Search This Blog

19.1.10

அம்மன் சாமிக்குத் தாலி கட்டியவர் யார்? அர்ச்சகப் பார்ப்பான்தானே?


‘‘அம்மன் தாலி’’

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சாமியின் தாலி கழன்று விழுந்துவிட்டதாம்! அவ்வளவுதான். கும்பிட வந்த பக்தைகள் தங்கள் தாலிகளை ஒருமுறை தொட்டுப் பார்த்து கண்களில் ஒத்திக்கொண்டு, கோயில் வளாகத்தில் உள்ள பழைய வேப்பமரத்துக்கு மஞ்சள் கயிறால் தாலி கட்டினார்களாம்.


திருப்பதியில் கொஞ்ச காலத்திற்குமுன் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரம்மனின் தாலி கயிறு இப்படித்தான் அறுந்து விழுந்தது. அப்பொழுதும் பெண்கள் இப்படித்தான் அவதிப்பட்டனர். வெளி இடங்களில் இருந்த தங்கள் கணவன்மார்களைக் கூப்பிட்டு, புதிதாகத் தாலி கட்டச் செய்தனர்!


உருவமற்றவர் கடவுள், கண்ணுக்குத் தெரியாதவர் கடவுள் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மனிதர்களைப் போலவே கடவுள்களுக்குக் குடும்பங்களை ஏற்படுத்தி குழந்தைகள், குட்டிகள் கடவுள்களுக்கு என்பதெல்லாம், சிறுபிள்ளைகள் மண்ணைக் குழைத்து விளையாடும் அசல் கூட்டாஞ்சோறு ‘பிள்ளை விளையாட்டே!’ இதனால்தான் வடலூர் இராமலிங்க அடிகளார் இந்தப் பக்திப் போக்கை பிள்ளை விளையாட்டு என்று கேலி செய்தார்.


அம்மன் சாமிக்குத் தாலி கட்டியவர் யார்? அர்ச்சகப் பார்ப்பான்தானே? தாலிக் கயிறு நைந்து இருந்தால் வேறு கயிறு வாங்கிக் கட்டியிருக்கவேண்டியதுதானே! அதைக்கூடப் பொறுப்பாகச் செய்யாத அந்த அர்ச்சகன்மீது கோபம் வருவதற்குப் பதிலாக வேப்ப மரத்துக்கு மஞ்சள் கயிறு கட்டுவதால் என்ன பலன்?
நீண்ட காலமாக விற்காமல் தேங்கிக் கிடந்த மஞ்சள் கயிறுகளை விற்றுத் தீர்த்துவிட்டனர் வியாபாரிகள்.


சகோதரர்கள் உயிர்களுக்கு ஆபத்து _ சகோதரிகளுக்குப் பச்சைப் புடவை வாங்கித்தர வேண்டும் என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, தேங்கிக் கிடந்த பச்சைப் புடவைகளை விற்றுத் தீர்த்தனர் தந்திரக்காரர்களான வியாபாரிகள் முன்பு. இப்பொழுதோ இந்தக் கூத்து!


இதில் வேடிக்கை என்னவென்றால், அம்மன் தாலி அறுந்து விழுந்ததாக வந்த செய்தி உண்மையல்லவாம்; அது வதந்திதானாம்! இந்த வியாபாரிகள் பலே கெட்டிக்காரர்கள்தாம்!


ஆமாம், அதுதான் வதந்தியாயிற்றே! பக்தைகள் என்ன செய்வார்கள்? வேப்பமரத்தில் கட்டிய தாலிக் கயிறுகளை அவிழ்த்து எறிந்து விட்டார்களா? அல்லது கட்டப்பட்ட அந்தக் கயிறுகள் தானாக அறுந்தும் விழுந்துவிட்டனவா?
உண்மையை அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! பக்திப் பைத்தியம் முற்றிவிட்டால் என்னதான் செய்ய மாட்டார்கள்?

------------------- - மயிலாடன் அவர்கள் 19-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

manudapriyan said...

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் நிச்சயம் இருப்பார்கள்

நடிகன் விவேக் சொன்னது போல் இவங்களெல்லாம் 100 பெரியார் வந்தா கூட திருத்த முடியாது

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

திருந்தாதவர்களை விட்டுவிட்டு நாம் வேலையை ஒழுங்காய் செய்தாலே போதும்!@

http://sagotharan.wordpress.com/

நம்பி said...

//manudapriyan said...

ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் நிச்சயம் இருப்பார்கள்//

இது பகுத்தறிவுக்கு ஒவ்வாத தத்துவம் தான்...ரொம்ப காலமாக இப்படி எல்லோரும் சொல்லி சொல்லி வழ்க்கமாகி விட்டது.

ஏமாறாமல் ஏமாற்றம் எது? என்பதை பற்றி எப்படி அறிந்து கொள்ளமுடியும்?

அப்படி ஏமாந்து பழக்கப்பட்டவர்கள் தான் பின்னாளில் ஏமாற்றுபவர்களாக மாறுபவர்கள்...?

அவன் புத்திசாலி! அவனை யாரும் ஏமாற்றமுடியாது! என்று விளம்பரப்படுத்திக்கொண்டல் போதும்...

அவனை விட புத்திசாலி அவனை ஏமாற்றப்போகிறான். அவன் புத்திசாலித்தனத்தின் அளவு தெரிந்துவிட்டால் மேட்டர் முடிந்தது. இங்கே எங்கே? ஏமாறுபவர்கள் வந்தார்கள்...எல்லாம் புத்திசாலிகள் தான் வந்தார்கள். ஏமாந்தவரும் புத்திசாலி...ஏமாற்றியவரும் புத்திசாலி.

நானே ஒரு ஏமாத்துக்காறன் என்னையே ஏமாத்திப்புட்டானே...? வரட்டும் ஒருநாள், நான் எவ்வளவு பெரிய ஏமாத்துக்காரன் என்பதை அவனுக்கு காட்டுகிறேன்.

எல்லாமே இந்த சமூகத்திலிருந்து தான் இந்த வித்தைகள் எல்லாம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அறியாமை என்பது தான் சரியாக வரும். மக்களின் அறியாமையை போக்குவது தான் பகுத்தறிவாளர்களின் முக்கிய கடமையாக இருக்கவேண்டும்.