Search This Blog

12.8.08

கிருஸ்ணபகவானின் யோக்கியதை இதோ:

கிருஷ்ண ஜெயந்தியாம்...

குளிக்கும் பெண்களின் உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் மரத்தில் வைத்துவிட்டு, அவர்களின் அம்மண உருவத்தை ரசித்தபிறகு திரும்பக் கொடுத்த காமக் களியாட்டக்காரக் கண்ணன், திருமணமான பெண்களிடம் என்னென்ன அட்டூழியங்களைச் செய்தான் என்பதையும் பாகவதத்திலிருந்தே படியுங்கள்.

"ஸ்ரீகோகுலத்தில் இன்னுஞ் சில கிருஹஸ்தர்களாகிய மகா பாக்கியவான்களினுடைய வீட்டு ஸ்திரீகளில் சிலர் தங்கள் கிருஹஸ்தர்களுடைய ஆக்கினையினால் கிருகத்தில் நிலவறைகளுக்குள் இருக்கின்றவர்கள் வெளிப்புறப்படச் சவுக்கிய மில்லாதவர்களாய் ஸ்ரீ கிருஷ்ண பகவத் குணங்களில் மோகித்து தங்கள் மனோவீதியில் ஸ்ரீ புருஷோத்தமனாகிய ஸ்ரீ மாதவப் பிரானைத் தங்கள் அன்புக்குரிய ஜாரபுருஷனாகப் பாவித்து அதனால் உண்டாகிய விரஹ வேதனாக்கினிக்குச் சகிக்க மாட்டாமல் தங்கள் இருதயங்களில் சர்வ ஜகன்மோகனாகார ஸ்ரீ கிருஷ்ண திவ்ய மங்கள ஸ்வரூபத்தைக் காடாலிங்கனஞ் செய்து மனோசிதர்களாகி ஸ்ரீ பகவதனுபவ சுகலீலைகளை மானசீகமாய் அனுபவித்து மனோலயமடைந்து ப்ரகிருதி பாசபந்த நிர்மித ஜன்மமாப்புண்யங்கள் நசிக்கத் தக்ஷணமே தேகங்களை விட்டுச் சர்வேந்திரிய நிக்ரக பரம யோகீந்திரர்களுக்கும் அடைவதற்குரிய முக்திப்ரதமான ஸ்ரீ பரந்தாமமாகிய பரமபதாநந்த வைபவாதிசயங்களை யடைந்தார்கள் என்று சுகபிரம்மம் கிருபையாகச் சொன்னார்.
கிருஷ்ண பகவானானவர் சந்திரகிரணத்தைப் போலும் விளங்குகின்ற மந்தகாச சுந்தர வதனாரவிந்தத்தில் உண்டாகும் புன்சிரிப்பினாலும், நடிப்பதினாலும் மகிழ்வைத் தருகின்ற மதுரமான வசனங்களை நயம்பொருந்த வுரைத்தலினாலும், தாமரையை நிகர்த்த கடைக்கண் பார்வையினாலும் பலவித ஸ்பரிச வினோதத்தினாலும் அந்தக் கோபக்கன்னிகாமணிகள் யாவருக்கும் தனித்தனிப் பேரானந்த சந்தோஷத்தை யுண்டாக்கினார்."

0 comments: