Search This Blog
13.8.08
குச்சனூர் கோயிலில் கருப்பு சாமிக்கு மது அபிஷேகமாம்
தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் உள்ள சோணை கருப்பு சாமிக்கு மது அபிஷேகம் நடந்ததாம்.
குச்சனூரில் உள்ள சுயம்பு சனீஸ்வர கோயிலில் கடந்த 19 ஆம் தேதி, சனிக்கிழமை விழா தொடங்கியது. இக்கோயிலின் வளாகத்தில் உள்ள சோணை கருப்பு சாமிக்கு பக்தர்கள் மதுப்பாட்டில்களை காணிக்கையாக செலுத்தினர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராந்தி, ரம் பாட்டில்கள் காணிக்கையாக குவிந்தனவாம். இந்த பாட்டில்கள் அனைத்தும் குதிரை மீது அமர்ந்தபடி உள்ள சோணை கருப்பு சாமி முன் அடுக்கி வைக்கப்பட்டனவாம்.
சிலையின் பீடத்தின் கீழ்மிகப் பெரிய கலயம் ஒன்று பதிக்கப்பட்டு உள்ளது. ஊற்றப்படும் மது அனைத்தும் அங்கு போய்ச் சேரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதாம். அதையார் குடிப்பார்கள் என்பது தெரியவில்லை.
---------- நன்றி: "விடுதலை" 13-8-2008
Labels:
மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment