Search This Blog

31.1.10

அதிமேதாவியா சோ ராமசாமி?


எது கலாச்சாரம்?

தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்நாடு அரசு அறிவித்து விட்டதாம்; அதனை ஏற்றுக் கொள்ள முடியாதாம். நாளைக்குத் தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு உத்தரவு வந்தால் ஏற்க முடியுமா என்று (துக்ளக் 27.01.2010) அதிமேதாவியாகத் தம்மை நினைத்துக் கொண்டு திருவாளர் சோ ராமசாமி சென்னையில் பேசியிருக்கிறார். கலாச்சாரத்திற்கு விரோதமானதை, நம்பிக்கைக்கு விரோதமானதை ஏற்க முடியுமா என்று வினாவும் தொடுத்துள்ளார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றால் அதே குறிப்பிட்ட தேதியில் கொண்டாடலாம். தீபாவளி என்பது அதுபோல ஒரு குறிப்பிட்ட அதே தேதியில்தான் வருகிறது. அந்தக் குறிப்பிட்ட அதே தேதியில் தான் கொண்டாட வேண்டும் என்று சோவால் உறுதிப்படுத்த முடியுமா?

புரட்டாசி மாதத்தில்கூட தீபாவளி கொண்டாடப்படுவதுண்டு அய்ப்பசியிலும் வருகிறது. இந்த நிலையில் இரண்டையும் ஒப்பிடுவது மொட்டைத் தலைக்கும் (அவரே மொட்டை தானே!) முழங்காலுக்கும் விளக்கெண்ணெய் குழைத்து முடிச்சுப் போடப் பார்க்கிறார்.

தீபாவளியை நமது கலாச்சாரத்தோடு சம்பந்தப்படுத்துகிறாரே அதாவது உண்மையா? இந்தத் தீபாவளி தொன்று தொட்டு கலாச்சார அடிப்-படையில் வரக்கூடியதுதானா? எப்பொழுது முதல் இது கொண்டாடப்படுகிறது?

தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று. மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென்தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாப்பட்டு வரும் பெரு நாள். இது பழந்தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை. சென்னை, செங்கற்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக்காலம் வரையில் இருந்ததில்லை.

இப்படி சொல்லியிருப்பவர் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர். கடவுள் மறுப்பாளரும் அல்லர். அ.கி, பரந்தாமனார் (மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் 433 - 434) எழுதியிருக்கிறாரே அதற்குப் பதில் என்ன? வழக்கமானது என்று சொல்வதில் பசையிருக்கிறதா?

பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் விழுந்தான் ராட்சசன் என்றும், பன்றி அவதாரம் எடுத்து பூமியை மகாவிஷ்ணு மீட்டார் என்றும், அந்தப் பூமியும் மகாவிஷ்ணுவும் புணர்ந்து நரகாசுரனைப் பெற்றனர் என்றும், அவன் பூதேவர்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) தொல்லை கொடுத்தான் என்றும் கிருஷ்ணபரமாத்மாவும், அவனது மனைவியும் கொன்றனர் என்றும், அப்படிக் கொல்லப்பட்ட நாள் தான் தீபாவளி என்றும் சாராயம் குடித்த பைத்தியக்காரன் உளறுவதுபோல சொல்லப்படுவதை ஏற்க முன்வராவிட்டால், அது நமது கலாச்சாரத்துக்கு விரோதம் என்று கூறும் பார்ப்பனர்களின் தில்லுமுல்லுகளை தமிழர்கள் உணர வேண்டாமா?

------------------------- மயிலாடன் அவர்கள் 31-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

சி.வேல் said...

vera vellai illaiya

Unknown said...

கலைஞருக்கு நீங்கள் என்ன சிங் சக் ஜால்ராவா?. தை மாதத்தை நீங்கள் வேண்டுமானால் தமிழரின் முதல் நாள் என்று ஏற்று கொள்ளுங்கள். எங்களுக்கு சித்திரை முதல் நாள்தான் வருடப் பிறப்பு

நம்பி said...

//UREKA said...

கலைஞருக்கு நீங்கள் என்ன சிங் சக் ஜால்ராவா?. தை மாதத்தை நீங்கள் வேண்டுமானால் தமிழரின் முதல் நாள் என்று ஏற்று கொள்ளுங்கள். எங்களுக்கு சித்திரை முதல் நாள்தான் வருடப் பிறப்பு
February 1, 2010 4:14 PM //

இல்லையே கலைஞர் கட்சியான திமுக வுக்கு ஒரு கோடி உறுப்பினர் இருக்கிறார்களே...அவர்கள் சார்ந்த குடும்பங்கள் இருக்கிறதே...இன்னும் அரசியல் சாராத தமிழர்கள், பிற இயக்கத் தமிழர்கள் குடும்பங்கள், தமிழக விவசாய குடும்பங்கள் இருக்கிறதே.... இவர்களின் ஆதரவு போதும்...அவர்கள் தை மாதம் தான் தமிழரின் முதல் நாளாக கொண்டாடுகின்றார்கள். அதை நீங்கள் மாற்ற முடியாதே. விரும்பியவர்களுக்குத்தான் தமிழரின் முதல் நாள்...விரும்பாதவர்களை பற்றி கவலை இல்லை.