Search This Blog

2.8.08

தாழ்த்தப்பட்டோருக்காக துடிதுடித்த "குடிஅரசு"

காங்கிரஸ் "சமபந்தி போஜனம்"

நீடாமங்கலம் காங்கிரசு மாநாட்டில் அனைவரோடும் அமர்ந்து சாப்பிட்ட குற்றத்திற்காகக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, மொட்டையடித்து, மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் நிலைபற்றி பலருக்கும் தெரியும்.

இதோ ஒன்று: 1935 ஜூன் மாதத்தில் பெரம்பலூரில் உள்ள எசனை கிராமத்தில் நடந்த பெரம்பலூர் தாலுகா காங்கிரசு மாநாட்டிற்கு வந்த சன்யாசி என்ற அரிஜனை குரும்பாலூர் நடேச அய்யர் என்பவர் வெளியே கூட்டிப் போய் நான்கைந்து வீடுகளுக்கு அப்பால் - ஒரு தாம்பாளத்தில் இலை வைத்து உணவு அளித்தார்

--------------------- குடிஅரசு 21.7.1935.

0 comments: