Search This Blog
30.8.08
கலைவாணர்
இன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் (1957). கலை உலகில் என்றும் நிலை பெற்ற புகழுக்குச் சொந்தக்காரர் இவர்.
நாடகத் துறையில் அடியெடுத்து வைத்து, அதன்பின் திரைப்படத் துறையில் நுழைந்து, அந்தத் துறையின் போக்கிலே மகத்தான மாற்றத்தைக் கொண்டு வந்தவர் கலைவாணர்.
1936 ஆம் ஆண்டில் வெளிவந்த "சதிலீலா" திரைப்படத்தில் தன் முகத்தைக் காட்டிய கலைவாணர் - தான்யார் என்பதையும் அடையாளம் காட்டினார்.
ஆதிப்பார்ப்பனர் வேடம். அவர் அருந்தியதோ முட்டை, சாராயம்!
அதை எப்படி சொல்கிறார்? கந்தர்வ பான உணவு என்று கூறி அருந்துவார்.
ஆதிகாலப் பார்ப்பனர்கள் மதுவிலும், மாமிசத்திலும் மயங்கிக் கிடந்தவர்களே என்பதை நகைச்சுவைப் பாணியில் சொல்லுவது என்பது கலைவாணரின் யுக்தி.
டாக்டர் சாவித்திரி படத்தில் நவீன விஞ்ஞானத்தின் மேன்மையை பாடலின் மூலம் (உடுமலை நாராயணகவி -இவருக்குக் கிடைத்த கொள்கைக்கவிஞர் - திரைப்படப் பாடலாசிரியர்) வெளிப்படுத்தினார்.
காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற
காலம் மாறிப் போச்சு - இப்ப
ஊசியைப் போட்டா உண்டா குமென்ற
உண்மை தெரிஞ்சு போச்சு!
விஞ்ஞானத்தின் மேன் மையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில், காசிக்குப் போனால் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையையும் செதிர் காயாக உடைத்துக் காட்டும் பான்மையை இதில் பார்க்கக் கூடும்.
1947 ஆகஸ்ட் 15- முதல் சுதந்திர நாளன்று வானொலியில் பேச கலைவாணர் அழைக்கப் பட்டார். முன்கூட்டியே தான் பேச விருப்பதை எழுதிக் கொடுத்து விட்டார்.
நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரி சையில் தந்தைபெரியார் பெயரையும் இணைந்திருந்தார். அந்தப் பெயரை மட்டும் வானொலி நிலையத்தார் நீக்கிவிட்டனர்.
வானொலி நிலைய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த கலைவாணர், பெரியார் பெயர் நீக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார் - ஏன், பெரியார் நாட்டு விடுதலைக்காகப் பாடுபடவில்லையா? அவர் பெயர் இல்லை என்றால், நான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று கறாராகக் கூறிவிட்டார்.
வேறு வழியில்லை. பெரியார் பெயரைச் சேர்த்த பின்பே நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த அளவுக்கு தந்தை பெரியார் மீது மரியாதை கொண்டிருந்தார். தந்தை பெரியார் கலைவாணர் மீது அன்பும் பாசமும் பொழிந்தார்.
தந்தை பெரியாரின் "குடிஅரசு" இதழே எனது ஆசான், குரு என்று சொன்ன கலைவாணர் அவர்தம் நினைவு நாளில் அவர் விதைத்த சிந்தனைகளை மலர்விப்போம்!
----------------- மயிலாடன் அவர்கள் 30-8-2008 "விடுதலை" இதழில் எழுதியது
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Really beautiful photo!!!
Congratulations.
thank u. நன்றி
Post a Comment