Search This Blog

4.8.08

வர்ணாசிரமத்தைப் பிரச்சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கணும்!


சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்!

அப்ப அதுக்கு என்ன கொள்கை? சுயமரியாதை இயக்கம் - அது என்ன? மனிதனுடைய வாழ்வு இழிவாப் போனது எந்தக் காரணத்தினால், கடவுளால் ஏற்பட் டது. எந்தக் கடவுளால்? அந்தக் கடவுளை ஒழிக்கணும். மதத்தினால் ஏற்பட்டது; அதனால் மதத்தை ஒழி! காங்கிரசினால் ஏற்பட்டது; அதனால் காங்கிரசை ஒழி! காந்தியினாலே; காந்தியை ஒழி! பார்ப்பானாலே பார்ப்பானை ஒழி!

இந்த அய்ந்தையும் ஒழிக்கிறதுதான் சுயமரியாதைச் இயக்கத்தின் கொள்கை. சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை - கடவுள், மதம், காங்கிரசு, காந்தி, பார்ப்பான் இவங்களை ஒழிக்கிறது. இவங்கள்ளாம் சுயமரியாதை இயக்கத்துக்குக் கேடான கொள்கைப் பிரச்சாரம் பண்ணி மக்களுக்குள்ளே புகுத்தி, மக்களுடைய ரத்தத்திலே புகுத்தி வச்சுட்டாங்க! ரத்தத்தோட கலக்கி வச்சுட்டாங்க!

அதை ஒழிக்கணும்னா இந்த அய்ந்தையும் ஒழிச்சாலொழிய முடியாது
. இதிலொன்றும் அரசியலைப் பத்தி பேசணும்னு அல்ல. அரசியலே இங்கே வரக் கூடாதுதான். ஆனால், அது இந்தக் காரியத்திற்குத் தேவைங்கறதுனாலே அதைப்பற்றி நான் எடுத்துச் சொல்கிறேன். காங்கிரசினுடைய கொள்கை காந்தியைக் காப்பாத்ணும், மதத் தைக் காப்பாத்தணும், ஜாதியைக் காப்பாத்தணும், அந்தஸ்தைக் காப்பாத்தணும், இன்றைக்கு அதனுடைய கொள்கை அதுதான். அதுக்கு முந்திப் பிடிச்சுவச்சாங்க காந்தியை!

அந்த ஆளு ஒரு களிமண் மூளைக்காரன்! அவன் என்னமோ சாமி, பூதம், பக்தி, அது, இது என்று பேசினதுனாலே பிடிச்சுவச்சுட்டாங்க. அவனை மகாத்மான்’னு! அவனும் பயித்தியக்காரனுக்குக் கள் ஊத்துனாப்போல என்னேரம் பார்த்தாலும் கடவுள், கடவுள்’’ என்று, “இராமன், சாஸ்திரம், வர்ணாசிரமம், இந்துமதம்’’ அப்படின்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சான்.அவன் பிரச்சாரத்துக்கு நல்ல பலம் இருந்தது. பார்ப்பான்கிட்டதான் எல்லாப் பத்திரிகையும் நம்மாள்கிட்டே ஒன்றும் இல்லை. அவங்க பேரைச் சொன்னாலே ஜனங்களெல்லாம் கும்பிடற அளவுக்குப் பிரச்சாரமாயிருக்கு! அதனாலே அவனை ஒழிக்கணும்னு ஆரம்பிச்சோம். கடவுள், மதம் ஒழிக்கணும், வர்ணாசிரமத்தைப் பிரச் சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கணும். இதை எல்லாம் காப்பாத்தறதுக்காக அடிப் படைச் சட்டம் வச்சுக்கிட்டிருக்கிற ஆட்சி செய்கிற அரசாங்கத்தை ஒழிக்கணும்; இதுக்கெல்லாம் கர்த்தாவாக இருக்கிற பார்ப்பானை ஒழிக்கணும், அதன்படிதான் நடந்து வருகின்றது.

நாளுக்கு நாள். காரணம், அதையே எடுத்துக்காட்றேன். நான் சொல்றேன் கேளுன்னு அல்ல! அந்தப் புத்தகத்திலே இருக்கு. இந்த வேதத்திலே இருக்கு. அந்த சாஸ்திரத்திலே இருக்குன்னு அல்ல, எனக்குத் தோணுது என் அறிவுக்குத் தோணுது. அது மாதிரி உன் அறிவுக்குத் தோன்றினா ஒத்துக்க; இல்லாட்டி வேண்டாம். நான் ஒண்ணும் உங்களைக் கட்டாயப்படுத்துவதாக நினைக்கவேண்டாம்! உங்களை ஏய்க்கறதாக நினைக்கவேண்டாம்! உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்! உங்களுக்கு இவ்வளவு சக்தியுண்டு! உங்களால் இந்தக் காரியம் செய்ய முடியும்! இந்தப் பாவிக் கடவுள், மதம், சாஸ்திரங்களாலோ, மற்ற உபதேசம் செய்யறதாலோ பார்ப்பான்களினாலோ நம்ம சக்தி இந்த மாதிரி அடிமையாச்சு!

இதைத்தான் சொல்றோம். மாத்தியாகணும் என்று; மாறாது இருக்கிற ஆளுக உலகத்திலே நாம் தான்! மற்றவன் எல்லாம் மாறிவிட்டான். நாம்தான் இன்னும் மாறவில்லை.

------------- தந்தைபெரியார் -நூல்:"சிந்தனையும் பகுத்தறிவும்"

0 comments: