Search This Blog

1.8.08

காந்தியாரின் வயதும் சோதிடமும்




காந்தியார் பிறந்தது 2.10.1869. கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டது. 30.1.1948-ல். 78 1/2 ஆண்டுகள் தான் உயிருடன் இருந்தார். ஆனால் திருத்தணி சோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரியார் என்பவர் 15.8.1947 பாரத தேவி இதழில் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

"காந்தியார் பிறந்தது சிம்ஹ லக்கினம், மக நட்சத் திரம். விடியற்காலம், மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் யோகம் உண்டு. இதே போல், சிம்ஹ லக்னமும் நீண்ட ஆயுள் தரக்கூடியது.

மேலும் ஜன்ம லக்னம் சிம்ஹமாகவும் அதில் சந் திரன் தனித்து இருப்பதாலும் ஆயுள் ஸ்தானாதிபதியான குரு தசமகேந்திரத்தில் நின்று லக்னாதிபதியான சூரியனை யும் ஆயுஷ்காரகனாதிய சனி யையும் பார்ப்பதனாலும் பரமாயுள் என்ற கணக்கான 120 வருஷங்கள் மகாத்மாவுக்கு ஆயுள் உண்டு.

தவிர, முன் காலத்தில் தப ஸ்ரேஷ்டர்களான ரிஷீஸ் வரர்கள் தமது தபோ மகிமையாலும், யோகாசன அனுஷ்டான ஆகார நியமங் களினாலும் தமது ஆயுளைப் பெருக்கிக் கொண்டு ஆயிரக் கணக்கான வருஷங்கள் ஜீவித்திருந்ததாக நமது புராணங்களின் வாயிலாக அறிகிறோம்.

இதேபோல காந்தியடி களும் தமது ஆகார, அனுஷ்டான நிர்ணயங்களாலும் தெய்வ பிரார்த்தனையாலும் தமது ஆயுளை விருத்தி செய்து கொண்டு, ஜாதக ரீதியாக ஏற்படும் பரமாயுள் 120 வருஷங்களுக்கு அதிக மாகவே ஜீவித்திருப்பாரென் பது எனது திடமான அபிப் பிராயம். மகாத்மா காந்தியடிகள் நீடூழி வாழ பகவானைப் பிரார்த்திப் போமாக!"

இவ்வாறு சோதிடர் கூறினாரே - காந்தியார் 120 ஆண்டு காலம் வாழ்ந்தாரா? சோதிடம் - ஒரு மோசடி என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

---------நன்றி: "விடுதலை"

0 comments: