Search This Blog

18.8.08

பிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்
பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்யைர் கடவுளல்ல!
வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல!
கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.
கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?

ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.

----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை

4 comments:

bala said...

//இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக //

தமிழ் ஓவியா அய்யா,

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக,க்ரீமி லேயர் ஓ பி சி,சோழ,பாண்டிய,பல்லவ மன்னர்க்களால் ,தாழ்த்தப்பட்ட எம் மக்கள் ஒடுக்கப்பட்டு,நசுக்கப்பட்டு,வஞ்சிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள்.மேலும் தாடிக்காரனின் வெங்காய கொள்கை வியாபாரிகளான ஓ பி சி ஆட்சியிலும் எம் மக்கள் மேலும் மேலும் இழிவு படுத்தப்பட்டு,சொல்லொணாத் துயரம் அனுபவிக்கிறார்கள்.ஆகையால் தான் கூறுகிறோம் இந்த தாடிக்காரனை உயர்வாக வைத்து,வணங்கி,திராவிட வெங்காய வழியில் பல வித சித்ரவதைகளை எம் மக்கள் அடைவதால்,இந்த தாடிக்காரன் சிலைக்கு சாணி அடித்து மரியாதை செய்தால் என்ன,உடைத்தால் என்ன, என்று கேட்கிறோம்.திராவிட கருப்பு சட்டை,வெங்காய ஓ பி சி,வில்லன்களே,கபோதிகளே,சொன்டிகளே,கழிசடைகளே,அயோக்யர்களே,சொல்லுங்கள்.இதை விட சிறந்த வழி இருக்கிறதா என்று?சரியாக இருப்பின் கேட்டுக்கறோம்.

பாலா

தமிழ் ஓவியா said...

//இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?//

இது பெரியாரின் கேள்வி.
பார்ப்பன பாலாவின் அசிங்கமான பின்னூட்டத்தையும் படியுங்கள்.
பார்ப்பனரல்லாத மக்களே இந்தப்பார்ப்பன அனாமதேயங்களை என்ன செய்யலாம்?
உங்களின் கருத்த்க்களை பதியுங்கள்.

பார்ப்பன பாலா உன்னைப்பற்றி முழுமையான விவரங்களை முதலில் சொல்லி வெளிச்சத்துக்கு வா.

அப்புறம் உன்னுடைய அசிங்கம்பிடித்த எழுத்தை எழுது.

bala said...

//இது பெரியாரின் கேள்வி.
பார்ப்பன பாலாவின் அசிங்கமான பின்னூட்டத்தையும்//

ஜாதி வெறி பிடித்து அலையும் கருப்பு சட்டை தீவிரவாதி அரை டிக்கட் தமிழ் ஓவியா அய்யா,

நீங்க சொன்னதை உங்க மொழியில் உங்களுக்கு விளங்கும் வகையில் சொன்னால் அது அசிங்கமாகுமா?நீங்க எழுதினால் ஆகாதா?இதைத் தான் பகுத்தறிவு என்று சொல்கிறீர்களா?

இன்று ஜென்மாஷ்டமி.ஆகையால் வீட்டில் உள்ள பகவத்கீதை புத்தகத்தை தூசு தட்டி விட்டு சிரத்தையாக் படிக்கவும்.தாடிக்காரனின் கருப்பு சிந்தனைகளால் இருள் சூழ்ந்த உங்கள் உள்ளம் ஒளி வீசி நிம்மதி அடைவதை உணர்வீர்கள்.அப்புறம் என்ன?வீட்டில் இருக்கும் கருப்பு சட்டையெல்லாம் குவியலாக்கி எரித்து விட முடிவு செய்ய மாட்டீர்களா என்ன?உங்க வீட்டில் உள்ளவர்களும் உங்களையும் ஒரு மனிதனாக மதிப்பதைக் காண்பீர்கள்.ஓசி பிரியாணிக்காக கோவிந்தா போடும் கேவலத்தை விட்டு உண்மையாக உழைத்து வாழும் நிலையை அடைவீர்கள்.

பாலா

தமிழ் ஓவியா said...

பாலா நீ முட்டாள்தான்யா.உமக்கு பெரியார் பயம் பிடித்துவிட்டது. நீ சீக்கிரம் தோற்று விடுவாய்?
ஆமா உன்னைபற்றி விவரங்கள் பற்றி மூச்சு விடவில்லையே ஏன்?