புதுச்சேரி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம் ஜித் சென் என்பவர் டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.கே. சர்மாவுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு:
டில்லி உயர்நீதிமன்றத்தில் தற்காலிகத் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்து ஒய்வுபெற்ற விஜேந்தர் ஜெயினுக்கு நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில், உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கம் பூஜை ஒன்றை செய்துள்ளது. இந்தப் பூஜையை உயர்நீதிமன்றப் பணியாளர் ஒருவரே செய்து வைத்திருக்கிறார். இம்மாதிரிச் சடங்குகள் பிற மதத்தைச் சார்ந்தவர் களின் மனதைப் புண்படுத்தி இருக்கும். இந்த மாதிரியில் உயர்நீதி மன்றத்தின் நிகழ்ச்சிகளில் பூஜை களைச் செய்யவோ, மந்திரங்கள் என்ற கலோகங் களைக் கூறுவதோ நடைபெறக் கூடாது எனத் தடுக்கவேண்டும்.
குறைந்தபட்சம் - இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நீதிபதிகளை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் இம்மாதிரி விரும்பதகாத மதச்சார் பின்மைத் தத்துவத்திற்கு எதிரான செய்கைகள் நடைபெறுவதைத் தடை செய்திட - தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
------------------ "விடுதலை" - 11-2-2007
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment