Search This Blog

5.8.08

பெரியாருக்கு சிலை ஏன்? மாலை ஏன்? ----இஸ்லாமிய தோழர்களுக்கு பதில்.அன்பிற்கினிய தோழருக்கு

வணக்கம். தங்களின் பதிவை (http://abunoora.blogspot.com/) இன்றுதான் பார்த்தேன்.

பெரியார் சிலை ஏன்? மாலை ஏன்? என்பது பற்றியெல்லாம் கேள்வி எழுப்பி உள்ளீர்கள்.பெரியாரின் கொள்கைப்பரப்பல் என்ற ஒரே நோக்கம் தவிர வேறு எதுவும் அதில் இல்லை.

இது குறித்து வீரமணி அவர்களோ மற்றவர்களோ பதில் சொல்லுவதை விட பெரியார் சொன்னால் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில்( இன இழிவு ஒழிய இஸ்லாம் மார்க்கமே சிறந்தது என்று மிகச்சிறப்பாக ஆதாரங்களுடன் பேசியவர் --பெரியார்) பெரியாரின் பேச்சை அப்படியே இங்கு தருகிறேன்.

படியுங்கள், உண்மைதன்மையை உணருங்கள். இதற்குபிறகும் உங்களுக்கு அய்யம் ஏற்பட்டால் அதையும் போக்க முயலுகிறேன்.


கடவுள், மதம், கோயில்களை இன்னமும் கட்டிக் கொண்டு அழுதால் தீண்டாமை எப்படி ஒழியும்?

தந்தை பெரியாரவர்கள் நன்றிவுரை ஆற்றுகையில் குறிப்பிட்டதாவது :

இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்தி பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். மனதறிந்து நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். நம் இயக்கம் நாச இயக்கம் -ஆக்க இயக்கமல்ல. அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலையாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாச வேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள் அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால் நாசவேலை செய்வபவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக்கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின்படி நடப்பவர்கள் ஆவார்கள்.

மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என்றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வரவில்லை, மக்களை ஏமாற்றி வரவில்லை. எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம் சம்பிரதாயம் இல்லை, சாதி இல்லை. இவையாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டுகளைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் இராமாயணத்தைக் கொளுத்தியவர். புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்தகம் எழுதியவராவார். பத்திரிக்கைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால் நம் கொள்கைகள் - செயல்களை வெளியிடாமல் அதற்கு மாறானவற்றை விளம்பரம் செய்கிறார்கள் என்றாலும் அப்படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30- லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை - வெளியிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த 30 - இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே! அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?


அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால் கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை தேவையில்லை. ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே!

இது இந்த ஆட்சிக்குக் கடவுள் -மதம்- சஸ்திரங்களில் சாதி, பழமைகளில் நம்பிக்கைகக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த "சாமி படங்களை எல்லாம்" நீக்க வேண்டும் என்று உத்தரவு போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்.

இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந்தால் கோயில்களை எல்லாம் அவர்களாகவே இடித்து விடுவார்கள்.

நாம் இந்த துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின்றோம். ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல், மூடநம்பிக்கைக்காரன் ஆட்சிதான் பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது. பார்ப்பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில் - இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானே, அதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது! இல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சியிலிருப்பார்கள்.

நம்முடைய தொண்டின் காரணமாக பிரசாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. நமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லை. அவன் மட்டும் என்ன உயர்ந்தவன்? நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்? எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பது? இன்னொருவன் பஞ்சமன், பறையன், தீண்டப்படாதவனாக இருப்பது? என்கின்ற இது மாதிரிப் பிரச்சாரம் செய்தாலே தான் இன்றைக்குப் பஞ்சமனை, நாவிதனை, பள்ளன், பறையன் எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம். பல பெரும் உத்தியோகங்களில் நம்மவர் இருக்கும்படியாற்றறு .இந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள் - தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

காங்கிரசாரும், காந்தியும் இந்தத் தீண்டாமையைக் காப்பாற்றும் வகையில் தான் நடந்து கெர்டனரே தவிர, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக் கிடையாது. நம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

கடவுள், மதம், கோயில் இவற்றை எல்லாம் இன்னமும் கட்டிக் கொண்டு அழுவதால் தீண்டாமை எப்படி ஒழியும்? ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழிபடுகிற கடவுளால், பின்பற்றுகிற மதத்தால், கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானே? எனக்குக் கடவுளும் வேண்டாம், மதமும் வேண்டாம், என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன் என்கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான் தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாக, திருவாங்கூர்காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடிகளை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டி, மக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோது, பலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர். மாறியவுடன் அதுவரை ஈழத்தவர்கள், கீழ்சாதிக்காரர்கள் நடக்கக்கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும் மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர். கலவரம் ஏற்பட்டது. அதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட்டான். உடனே கலவரம் முற்ற ஆரம்பித்தது. இந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம்பித்தது விட்டது. எங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்று.

இதைப் பார்த்து பயந்து, அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது இடங்கள், கோயில், குளம், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும் எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டு என்று திறந்துவிட்டார். அதன் பிறகுதான் இங்கு இவர்கள் தீண்டப்படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர்.


அப்போது நான் காந்தியிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறையனாக்கினீர்களே தவிர, பார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில்லையே என்று கேட்டேன். உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போக வேணடும் என்று சொன்னாரே ஒழிய, பார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடு நடைமுறையில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டிருந்த இடம் வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான். அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப்பானின் ஆதிக்கமே இருந்து வந்தது. ஆட்சித்துறை, அரசியல்துறை, மதத்துறை எல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்திலிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதல் அய்க்கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார். முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும். அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 - பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும். இன்று அய்க்கோர்ட்டில் இருக்கின்ற 14 - ஜட்ஜீகளில் 10 - பேர்கள் தமிழர்கள். மீதி 4 -பேர்கள் தான் பார்ப்பனர்கள் இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை 12 - ஆகிவிடும். பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்தது. இதனால் என்ன பயன் என்பீர்கள்? நம் வக்கீல்களுக்கும், நம் மக்கள்களுக்கும் அதனால் நல்ல வாய்ப்பபுக் கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன்.

நீதித்துறையில் மட்டும் அல்ல, கல்வி விஷயத்திலும் காமராசரைப் போல, அவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. வரை சம்பளம் இல்லாமல் இருந்தது. இப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சி) வரை இலவசமாக்கி இருக்கிறார்கள். நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றன. இந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ள அரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாது. இந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்வனாகத்தான் இருப்பான். பார்ப்பான் சொல்கிறபடி நடப்பவனாகத்தான் இருப்பான்.

நம் பத்திரிக்கை என்பவை ஆரம்பிக்கும் போது நம் படங்களைப் போட்டு - கொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும். மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றன. இது மாடு மேய்க்கப் போகாது. உத்தியோகம் வேண்டும் என்றுதான் கேட்கும். நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும். இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும். மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோ அவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையே.

நம் மக்களுக்கு இன உணர்ச்சி, அறிவுப் புத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும். இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும். இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம். அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தரமான நிலையில்லை. முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கையை விட்டால் கீழே விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. அந்த நிலை மாறி, நிரந்தரமாக நிற்கிறவரை நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபச் சின்னம் வைப்பது போன்ற இவையெல்லாம் பிரச்சார காரியமே தவிர இது பெருமையல்ல. ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான் இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும்.

நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறார்கள். வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?

நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும், நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.

-------24-05-1969 அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. விடுதலை 09-06-1969

----------------- நூல்: "பெரியார் களஞ்சியம்" - தொகுதி 18. ஜாதி - தீண்டாமை -பாகம் 12 -- பக்கம் 264-270

தோழரே நீங்கள் உங்கள் பதிவில் எழுப்பிய அத்துனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாது பெரியார் இயக்கம் பற்றியும் தாங்கள் ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பெரியாரியக்கத்தவர்களுக்கு யாரிடமும் வம்பிழுக்கும் எண்ணம் என்றும் இருந்ததில்லை. கொள்கையில் கோளாறு ஏற்படும்போது எதற்காகவும் யாருக்காகவும் சமரசமின்றி போராடுவார்கள்.
மேலும் தெளிவடைய பெரியாரின் நூல்களைப் படியுங்கள். குறைந்தபட்சம் இஸ்லாம் பற்றி பெரியார் பேசிய எழுதிய பகுதிகளையாவது ஒரு முறை வாசிக்க வேண்டுகிறேன்.
நன்றி.

23 comments:

bala said...

தமிழ் ஓவியா அய்யா,

இது ஒரு கீழ்த்தரமான,பகுத்தறிவு சிறிதும் இல்லாமல் சொல்லப்படுகிற கேவலமான சப்பைக்கட்டு.ஒரு கருப்பு சட்டை பொறிக்கியால் மட்டுமே இந்த மாதிரி உளற முடியும்.

பாலா

ABU NOORA said...

தோழர் தமிழ் ஓவியா அவர்களுக்கு!

பெரியாரின் கொள்கைகளை பரப்புகின்றோம் என்ற பெயரில் வாய்க்கு வந்ததையும் வழியில் கிடக்கும் வார்த்தைகளையும் தமது பத்திரிக்கையில் அச்சிட்டு சோறுண்ண நினைக்கும் வீரமணி வகையறாக்கள்தான் அதற்கான பதிலையும் ஆதாரத்தையும் தரவேண்டுமே தவிர பெரியாரை ஏன் வம்புக்கிழுக்கின்றீர்கள். வீரமணி எழுதினால் வீரமணி உயிரோடு இருக்கும்போது வீரமணியே பதிலுரைக்க அல்லது அறை கூவலை எதிர்கொள்ள தயாரகக் கடமைப்பட்டுள்ளார்.

சாதாரணமாக உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் இயக்கத்தைப் பற்றியோ நான் எதாவது கூறினால் அதன் எதிர்வாதத்தை எதிர்கொள்ள வேண்டிய கடமை என்னையே சாரும். நான் எதிர்கொள்ளாதது வரை என்னால் பதில் சொல்லமுடியாமல் தோற்றுவிட்டேன் என்பதுதான் நிஜம்.

உதாரணமாக கூறவேண்டுமென்றால் அறிவியலுக்கு அணு அளவும் பொருத்தமில்லாத தத்துவங்களை கூறும் வீரமணி அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசுவதையும் அவரது சீடர்கள் வாய் பொத்தியிருப்பதைப் பற்றி கேட்டாலும் பெரியாரா வந்து பதிலுரைக்க வேண்டும்.?

குறிப்பாக கூறவேண்டுமென்றால் ஜெயலலிதாவின் ஆட்சியில் அவரை வானளாவ புகழ்ந்துவிட்டு ஆட்சி மாறியதும் வார்த்தை மாறும் மாயை என்னவென்று அவரது பாணியில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கச் சொன்னால் அதற்கும் பெரியாரை அழைத்து வருவது அறிவியல் பூர்வமானதன்று!

எது எப்படியிருந்தாலும் தன்னையும் தனது சொல்லையும் உண்மையென கி. வீரமணியவர்கள் நம்புவதாக இருந்தால் அறைகூவலை எதிர்கொள்ளட்டும். அல்லது இன்னொரு பதினைந்து ஆண்டுகள் கழித்து யாரும் கவனிக்கமாட்டார்கள், அப்போது எழுதலாம் என தப்புக்கணக்கு போடாமலிருக்கட்டும் - அன்புடன் அபூ நூறா...

அபூ அப்திர்ரஹ்மான் said...

தமிழ் ஓவியா அவர்களின் கருத்து பகுத்தறிவுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. உங்களுடைய வாதமே எதையும் பகுத்தறிவால் நிரூபிக்க இயலுமா என்பதே? உங்களுக்கு நீங்களே முரண்பட்டு பதிலளிப்பது ஏன்? இங்கே கேள்வி என்னவென்றால் பெரியார் சிலைக்கு மாலை போடுவதால் ஒரு கல்லுக்கு மரியாதை செய்வது என்ற நடவடிக்கை பகுத்தறிவுக்கு உகந்தது தானா என்பதாகும். மீண்டும் ஒரு முறை இத்தளத்தில் வந்த பின் வரும் குறிப்பைப் படித்துப் பாருங்கள்.

சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற, அதையும் மிஞ்சுகின்ற மடமைதான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது.

பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமா? அல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார்தான் இதை உணருவாரா?

பெரியார் கூறியதாக நீங்கள் அளித்த பதில்

//இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந்தால் கோயில்களை எல்லாம் அவர்களாகவே இடித்து விடுவார்கள்.//


நீங்கள் அளித்த இதே பதிலைக் கூறி ஒரு இந்து நண்பர் தன் செயலை இவ்வாறு நியாயப் படுத்தலாம்


இந்த ஊரில் பிள்ளையாருக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் இந்த சிலை பகட்டுக்காக மரியாதை செய்யப்படுகிற சிலை இல்லை. கடவுள் உண்டு என்பதற்கான சிலை. ஆன்மீகச் சிலை. மணியடிக்கக்கூடிய பூஜை செய்யக் கூடிய சிலை. கடவுள் இல்லை என்று சொல்லக் கூடியவன் காட்டு மிராண்டி முட்டாள் என்று சொல்லக் கூடிய சிலை.

மேற்கண்ட வரிகள் கற்பனைதான் எனினும் நீங்கள் அளித்த பதில் அடிப்படையற்றது என்பதற்காகவே குறிப்பிடப்பட்டுள்ளது. சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வதை பகுத்தறிவு கொண்டு நிருபியுங்கள் பார்க்கலாம்.

தமிழ் ஓவியா said...

பாலா என்றஜெயராமா உன் சிண்டு முடியும் பார்ப்பன நரித்தனத்தைக் கண்டு நாங்களோ இஸ்லாமியத் தோழர்களோ ஏமாந்து விடமாட்டோம்.
உன்னுடைய குள்ளநரித்தனம் எங்களிடம் எடுபடாது.

உன்னுடைய நாகரிகமில்லாத பின்னூட்டத்தைப் பார்த்து வாசகர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள்.

bala said...

//உன்னுடைய குள்ளநரித்தனம் எங்களிடம் எடுபடாது//

தமிழ் ஓவியா அய்யா,

என்னங்க இது?பதில் சொல்லமுடியல என்றால் பகுத்தறிவோடு ஒப்புக்கொண்டு போங்களேன்.அதை விட்டு விட்டு குள்ளநரித்தனம் என்றெல்லாம் தூற்றுவதைக் கண்டு வாசகர்கள் இந்த கருப்பு சட்டை பசங்க ஒரு வெத்துவேட்டு கும்பல் என்ற முடிவுக்கு தானே வரமுடியும்.

பாலா

தமிழ் ஓவியா said...

அபு அய்யா அவர்களுக்கு வணக்கம்.

தங்களின் பின்னூட்டத்தை பார்த்தேன். நீங்கள் கேட்ட கேள்விக்கும்,தற்போது எழுப்பிய கேள்விக்கும் ஏற்கனவே பெரியாரைக் கொண்டு விடையளித்துவிட்டேன். திரும்பவும் அதே கேள்வியை கேட்டுள்ளீர்கள். அது இதோ"

"சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற, அதையும் மிஞ்சுகின்ற மடமைதான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது.

பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமா? அல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார்தான் இதை உணருவாரா?

பெரியார் கூறியதாக நீங்கள் அளித்த பதில்

//இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும். இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந்தால் கோயில்களை எல்லாம் அவர்களாகவே இடித்து விடுவார்கள்.//


நீங்கள் அளித்த இதே பதிலைக் கூறி ஒரு இந்து நண்பர் தன் செயலை இவ்வாறு நியாயப் படுத்தலாம்


இந்த ஊரில் பிள்ளையாருக்குச் சிலை வைத்திருக்கிறார்கள் என்றால் இந்த சிலை பகட்டுக்காக மரியாதை செய்யப்படுகிற சிலை இல்லை. கடவுள் உண்டு என்பதற்கான சிலை. ஆன்மீகச் சிலை. மணியடிக்கக்கூடிய பூஜை செய்யக் கூடிய சிலை. கடவுள் இல்லை என்று சொல்லக் கூடியவன் காட்டு மிராண்டி முட்டாள் என்று சொல்லக் கூடிய சிலை.

மேற்கண்ட வரிகள் கற்பனைதான் எனினும் நீங்கள் அளித்த பதில் அடிப்படையற்றது என்பதற்காகவே குறிப்பிடப்பட்டுள்ளது. சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்வதை பகுத்தறிவு கொண்டு நிருபியுங்கள் பார்க்கலாம்."

தாங்கள் வைக்கும் நேர்மையான நியாயமான எந்த விமர்சனத்தையும் எதிர் கொள்ள எப்போதும் அணியாமாக இருக்கிறேன் தோழரே. சரி விசயத்திற்கு போவோம்.

பிள்ளையார் சிலை என்பது கற்பனை.நம்பிக்கை சார்ந்தது.

பெரியாரின் சிலை என்பது ரத்தமும் சதையுமாக 1973 ஆம் ஆண்டு வரை நம்மோடு வாழ்ந்தவர்,அவரால் தமிழும் தமிழினமும் குறிப்பாக பார்ப்பனரல்லாத( இஸ்லாமிய கிறித்துவ தோழர்கள் உடபட ) அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்ட ஒரு தலைவரை எதிர்கால சந்ததியினருக்கு அடையாளம் காட்டுவதற்கு ஏற்படுத்தப்படதாகும்.

அதோடு கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் எப்படியிருப்பார் என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிலை வைக்கப்படுகிறதே தவிர அவரை வணங்குவதற்கு அல்ல.

இதைக்கூட முன்பு நான் சுட்டிக்காடிய உரையில் பெரியார் தெளிவுபடுத்தியிருப்பார். மீண்டும் ஒருமுறை அதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

"இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபச் சின்னம் வைப்பது போன்ற இவையெல்லாம் பிரச்சார காரியமே தவிர இது பெருமையல்ல. ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான் இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும்".

நம்பிக்கைசார்ந்ததற்கும் வரலாற்றுக் குறிப்புகளுக்கும் ஆழ்ந்த வேறுபாடு உண்டு தோழரே.

இந்து நண்பர் சொன்னது நியாயமான பதில் அல்ல என்பது உங்களைப் போன்ற நல்லதொரு தர்க்கவாதிக்கு எளிதாக புலப்பட்டிருக்கும்.

மீண்டும் சொல்கிறேன். பெரியாருக்கு சிலை வைப்பது, மாலை அணிவிப்பது என்பது கொள்கைப் பரப்பலுக்கானதே தவிர அதில் எந்த புனிதமும் கிடையாது.

மாலை அணிவிப்பது என்பது கூட தினமும் "சாமி" சிலைகளுக்கு செய்வது போல் (ஒரு புரிதலுக்காக சொல்கிறேன்) யாரும் செய்வது கிடையாது.

பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்களில் மட்டும்தான் அணிவிக்கிறார்கள். அது பெரியார் உண்ர்வதற்காக அல்ல.

சிலைக்கு மாலை அணிவித்திருப்பதை பார்க்கும் மக்கள் இன்று பெரியார் பிறந்த நாள் அல்லது நினைவு நாள் என்று அறிந்து கொள்வதற்காகவே. அது ஒரு பிரச்சார யுக்திக்காக செய்யப்படுவதே தவிர வேறு எதற்காகவும் அல்ல.

அவசியம் பெரியாரை வாசியுங்கள். உங்களுக்கே பல உண்மைகள் புலப்படும் .

ஆரோக்கியமாக விவாதிக்கும் உங்களுக்கு நன்றி.

தமிழ் ஓவியா said...

அட அவசரக்குடுக்கை பாலா என்ற ஜெயராமா!

பெரியார்தான் அழகாச் சொல்லுவார் பார்ப்பானுக்கு முன் புத்தியும் கிடையாது. பின்புத்தியும் கிடையாதுன்னு. அது போல் அண்னல் அம்பேத்கார் "பார்ப்பான் படிப்பாளியே தவிர அறிவாளி இல்லை" ன்னு சொல்லுவார்

அதை நிரூபிக்க எங்கேயும் போக வேண்டாம். பார்ப்பன குள்ள நரி பாலா சரியாண உதாரணம்.

எப்படின்னா எதிரிக்கு உடனே பதில் சொல்லிவிடுவோம். சகோதரனுக்கு கொஞ்சம் தாமதமா சொல்லலாமுன்னு முதலில் இந்த பார்ப்பன நரித்தனத்தை அம்பல்ப்படுத்தினேன்.

எனது சகோதரன் அபுவுக்கு பதில் எழுதி கொண்டு இருக்கும் போதே இந்த அவசரக்குடுக்கை அதுக்குள்ள கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டது.

மீண்டும் சொல்கிறேன் குல்லுகப்பட்டர் ராஜாஜி, பார்ப்பன விசம் சத்திய மூர்த்தி போன்றவர்களாலேயே எங்களை எதிர் கொள்ள முடியவில்லை நீயெல்லாம் எம்மாத்திரம்.

ஆபாசமாக பின்னூட்டம் போடுவதைத் தவிர வேறு உன்னிடம் என்ன எதிர் பார்க்க முடியும்?

bala said...

முண்டம் தமிழ் ஓவியா அய்யா,
ஆபாசமா?எது ஆபாசம்?அல்பத்தனமா தாடிக்காரன் உளறிவிட்டு போனதையெல்லாம் கட் அண்ட் பேஸ்ட் செய்து வெளியிடுவதைத் தவிர,கேள்வி கேட்டால் குள்ளநரி,பாப்பான் என்று பம்மாத்து பண்ணுவதைத் தவிர நீ உருப்படியாக் என்ன செய்திருக்கிறாய்?எதைக் கேட்டாலும் "நாங்கள் எதிர் கொள்வோம்" ,"நாங்கள் கிழித்து விடுவோம்" என்று பன்மையில் பேசி ஆர்கஸம் அடையும் அற்பன் நீ.மகா பெரிய ரெளடி தாடிக்காரனாலேயே தமிழ் நாட்டில் பக்தி வெள்ளத்தை,ஆன்மிகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.அப்படியிருக்க பெரும் கொள்ளைக்காரன் மானமிகுவும்,அவன் எடுபிடியான நீயும் எம்மாத்திரம்?அல்பனே, அகம்பாவத்தை விடு.நல் வழி வந்து திருந்தி வாழப்பார்.

பாலா

bala said...

//எதிர்கால சந்ததியினருக்கு அடையாளம் காட்டுவதற்கு //

தமிழ் ஓவியா அய்யா,
இது என்ன பேத்தல்.எதிர்கால சந்ததியினருக்கு அடையாளம் எதற்கு காட்ட வேண்டும்?அதுவே ஒரு அல்பத்தனமான மூட நம்பிக்கை அல்லவா?சரி அது போகட்டும்.அடையாளம் காட்டுவதற்கு சிலைதான் வைக்க வேண்டுமா?வேறு நல்ல வழிகள் இல்லையா?ஏற்கெனவே குறுகிய நெரிசல் மிகுந்த தெருக்களில் அசிங்கமான இந்த சிலைகளை வைப்பது எவ்வகையில் பகுத்தறிவுக்கு ஒத்த செயலாகும்,பண்பான செயலாகும்?முண்டம் பழனி கருப்பு சட்டை பிரியாணி குஞ்சு விளக்குமா அல்லது ஆபாசம்,பாப்பான் என்று பாசாங்கு செய்து நழுவுமா?

பாலா

தமிழ் ஓவியா said...

சரி ஒரு முடிவுக்கு வருவோம்(வாதத்திற்காகவாவது) நாட்டில் இருக்கிற சாமி சிலைகளை முதலில் அப்புறப்படுத்துவோம். அப்புறம் சாலையில் இருக்கும் பெரியார் சிலை உட்பட அத்துணை சிலைகளையும் அப்புறப்படுத்தலாம்.
தயாரா?
கடவுள் என்ற மூடநம்பிக்கைக்கு மேல் வேறு எதுவும் இல்லை.
குறுகிய நெரிசல் மிகுந்த தெருக்களில் கோயில்கள் தான் அதிகம் உள்ளன. முதலில் அதை அப்புறப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளாய்?
பாசாங்கு செய்வது பார்ப்பன தந்திரங்களில் ஒன்று. அதெல்லாம் எங்களுக்கு வராது. குயுக்தியான் எண்னங்கள், அடுத்தவனை கவிழ்ப்பது போன்ற கெடுமதிகள் எல்லாம் பார்ப்பானின் சொத்து. ஆபடூபே என்ற அறிஞரின் கூற்றுத்தான் நினைவுக்கு வருகிறது.
அது உன்னிடம் அதிகமாவே இருகிறது.

மீண்டும் சொல்கிறேன் அசிங்கமாக பின்னூட்டம் போடுவதை தவிர்த்து ஆரோக்கியமாக விவாதம் செய்ய முயற்சி செய்?

bala said...

//குயுக்தியான் எண்னங்கள், அடுத்தவனை கவிழ்ப்பது போன்ற கெடுமதிகள் எல்லாம் பார்ப்பானின் சொத்து. ஆபடூபே என்ற அறிஞரின் கூற்றுத்தான் நினைவுக்கு வருகிறது.//

தமிழ் ஓவியா அய்யா,

ஆமாங்கய்யா.எனக்குக்கூட அறிஞர், சாமர்செட் மாம் எழுதியது தான் நினைவுக்கு வருகிறது."The scrawny,puny,dirty,despicable and dangerously violent tamils of South India" என்று திராவிடர்கள் என்று தங்களை வர்ணித்துக் கொள்ளும் கருப்பு சட்டை கும்பலைப் பற்றி அருமையாக எழுதியிருக்கிறார்.அது ஏனோ தெரியவில்லை கருப்பு சட்டை மூஞ்சிகளைப் பார்த்தாலே அவருக்கு பற்றிக் கொண்டு வந்தது.அந்த மூஞ்சிகள் அசிங்கம் தான்;ஆனா அதுக்காக இவ்வளவு கோபம் வரக்கூடாது அல்லவா?

அது போகட்டும்.கோவில் சிலைகளை முதலில் அகற்றுங்கள் என்று கீழ்த்தரமா சொல்லியிருக்கிறீர்கள்.குஞ்சுகளுக்கு படிப்பறிவும் கிடையாது,பொது அறிவும் கிடையாது என்பதை நிருபித்துள்ளீர்கள்.கோவில்கள் எந்த கால கட்டதிலோ சேர/சோழ/பாண்டிய/பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டன.உங்கள் வாதப் படி முதலில் கோவில் கட்டி சிலை வைத்ததே தவறு,மூட நம்பிக்கை.அப்படியிருக்க நீங்களும் அதே தவறை செய்ய வேண்டுமா?சிலையை வணங்க வேண்டுமா?நடுத் தெருவில் சிலையை வைத்து மக்களை படுத்த வேண்டுமா?அதுவும் அசிங்கமான தாடிக்காரனின் உருவச் சிலையை.இந்த உண்மையை நிர்பாணமாக்கி புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அய்யா.

பாலா

tamiloviya said...

பார்ப்பன பாலா சிண்டு முடியும் வேலையை கனகச்சிதமாக செய்கிறார்.ஏமாறுவத்ற்கு யாரும் தயாரில்லை.

bala said...

//சிண்டு முடியும் வேலையை கனகச்சிதமாக செய்கிறார்.ஏமாறுவத்ற்கு யாரும் தயாரில்லை.
//

தமிழ் ஓவியா அய்யா,

ஆ அப்படியா?பின் எதற்காக கருப்பு சட்டை போட்டுக் கொண்டு,சிலையை வைத்து,கற்பூரம் காட்டி வணங்கி,பிரசாரம் செய்கிறீர்கள்?என்ன வெங்காய பகுத்தறிவோ போங்க.

பாலா

Periyar J said...

Bala nayae

ayya va pathi pesa unaku arugataha kedayathu da.......

bala said...

//Bala nayae

ayya va pathi pesa unaku arugataha kedayathu da.......//

Why my dear chap?Just because you have named yourself Periyaar, should you behave like a pig?Think man think.Think beyond your nose and get out of that filthy black shirt mindset.There may still be hope for you.

Bala

தமிழ் ஓவியா said...

//கருப்பு சட்டை போட்டுக் கொண்டு,சிலையை வைத்து,கற்பூரம் காட்டி வணங்கி,பிரசாரம் செய்கிறீர்கள்?என்ன வெங்காய பகுத்தறிவோ போங்க.//

மூளை என்ற ஒரு உறுப்பு உமக்கு இருக்குதான்னு அய்யமா இருக்கு பாலா
.பொய்யை சொன்னாலும் பொறுத்தமா சொல்லுங்க பல நாக்குப் பேர்வழி பாலா.தர்க்கவிதி கொஞ்சமேனும் கடைபிடிங்க.

பல் பிடுங்கப்பட்ட பார்ப்பனியம் இப்படித்தான் எதயாவது உளறிக் கொண்டிருக்கும்.

Periyar J said...

Bala

Religion, politics, economics and social life in India are based only on class distinctions. That is why some live high and many are constrained to live low in society. People have also lost their sense of self - respect.

If any one wishes to serve society, on the basis of humanism, what he should do first is to make people think and conduct themselves rationally.

Because man has been compelled to have faith and trust in a mysterious God, he is now made to believe all the lies about Him.

Thats why am proud of having my name PERIYAR....

if you are a self respected man then

TRY TO COME OUR SIDE...

becoz i think you are going in wrong way....

கடவுள் இல்லை
கடவுள் இல்ல வே இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பு கிறவன் காட்டு மிராண்டி

அய்யா வாழ்க

இப்படிக்கு
அய்யா வழியில்
பெரியார்

bala said...

//Thats why am proud of having my name PERIYAR....


கடவுள் இல்லை
கடவுள் இல்ல வே இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்பு கிறவன் காட்டு மிராண்டி

அய்யா வாழ்க

இப்படிக்கு
அய்யா வழியில்
பெரியார்//

My dear chap,

You cannot be more wrong.While, as you say ,it is correct that our society was full of class distinctions,what was needed wss a strategy and approch that sought to bridge the differences.But the bearded fruit cake EVR preached a an approach that sought to create more differences than helping to bridge the differences.He preached a virulent doctrine fanning north south divide and even went to the extent of asking the Brits not to grant independence to unified India.His heart was full of venom and hatred.Frankly, it is only the low IQ tamils who fell a prey to his vicious philosophy and fortunately rest of South India (AP/KARNATAKA/KERALA) did not buy into his evil doctrine.Contrary to your belief that the bearded swine was a humanist and was "a mother theresa with a beard",I would say that he was a terrorist,more in the Bin Laden mould.Mark my words.
Tamils and Tamil Nadu will pay a very dear price for going the virulent and divisive (so called) dravidian way.

மீண்டும் சொல்கிறேன்.


1) தாடிக்காரன் நல்லவன் இல்லை,இல்லவே இல்லை.
2)தாடிக்காரனை நம்புபவன் முட்டாள்.
3)தாடிக்காரனை வணங்குபவன் காட்டுமிராண்டி.
3)தாடிக்காரனை பரப்புபவன் அயோக்யன்.

தாடிக்கார சகுனி ஒழிக.
இப்படிக்கு நேர்வழியில் செல்லும்,

பாலா

தமிழ் ஓவியா said...

பெரியார் நல்லவரா?கெட்டவரா? என்று சான்றிதழ் கொடுக்க உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறதுன்னு வாசகர்கள் முடிவுக்கு விட்டுவிடுவோம்.


உஞ்சிவிருத்திப்பார்ப்பானுகளுக்கு இந்த நாட்டில் என்ன மரியாதை இருக்குதுங்கிறத பேசுன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.


சத்தியமூர்த்தி பார்ப்பானிலிருந்து, கடைசி சவுண்டி பார்ப்பான் வரையிலும் தமிழனை சுரண்டிப் பிழைத்த கதைகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியும் பாலா.

தமிழன் எல்லா நேரத்திலும் தூங்கிக் கொண்டு இருக்க மாட்டான். பார்ப்பனின் யோக்கியதை என்ன என்பது தமிழனுக்கு நன்கு தெரியும்.

அதுமட்டுமல்ல பெரியாரிடம் பிழை செய்தவர்கள் எப்படி ஆனார்கள் என்பதை தமிழ்நாடு நன்கு அறியும்.


எனவே அறிவுபூர்வமாக உமது வாதத்தை எடுத்து வை. உரிய பதில் கிடைக்கும்.

ஆபாசமாக அசிங்கமாக பின்னுட்டம் போடுவதை தவிர்ப்பது நல்லது.

bala said...

//பெரியார் நல்லவரா?கெட்டவரா? என்று சான்றிதழ் கொடுக்க உமக்கு என்ன யோக்கியதை இருக்கிறதுன்னு//

தாடிக்காரன் ஒரு சூப்பர் டூப்பர் ஆசாமின்னு செர்டிஃபிகேட் கொடுக்க உனக்கோ,அல்லது அந்த மானமிகுவுக்கோ என்ன தகுதி இருக்கிறதோ, அதை விட ஒரு படி அதிகமாக தகுதி எனக்கு இருக்கிறது என்று அடக்கத்தோடு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

பாலா

தமிழ் ஓவியா said...

முட்டாள்தனமா ஏதாவது உளறுவதே உமக்கு பொழப்பாப் போச்சு. பைத்தியம் முத்திருச்சு.
அடக்கம் என்பது உன்னிடம் இருக்கிறதா? சும்மா ஜோக் அடிக்கதே பாலா.

அய்.நா. வின் யுனஸ்கோ மன்றமே பெரியாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிவிட்டது.

உம்ம பாராட்டு என்பது அசிங்கமா திட்டறதுதானே?

உமக்கு அதித்தவிர உருப்படியாய் வேறு என்ன தெரியும்.

நீ பாராட்டுனாத்தான் நாங்க பயப்படனும்.திட்டினா நாங்க சரியா இருக்கோம்ன்னு அர்த்தம்.

வாசகர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உன்னைப்பற்றி தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள்.

அனாமேதயங்கள் பாலா என்ற பெயரில் அசிங்கமா பின்னூட்டம் போடுவது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.

Periyar J said...

Bala

UNESCO 27-6-1970

Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners

There is no god
There is no god at all
He who invented god is a fool
He who propagates god is a knave
He who worships god is a primitive

bala said...

//அய்.நா. வின் யுனஸ்கோ மன்றமே பெரியாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிவிட்டது//

தமிழ் ஓவியா அய்யா,

அதெ என்ன யுனெஸ்கோவே சொல்லிவிட்டது?யு என் அமெரிக்க மறு காலனி பார்ப்பனீயத்தின் கைக்கூலி தானே?அது உளறியதில் ஆச்சர்யம் என்ன?

பாலா

பாலா