குள் சாப்பிட அனுமதிக்க வில்லை. காரணம் நான் சாப்பிட்டது - அசைவ உணவு! அதனால் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்து சாப்பிட்டேன்.

சாப்பிட்டு முடித்தபிறகு, என்னை கோவிலுக்குள் அனுமதித்தார்கள். அப் போது அசைவம் என் வயிற்றுக்குள் இருந்தது! ஆனாலும் என்னை கோவிலுக்குள் அனுமதித்தார்கள்! பேட்டி

ஆத்திக - நாத்திகப் பிரச் சினைபற்றி, சில வருடங் களுக்குமுன், ஒரு செய்தி யாளர்களுக்கு கமல் பேட்டி அளித்தார்.

கேள்வி: உங்களுக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாதா?

கமல்: எங்காவது நான் அப்படி சொல்லி இருக்கி றேனா? அப்படி ஏதாவது வந்திருந்தால், அது என் வாய்மொழி இல்லை. நான் சொல்வது எல்லாம், கடவுளைப்பற்றி நினைக்க எனக்கு நேரம் இல்லை; என்னைப்பற்றி நினைக்கத் தான் எனக்கு நேரம் இருக்கிறது என்பதுதான்.

என்னைப் பொறுத்த வரை, எது தேவை - எது தேவை இல்லை என்ற முடி வுக்கு நான் வந்துவிட்டேன். என் வாழ்க்கையைப்பற்றி முடிவு எடுக்க வேண்டியது நான் தான். நீங்கள் என்னைப் பற்றி முடிவு எடுக்க முடி யாது. உங்கள் வாழ்க்கையில் கடவுள் இருந்தாக வேண்டும் என்று நான் சொல்ல முடி யாது. அதுபோல, என்னு டைய வாழ்க்கையில் கடவுள் இருந்தாக வேண்டும் என்று நீங்கள் சொல்ல முடியாது.

நான் என்ன சொல் கிறேன் என்றால், மின்சாரம் என்பது மாபெரும் சக்தி. அதைவிட மிக அதிகமான சக்தி கொண்டதாக கடவுள் இருக்கலாம்.. இருக்கட்டும்...

கேள்வி: மிகுந்த சக்தி படைத்த மின்சார கம்பத்தை நாம் கும்பிடுவதில்லை. அத னால் கடவுளையும் கும்பிட வேண்டியதில்லை என்கிறீர் கள். அப்படித்தானே?

பதில்: கும்பிட வேண்டிய அவசியம் இல்லை என்கி றேன். நீங்கள் கும்பிட்டால் அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. சரஸ்வதி பூஜை அன்று, நீங்கள் படத்துக்கு பொட்டு வைத்தால், அதை நான் தடுக்க மாட்டேன். அவ்வளவுதான்.

கேள்வி: உங்களை மீறி, நீங்கள் கடவுளை நினைத்தது இல்லையா?

பதில்: ஓ.. நினைத்திருக் கிறேன், என் ஏழு வயசுலே. இல்லாட்டி எங்கம்மா அடிப் பாங்க!

கேள்வி: மதத்தில் ஏதாவது புரட்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: புரட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்து மதத்தைப் பொறுத்த வரை ஏற்கனவே புரட்சிகள் நடந்து விட்டன. அதனால், இனிமேல் புதுக் குழப்பத்தை உண்டாக்க அவசியம் இல்லை இவ்வாறு கமல் குறிப்பிட்டார்.

------------- "தினத்தந்தி" 14.8.2008

5 comments:

priyamudanprabu said...

i am the first
உங்கள் பதிவுகள் என் மின்னஞ்சல் அனுப்ப முடியுமா?
priyamudan_prabu@yahoo.com.sg


எனது வலப்பூ
http://priyamudan-prabu.blogspot.com/

தமிழ் ஓவியா said...

அனுப்ப முயற்சி செய்கிறேன் தோழர்

முரளிகண்ணன் said...

http://www.radionetherlands.nl/currentaffairs/region/asiapacific/080821-indian-film

அமுதன் said...

ஒருவர் ஆத்திகராக இருப்பதும், நாத்திகராக இருப்பதும் அவருடைய தனிப்பட்ட விஷயம். அதை விவாவிப்பது சரியில்லை.

Unknown said...

Kamal aathigaraha irruka aasaipadugiriar. Adhey samayam nathigaragavum irukavum aasaipadugirar.

Idharku peyar enna theriyuma?

Kutti chuvar meedu utkarndhu kondu andha pakkam thavalama illai indha pakkam thavalama endru yosikum oru poonai. Adhu pol ulladhu avarudaya pechum pazhavazhakangalum.