Search This Blog
24.1.10
திராவிடர் என்று அழைத்துக் கொள்ளுவது ஏன்?
தோழர்களே! இந்நாட்டுக்குரிய மக்கள் நாம். நாம் திராவிடர் நாட்டு மக்கள் என்று கூறப்பட்டு வருகிறோம். யாராலே, எப்பொழுது அந்தப் பெயர் வந்தது என்பது பற்றி இப்பொழுது விவரிக்க சமயம் இல்லை. அது தேவையும் இல்லை.
ஆகவே நம் மக்களுக்குத் திராவிடர் என்பதைத் தவிர வேறு பெயர் இன்றைய தினம் சொல்வதற்கு இல்லை. ஏதாவது சொல்ல வேண்டுமானால் சூத்திரர், தாசர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தப் பெயர் மிகவும் இழிவான கருத்துடையதாகும். இந்த நாட்டிலே மொத்த ஜனத்தொகையில் 100 க்கு 3 பேராகிய பார்ப்பனரைத் தவிர்த்து மற்ற எல்லா பேர்களும் சூத்திரர்கள்தான். அந்தச் சூத்திரர்களைத்தான் நான் இன்று திராவிடர்கள் என்று குறிப்பிடுகிறது.
பார்ப்பனர் தன்மை என்பது ஆரியம் எனப்படுவது. நம்மை திராவிடர் என்று சொல்லாமல் வேறு பெயரால் அழைத்துக் கொள்ளலாம் என்றால், மேலே சொல்லியபடி சூத்திரர்கள் என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை. தமிழர்கள் என்று சொன்னால் ஆகாதா என்றால், இந்த சூத்திரத்தன்மையை அது குறிப்பிடவில்லை. ஒரு காலத்திலே தமிழர்கள் என்று குறித்து இருக்கலாம். ஆனால் இப்பொழுது அது மொழியின் பேரால் போய்விட்டது. ஆகையால் தமிழர் என்று இப்பொழுது சொன்னால் அந்த மொழியைப் பேசுகிறவர்களை மாத்திரம் குறிக்கிறது. அதில் பார்ப்பானும் சேர்ந்து கொள்ளுகிறான். ஆகையால்தான் சூத்திரன் என்ற அர்த்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் திராவிடர்கள் என்று குறிப்பிடுவதிலே, யாரை குறிப்பிடுகிறதென்றால், பார்ப்பனரைத் தவிர்த்த மற்ற மக்களை, சமூதாயத் துறையில் சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், நீசர்கள் என்றும் சொல்லப்படுகிறவர்களைத்தான்.
ஆகையால், இன்று நமக்குத் திராவிடர் சமூதாயத் துறையிலே உள்ள இழிவு நீக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கிய கொள்கை.
--------------- 26-07-1951 இல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 30-07-1951
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
தோழா!
என் வீட்டு வரவேற்பறையில் மாட்டுவதற்கு ஏற்ற தந்தைப் பெரியாரின் மிகச் சிறந்த புகைப்படத்தை தேடிக் கொண்டிருக்கிறேன். தகவல் தந்து உதவுங்களேன்.
Post a Comment