நெதர்லாந்து சூத்திரன்!
ராமேஸ்வரம் வந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியர் ரெம்கோ சுனோய்ஷ், ராம்தாஸ் என பெயர் மாற்றம் செய்து இந்து மதத்துக்கு மாறினார். நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ரெம்கோ சுனோய்ஷ் (27). அந் நாட்டில் வரலாறு ஆசிரியராக பணியாற்றும் இவர், இந்து மத சம் பிரதாயங்களின்மீது பற்று ஏற்பட்டதால், கிறிஸ்தவ மதத்திலிருந்து மாறி, இந்து மதத்தை பின்பற்ற விரும்பினார். இதைத் தொடர்ந்து , கடந்த டிசம்பரில் இந்தியா வந்த இவர், தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்குச் சென்று விட்டு ராமேஸ்வரம் வந்தார். நேற்று மாலை அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய இவர், இதன் அருகில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்தில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், முறைப்படி இந்துவாக மாறினார். இந்துமத சம்பிரதாயப்படி அவருக்கு சடங்குகள் செய்து ராம்தாஸ் என பெயரும் சூட்டப்பட்டது. இதன் பின் ராமநாதசுவாமி கோயில் சென்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அவர் கூறியதாவது:
இந்துமத சம்பிரதாயங்கள், கலாசாரம், ஆன்மிக விசயங்களில் நீண்ட நாட்களாக ஈடுபாட்டுடன் இருந்தேன். இதற்கு முன் இரண்டு முறை இந்தியா வந்துசென்றபோதும், இந்து மதத்திற்கு மாறுவதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இன்று, ராம்தாஸ் என்ற பெயருடன் நான் இந்துவாக மாறியதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இந்துவாக மாறியபின் முதன்முதலில், ராமநாதசுவாமியை தரிசனம் செய்தது எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம், என்றார்.
மேற்கண்டவை தினமலர் (19.1.2010) வெளியிட்டுள்ள தகவலும் படமும் ஆகும்.
இந்து மதத்தில் எந்த ஒருவனும் ஒரு ஜாதியில் இருந்தே தீர வேண்டும். இந்து மதத்திலிருந்துவருணத்தை ஜாதியைக் கழித்தால் எஞ்சியிருப்பது பூஜ்யம்தான்.
இந்து மதத்தில் இருந்துகொண்டு ஜாதியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒருவன் சொன்னாலும் அவன் சாத்திரப்படி, இந்திய அரசமைப்புச் சட்டப்படி சூத்திரனே!
இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஆசாமியை இந்து மதத்தில் சேர்ந்துள்ளார்களே அப்படியானால் அவர் எந்த ஜாதியின் பட்டியலில் அடைக்கப்படுவார்?
அதுவும் இந்த ஜென்மத்தில் குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பது போன ஜென்ம கர்மப் பலனைப் பொறுத்தாயிற்றே இந்து மதத்தில் நெதர்லாந்து நாட்டுக்காரருக்கு இது பொருந்துமா?
பூணூல் அணிவிக்கப்பட்டுள்ளார். இதன் பொருள் என்ன? பார்ப்பனர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளாரா? இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. தினமலருக்கு அந்த வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கு சாதாரணமானதல்ல. காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஒரு இடத்தில் இந்தக் கூத்து நடத்தப்பட்டுள்ளதால் விவரத்தைக் கேட்டுச் சொன்னால் ஒருமுக்கியப் பிரச்சினையில் தெளிவு கிடைக்குமே.
2005ஆம் ஆண்டுக்கு நாம் பயணித்தால் வேறு ஒரு தகவல் இது தொடர்பாகக் கிடைக்கும் ஜூனியர் விகடன் (23.11.2003) இதழைப் புரட்டினால் இதற்கு எதிர்மாறான தகவல் ஒன்று தட்டுப்படும்.
அமெரிக்கப் பெண் பமீலா கேஃபிளிக் (வயது 28) என்பவர் வாரணாசியைச் சேர்ந்த கணினிப் பொறியாளரானஅனில்யாதவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், இந்து மதத்திற்கும் மாறினார், வடநாட்டில் உள்ள கோயில்களைச் சுற்றிப் பார்க்க ஆசை கொண்டார்.
ஒரிசா, கோயில்களுக்குப் புகழ் பெற்ற மாநிலம் ஆயிற்றே! புவனேசுவரத்தில் உள்ள லிங்கராஜ் கோயிலுக்குள் கணவரோடு நுழைந்தார் இந்துவாக மாறிய அந்த வெள்ளைக்காரப் பெண்.
உள்ளே நுழையாதே நீ இந்து அல்ல என்று கோயில் ஊழியர்கள் உறுமினார்கள்.
தான், இந்து மதத்திற்கு மாறி ஓர் இந்துவையும் திருமணம் செய்து கொண்டதாக எவ்வளவோ கூறியும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்துவாக மாறியதற்கான அத்தாட்சியுடன் மறுநாளும் கோயிலுக்குவந்தார்; அப்பொழுதும் தோல்விதான். ஒரு கட்டத்தில் அந்தத் தம்பதிகள் கோயில் ஊழியர்களால் தாக்கவும் பட்டனர்.
வெள்ளைக்காரப் பெண், பிரச்சினையை விட்டு விடுவதாக இல்லை. காவல்துறைக்குச் சென்று தாங்கள் தாக்கப்பட்டது குறித்து புகார் கடிதம் கொடுத்தார்.
கோயில் விவகாரம் ஆயிற்றே தலையிடுமா காவல்துறை? அதிலும் தோல்விதான் மறுநாள் ஏடுகளில் இந்தப் பிரச்சினை இடம் பெற்ற போது வேறு வழியின்றி ஒப்புக்காகக் காவல்துறை புகாரைப் பதிவு செய்ததோடு தன் கடமையை முடித்துக் கொண்டது.
இதுபற்றி ஜூனியர்விகடன் என்ன கூறுகிறது?
பொங்கி தீர்க்க ஆரம்பித்திருக்கும் பமீலா நான் மதம் மாறியதற்காக இப்போது வெட்கப்படுகிறேன். இந்து மதத்துக்கு மாறிய பிறகும் எங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததோடு, அதை நியாயப்படுத்திப் பேசுகிறார்கள் கோயிலின் நிர்வாகிகள். என் கணவரை திட்டமிட்டு வம்புக்கு இழுத்து தகராறு செய்தனர். முகத்தில் ஒரு குத்து விட்டு விரட்டிவிட்டனர். இந்தப் பிரச்சினையை நான் இத்துடன் விடப் போவதில்லை. மதம் மாறிய சான்றிதழ் மற்றும் போட்டோக் களுடன் ஒரிசா முதல்வருக்கும் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கும் இமெயில் மூலம் புகார் அனுப்பியிருக்கிறேன் என ஆவேசத்துடன் பேசுகிறார்.
கோயில் நிருவாகிகளில் ஒருவரான ராம்காந்த் மிஸ்ராவிடம் இந்த விவகாரம் பற்றிக்கேட்டால் அவர் என்ன சொல்கிறார்? நெற்றியில் திலக மிட்டுக் கொண்டால் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா? என ஆவேசப்பட்டார். கோயிலின் வாசலில் எழுதி மாட்டப்பட்டுள்ள இந்துக்கள் அல்லாதவர்களுக்கு கோயிலில் நுழைய அனுமதியில்லை என்ற போர்டைக் காட்டினார்.
கோயிலின் டிரஸ்டிகளில் ஒருவரான சரேஜ்மிஸ்ரா ஒரிசாவில் முக்தி மண்டலம் என ஒரு அமைப்பு உள்ளது. பூரி சங்கராச்சாரியாரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பு, இதுபோன்ற விவகாரங்களை விசாரித்து முடிவெடுக்கிறது. இதில் இந்து மதக் குருமார்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மதம் மாறியவர்பற்றி நன்கு விசாரித்து இந்த அமைப்பு ஒரு சான்றிதழ் தரும்; இதை வைத்து கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்துவிடும். பிரச்சினைக்குரிய தம்பதி இந்த அமைப்புக்கு விண்ணப்பிக்கவில்லை என்று குற்றம் சாற்றுகிறார்.
அடுத்து என்ன? பூரி சங்கராச்சாரியார் நிஷ்சாலனந்த் சரஸ்வதியிடம் இந்தப் பிரச்சினை செல்லுகிறது.
அந்தப் பெரியவாள் என்ன திருவாய் மலர்ந்தார்?
வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால், அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது. ஆனால் கோயில் வழி பாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மாறுபடுகிறது. இந்து சனாதன தருமத் தின்படி கோயில் வழிபாடுகள் வர்ணா சிரமத்துக்கு அல்லது ஜாதியினரின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன. வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத் துக்கு அப்பாற்பட்டவர்கள் எனவே வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தாது. யார் வேண்டுமானா லும் இந்து மதத்துக்கு மாறலாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
உலகில் எல்லா மதங்களிலும் விதிகளும் வரைமுறைகளும் உள்ளன. இந்து கடவுள்கள்மீது உண்மையான பக்தியும், நம்பிக்கையும் ஒருவன் கொண் டிருப்பானே யானால், தன்மீது விதிக்கப் படும் இந்த விதிகளையும், வரைமுறை களையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும். பெரியவாள் தம் பெரிய வாயிலிருந்து உதிர்த்த புன்(ண்)மொழிகள்தான் இவை.
இந்து மதத்தில் யார் வேண்டுமா னாலும் சேரலாமாம்; ஆனால் எந்தத் தரமான இந்து என்றே சம்பந்தப் பட்டவர்கள் முடிவு செய்து கொள்ள வேண்டுமாம்.
இதன் மூலம் இந்து மதம் என்றாலே அங்கே அனைவரும் சமநிலையில் உள்ளவர்கள் இல்லை என்பதை ஆணி அடித்து ஓங்கிக் கூறிவிட்டார். அங்கே பல தரக் கட்டுப்பாடுகள் தயாராக இருக்கின்றன; அவற்றை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டுமாம், புரிகிறதா?
தன்னைச் சமமாக மதிக்காத ஒரு மதத்துக்கு இன்னொரு மதக்காரன் வரவேண்டிய அவசியம் மகாத்மியம் என்னவிருக்கிறது?
நெதர்லாந்து நாட்டுக்காரரான ரெம்கோ சுனோய்ஷ் தமது கிறித்துவ மதத்தை விட்டு இந்து மதத்துக்குத் தாவியிருப்பது இந்த இழிவைச் சுமக்கத் தானா?
இந்துமத சம்பிரதாயங்கள், கலாச்சாரம். ஆன்மிக விஷயங்களில் லயித்துப் போய் மதம் மாறியதாகச் சொல்லும், புளகாங்கிதம் அடையும் இந்த நெதர்லாந்து நாட்டுக்காரர் ராம்தாஸ் என்று பெயர் மாற்றிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தடையில்லை.
ஆனால் ஒரு மனிதன் என்ற அந்தஸ்து கிடைக்கப் போவதில்லை. சமத்துவ மனிதன் என்ற தகுதி கிடைக்கப் போவதில்லை.
பூரி சங்கராச்சாரியார் சொன்னது போல எந்தத் தரமான இந்து என்பதை அவர் முடிவு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
எந்த இந்துக் கோயிலுக்குள்ளும் அவர் நுழைய முடியாது. அந்த இழிவை மனமுவந்து அவர் ஏற்றுக் கொண்டு தான் தீர வேண்டும்.
குளிக்கப் போய் யாராவது மலத்தை அப்பிக் கொள்வார்களா?
ஒரு முகூர்த்த நேரம் திருமணத்தில் பூணூலை மணமகனுக்குப் புரோகிதப் பார்ப்பான் பூட்டுவதில்லையா? அதுபோல மந்திரங்களைச் சொல்லுவதற்காக நெதர்லாந்துக்காரருக்குப் பூணூலைப் போட்டிருக்கலாம்; அதன் பின் மறவாமல் அறுத்து விடுவான். அதற்குப்பின் நெதர்லாந்தின் ரெம்கோ சற்சூத்திரன்தான்ஆம் பார்ப்பனர்களுக்குத் தேவடியாள் மகன்தான்!
புதிய ராம்தாசுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.-------------------- மின்சாரம் அவர்கள் 23-1-2010 “விடுதலை” ஆயிறுமலரில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment