Search This Blog

10.8.08

இந்த நாட்டிலே தீவிரவாதத் திற்குக் காரணமே மதத் தீவிர வாதம்தான்!



ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
தம்மால் இயன்றதைச் செய்துவிட வேண்டும்

முதலமைச்சர் கலைஞர் துணிந்துவிட்டார்
தாம்பரத்தில் தமிழர் தலைவர் பேச்சு

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை உயர வேண் டும் என்பதற்காக எதை எதை எல்லாம் செய்ய வேண்டுமோ, அவை அத்தனையையும் செய்து முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் நேற்று (8.8.2008) தாம்பரத்தில் நடைபெற்ற கூட்டத் தில் கூறிவிளக்கிப் பேசினார்.

தமிழர் தலைவர் கி. வீர மணி அவர்கள் ஆற்றிய உரையில் முக்கிய செய்தியாக குறிப் பிட்டதாவது:

கொட்டும் மழையானாலும் தோழர்கள் பின் வாங்கவில்லை

இன்றைக்கு இப்பொழுது மழை பெய்து கொண்டிருந் தாலும் நம்முடைய தோழர்கள் எடுத்த முயற்சியிலிருந்து பின் வாங்கவில்லை. கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெயிலானாலும் எதைப்பற்றி யும் கவலைப்படாமல் - நம் முடைய பணி தந்தை பெரி யார் அவர்களுடைய கொள் கையை பரப்புவதுதான் இலட் சியம் என்று கருதி தொண்டாற்றக் கூடியவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்.


குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்

என்பது தந்தை பெரியார் அவர்களுக்குப் பிடித்த குறள்.

இமயமலை அருகே மைனஸ் டிகிரி அளவுக்கு பனி உறைந்திருந்தாலும்கூட, இராணுவ வீரர்கள் எப்படி நாட்டைக் காக்க உயிரைத் துச்சமென மதித்துப் பணியாற்றுவார்களோ அது போல பணியாற்றக் கூடியவர்கள் திராவிடர் கழகத் தோழர்கள்.

எவ்வளவு இடையூறுகள் ஏளனங்கள் ஏற்பட்டாலும்

எவ்வளவு இடையூறுகள், ஏளனங்கள் வந்தாலும் தன்னலம் கருதாத, பதவியைத் தேடாத, புகழைப்பற்றி கவலைப்படாமல் பணியாற்றக் கூடிய ஒரு அமைப்பு இந்தியாவில் இருக் கின்றது என்று சொன்னால் அது அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய பகுத்தறிவு இயக்கம் தான், மனிதநேய இயக்கம் தான் என்பதை எவரும் மறந்து விட முடியாது. சமத்துவத்தை சகோதரத்துவத்தை

மக்களுக்கு சமத்துவத்தை சகோதரத்துவத்தை, மனித நேயத்தை - ஒருவரை ஒருவர் அன்புடன் நேசித்து வாழ வேண்டும் என்பதை நாள்தோறும் போதிக்கின்ற இயக்கம் தான் திராவிடர் கழகம்.

நீங்கள் எங்களை விரும்பி னாலும், விரும்பாவிட்டாலும், ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ, தெரியாமலோ எங்களுடைய கொள்கையால் நீங்கள் பயன்பெற்றிருக்கின்றீர்கள் பயன் பெற்று வருகின்றீர்கள்.

அவர் பக்திமானாக இருந் தாலும் சரி அல்லது வேறு எவராக இருந்தாலும் பெரியார் இயக்கத்தின் உழைப்பால் அதனுடைய பலனை அனுபவித்துக் கொண்டு வருகின்றவர்கள்.


உங்களை வாழ வைக்கின்ற கொள்கை

இந்தக் கொள்கைதான் உங்களை எல்லாம் வாழவைக் கக்கூடிய கொள்கை. இன்றைக்கு தந்தை பெரியார் அவர்களுடைய வழியில் - இந்தியாவிற்கே சமூகநீதித் தத்துவத்தை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு தனித் தமிழர் ஆட்சியை நடத்திக் கொண்டு வருபவர் நம்முடைய கலைஞர் அவர்கள் ஆவார்கள். மழை எதையாவது எதிர் பார்க்கிறதா? பயிர்கள் செழிக்க மனிதகுலம் தழைக்க - மக்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது போல, மூச்சுக்காற்று எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ அதை அவன் உணர்ந்தாலும், உணரா விட்டாலும் கூட -

மழைபோல பிராண வாயு போல

மழை போல, பிராண வாயு போல மக்களுக்காகப் பாடு பட்டுக் கொண்டிருக்கின்ற இயக்கம் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய திராவிடர் கழகமாகும். எல்லார்க்கும், எல்லாமும் கிடைக்க வேண்டும். மேலை நாட்டு மக்களைப் போல நம்முடைய மக்களும் வாழ்க்கைத் தரத்தில் உயர வேண்டும் என்று மக்களுக்காகப் பாடு பட்டுக் கொண்டு வருகின்ற அறிவியல் ரீதியான இயக்கம் தான் திராவிடர் கழகம். நாங்கள் அமைச்சர்களாக ஆக வேண்டும் என்று விரும்பு கின்றவர்களா? அல்லது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கருதுகின்றவர்களா? இல்லை. ஒரு போதும் பதவிப் பக்கமே தலை வைத்துப் படுக்காதவர்கள். வருங்கால முதல்வர், வருங்கால முதல்வர் என்று நேற்று, இன்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டிருக் கின்றார்கள்.

ஒரு டஜன் முதலமைச்சர்கள்

இப்படி சொல்கிறவர்களே ஒரு டஜன் முதலமைச்சர் கனவுக்காரர்கள். சிங்கப்பூருக்கு இங்கு இருக்கிறவர்களை ஏற் றுமதி செய்து - அங்கு லட்டு தயாரித்து - திருப்பதி லட்டு என்று சொல்லி லட்டு விற் பனை செய்தார்கள் அண்மை யிலே. நான் அண்மையிலே சிங்கப் பூருக்குச் சென்றிருந்தேன். திருப்பதி கோவிலின் அர்ச்சகர் விமானம் ஏறி வெளிநாடு சென்றார் என்பதற்காக அவரை மீண்டும் அர்ச்சகர் பதவிக்கு அனுமதிக்க முடியாது. காரணம், மனுதர்மத்தில், சாஸ்திரத்தில் சனாதனிகள் கடல் தாண்டக் கூடாது என்று இருக்கின்றது என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், அதே திருப்பதி ஏழுமலையான் பத்மாவதி தாயார் இரு கடவுளர் சிலைகளும் விமானத்தில் ஏறி சிங்கப் பூருக்குச் சென்றிருக்கின்றன. அர்த்தமுள்ள இந்து மதத்தைச் சார்ந்தவர்களே! கடல் தாண்டிய வெங்கடா ஜலபதியையும், பத்மாவதி தாயாரையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளலாமா?

கலைஞர் அரசின் சாதனைகள்

இந்த நாட்டிலே தீவிரவாதத் திற்குக் காரணமே மதத் தீவிர வாதம்தான். நமது முதல்வர் கலைஞர் அவர்கள் - ஏராள மான அளவுக்கு தொழிற் சாலைகள் உருவாவதற்கும், இளைஞர்களுக்கு 2000 பேருக்கு வேலை, 20,000 பேருக்கு வேலை, 30,000 பேருக்கு வேலை என்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்குத் தொடர்ந்து நாள்தோறும் மிகச் சிறப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு செயல்படுத்திக் கொண்டு வரு கின்றார்.

செய்யாறில் காலணி தொழிற்சாலை உருவாக்கப் படும் - 20,000 பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின் றார். 150 ஆண்டுக் காலக் கனவு ரூ.2500 கோடி ரூபாய் செலவில் நம்முடைய கலைஞர் அவர் கள் எடுத்த முயற்சியில் அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் உதவியோடு சேது சமுத்திரத் திட்டத்தை செயல் படுத்திக் கொண்டு வருகின்றார்.

சேதுக்கால்வாய் பாக்கி வெறும் 12 கி.மீ.,

மற்ற மாநிலத்துக்காரர்கள் பொறாமைப்படக் கூடிய அளவுக்கு டி.ஆர். பாலு இந்தத் துறையில் ஒரு புரட்சியையே செய்து கொண்டு வருகின்றார்.

சேதுக் கால்வாய்த் திட்டப் பணி முடிய இன்னும், ஒரு 12,13 கி.மீ., தான் பாக்கியிருக்கிறது. ராமன் பெயரைச் சொல்லி, சுப்பிரமணியசாமியும், ஜெயலலிதாவும் அதைத்தடுக்க நினைக்கிறார்கள். தேர்தல் 2009-ல் வரப் போகிறது. சேதுக் கால்வாயில் கப்பல் ஓடி விட் டால் அந்தப் பெருமை கலைஞருக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் வந்து விடுமே என்கிற காரணத்தால், உச்சநீதி மன்றத்தின் மூலம் எப்படியா வது தடுக்கப்பார்க்கிறார்கள்.

கலைஞருக்கு ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் தொல்லை. இன்னொரு பக்கம் நீதிமன்றம் தொல்லை. இன்னொரு பக்கம் பார்ப்பனப் பத்திரிகையாளர்கள் ஊடகத்தினர் தொல்லை கொடுக்கிறார்கள்.

கலைஞர் அவர்கள் துணிந்து விட்டார். பெரியா ருடைய கொள்கை வழியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்து முடித்துவிட வேண்டும் என்று முடிவு கட்டி விட்டார்.

5 முறை முதலமைச்சர் பதவியைப் பார்த்து விட்டார். அவர் பார்க்காத பதவியே கிடையாது.

யாராலும் கலைஞர் அவர் களுடைய செயல்பாடுகளை இனி தடுத்து விட முடியாது. தேர்தல் வாக்குறுதிகளில் அவர் அறிவித்தவற்றில் 10, 20 தவிர அத்தனையையும் அவர் செய்து முடித்து விட்டார். கலைஞரின் தேர்தல் அறிக்கை

கலைஞர் அவர்களுடைய தேர்தல் அறிக்கையைத் தான் இன்றைக்கு இந்தியாவில் இருக் கின்ற பல மாநிலங்கள் பின் பற்றுகின்றன. ஆளுங்கட்சியும் காப்பி அடிக்கிறது . எதிர்க் கட்சியும் காப்பி அடிக்கிறது.


சென்னையில் செப்டம்பர் 6,7 தேதிகளில் திராவிடர் கழகத்தின் சார்பில் இளை ஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு பகுத்தறிவாளர் கழக மாநாடு நடைபெறுகிறது.

பெரியார் பன்னாட்டமைப் பின் சார்பில் பகுத்தறிவாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு சமூக நீதி விருது வழங்கப்படுகிறது.

மாநாட்டினைக் கண்டு களிக்க அனைவரும் வாரீர்!


இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.

0 comments: