Search This Blog

20.1.10

தலித் விடுதலை முன்னோடி பெரியார் - 8
இதுதான் யானை என்று உருவகப்படுத்திக் கொண்ட விழி இழந்த அய்வர் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.பகுத்தறிவு ஒளி மூலம் நமது விழிகளைத் திறந்த சமுதாய மருத்துவராம் தந்தைபெரியாரைப் பற்றி அந்த விழி இழந்தோர் உருவகப்படுத்தியதை விடவும் அதிகமான அளவில் பொய்யும், புனைவுமாக பல உருவகங்களை உலவவிட்டுள்ளனர் பார்ப்பனர்களும் ,பார்ப்பன அடிவருடிகளும்.

எடுத்துக்காட்டாக பெரியார் கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு வீட்டில் பிள்ளையாரை வணங்கினார், வெள்ளைக்காரனுக்கு வால் பிடித்தார்,பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபடவில்லை,அவர்களை இழிவாகப் பேசினார் என்பது போன்ற பல அவதூறுகளை அள்ளிவீசி வருகின்றார்கள். இந்த அவதூறுகள் பெரியார் உயிரோடு இருந்த போதிலிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. இந்த அவதூறுகளுக்கெல்லாம் பெரியாராலும், பெரியார் தொண்டர்களாலும் மற்றும் நேர்மையான வரலாற்று ஆய்வாளர்களாலும் தகுந்த ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்பட்டே வந்துள்ளது.

இருந்தாலும் திரும்பத் திரும்ப அதே அவதூறுகளை ஒரு சில அரைவேக்காடுகள் இப்போதும் சொல்லிவருகிறார்கள். இவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நாம் http://thamizhoviya.blogspot.com “தமிழ் ஓவியா” வலைப்பூவில் பதில் அளித்துள்ளோம். குறிப்பாக பெரியார், பெரியார்-தலித், அய்யத்தெளிவு என்ற சுட்டியை சுட்டிப் படித்தால் உண்மையை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பணிப்பளு மற்றும் குடும்பச் சுமை காரணமாக இந்தப் பார்ப்பனக்கும்பலுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க கால தாமதமாகிறது. அதோடு ஏற்கனவே இது குறித்து பதில் அளித்து விரிவான நூல்கள் வந்து விட்ட நிலையில் திரும்பத் திரும்ப எழுத வேண்டுமா? என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

அந்த வகையில் 2004 அம் ஆண்டு “உலகத் தமிழர் சக்தி” ஜூன் 2004 இதழில் “தலித் தலைமை –பெரியாரின் நிலை என்னவாக இருந்தது?” என்ற தலைப்பில் டாக்டர் வேலு அண்ணாமலை அவர்கள்,எழுதிய கட்டுரைக்கு மறுப்பாக நான் எழுதிய கட்டுரையை இங்கு தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறேன்.
சமூகப் பொறுப்பில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று கூறியதோடு இந்த கட்டுரையை தட்டச்சு செய்து கொடுத்த எனது இனிய தோழர் “ஆதிஆனந்த்அப்பா” அவர்களின் உதவிக்கு மிக்க நன்றி
****************************************************************************


கேள்வி
: தனது கட்சியில் தலித் தலைமையை ஊக்குவித்திருப்பாரா? தனது பிரச்சாரங்களில் தலித் தலைவர்களை ஈடுபடுத்தியிருப்பாரா?

நமது பதில்: பெரியார் இயக்கத்திற்கு ‘திராவிடர்கழகம்’என்ற பெயர் இருந்தாலும் இவ்வியக்கத்தை ‘பள்ளன்கட்சி, பறையன்’கட்சி என்றே அழைத்து வந்தனர் அந்த அளவு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை காட்டி பாடுபட்டு வந்தனர் பெரியாரும் பெரியார் இயக்கத்தினரும். இந்த வரலாறுகள் எல்லாம் டாக்டர் வேலு அண்ணாமலைகளுக்கு தெரியுமா?

“தோழர்களே உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும் அவரால்தான் பஞ்கமர்கள், கடையர்கள் இழிபிறப்பு என்கின்ற கொடுமைகள் நீங்குமென்றும் நம்பினேன். ஆதனாலேயே உங்களுக்குத் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படி பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன்.


----------------(விடுதலை 10.07.1947)

என்று பெரியார் கூறியுள்ளார். “தலித் தலைமை” பெரியாரின் நிலை என்ன என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டீர்களா டாக்டர் வேலு அண்ணாமலை.
ராவ் பகதூர் என்.சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ் போன்ற தலைவர்கள் எல்லாம் பெரியார் இயக்கத்தில் பிரச்சாரம் செய்தவர்கள்தான், அன்றுமட்டுமல்ல இன்றும் (நாம் வேறுபடுத்தி பார்பதில்லை என்றாலும், ஒரு புள்ளி விபரத்திற்காக குறிப்பிடுகிறோம்) தாழ்த்தப்பட்ட தோழர்கள் பல பொறுப்புகளில் திராவிடர் கழகத்தில் பங்கு பெற்று வருகின்றனர் என்பதையும் டாக்டர் வேலு அண்ணாமலைகளுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கேள்வி: பெரியாரின் கொள்கை என்பது பார்பன எதிர்ப்பு. சூத்திரர்களுக்கான இயக்கம்தானே தவிர தலித்துகளுக்கான இயக்கம் இல்லை.

நமது பதில்: இக்குற்றச்சாட்டு குறித்து நாம் ஏற்கனவே தெளிவாக விளக்கியுள்ளோம். (தாழ்த்தப்பட்டவர்களையும் சேர்த்துத்தான் சூத்திரர்கள் என்று பெரியார் அழைத்தார்). இருப்பினும் பெரியாரின் பின்வரும் மேற்கோள் மேலும் இவர்களை தெளிவுபடுத்தும் என்பதால் அதை அப்படியே தருகிறோம்.

“முதலாவதாய்ச் செய்யப்படவேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய் கூறுவோம். ஆவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பல கோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.
இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்ததையே அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ‘ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரை நிமிடம் கூட இருக்கக் கூடாதவைகளாகும்.

---------------(பகுத்தறிவு - கட்டுரை 1938 இதழ் 10 மலர் 3)

இதேபோல் “பறையர் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திதரப்பட்டம்போய் விடும் என்று கருதுகிறீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டடாள்களேயாவீர்கள் "
--------------------(குடிஅரசு 11.10.1931)

என்று சொன்ன பெரியாரை, பெரியாரின் இயக்கத்தை சூத்திரர்களுக்கான இயக்கம் என்று வரையறுப்பது அபத்தமானது. அறிவு நாணயமற்ற செயல்.
சூத்திரர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் பெரியாரைக் காரணமாக்க காட்டுவது எவ்வகையில் நியாயம்?

இது குறித்து தோழர் திருமாவளவன் தரும் விளக்கம் இதோ:-

“மேலவளவில் படுகொலை நிகழ்த்தின கள்ளர்களை எதிர்க்கிறோம் என்பதானாலேயே நாட்டில் உள்ள கள்ளர்களை எல்லாம் எதிர்க்கிறோம் என்று பொருளல்ல. விழுப்புரத்தில் 12 பேரை வெட்டிக் கொன்ற வன்னியர்களை எதிர்க்கிறோம் என்பதனாலேயே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வன்னியர்களையும் எதிர்க்கிறோம் என்று பொருளல்ல. ஜாதிய வன்கொடுமை எங்கு நிகழ்கிறதோ அதே இடத்தில் அந்த கொடூரச் செயலை எதிர்க்கிறோம். மற்ற இடங்களில் கரம் கோர்த்து நிற்கிறோம். கரம் கோர்த்து நிற்க வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

--------------------- (நந்தன் 30-6-1998)

தோழர். திருமாவளவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் பெரியார் இயக்கத்தினர் கரம் கோர்த்து செயல்பட்டு வருகின்றனர். யார் யாரெல்லாம் ஒடுக்கப்பட்டார்களோ அத்தனை மக்களுக்காகவும் உழைத்த பெரியார் இயக்கத்தை சூத்திரர்களுக்கான இயக்கம் என்று பேதப்படுத்துவது “இந்துத்துவா” வெறியர்களுக்கே சாதகமாக அமையும் என்பதை டாக்டர் வேலு அண்ணாமலைகள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டுகிறோம்.


------------------------தொடரும்...

1 comments:

UnmaiAlwaysSudum said...

All this is fine... When are you publishing the great cheating by the Periyar Maniyammai doomed (oops) deemed university by the great ________________.

was expecting today from you an article linking this to some paarpans in delhi...

May be it is ok for a Non Paarpan to cheat tamils... I dont know...