Search This Blog

19.1.10

இந்துத்துவா சோ பூணூல் கூட்டம் நப்பாசை நிறைவேறாது

மீண்டும் ‘‘அம்மா’’ ஆட்சியாம்!
இந்துத்துவா ‘சோ’ பூணூல் கூட்டம் நப்பாசை நிறைவேறாது
தமிழினம் ஏற்றம் பெற நாளும் சாதனை செய்துவரும் கலைஞர் ஆட்சியை அசைக்க முடியாது

செல்வி ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க பார்ப்பன பூணூல் கூட்டம் துடிக்கிறது. தமிழினம் ஏற்றம் பெற தமிழர்களுக்காக பாடுபட்டு வரும் கலைஞர் அரசை குறைகூறி பிரச்சாரம் செய்து பார்க்கிறார்கள். தமிழக மக்கள் விடமாட்டார்கள். பார்ப்பன ‘சோ’ கூட்டத்தின் ஆசை, திட்டம் நிறைவேறாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:


கலைஞர் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி


தமிழ்நாட்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் பல துறைகளிலும் நிம்மதியும், நீடித்த வாழ்வும் பெற்று மகிழ்ச்சியுடன் காட்சி அளிக்கின்றனர்!


அனைத்துத் துறையினரும் இவ்வாட்சியின் அன்றாட சாதனைகளால் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்!


இந்தியாவின் மற்ற பல்வேறு மாநிலங்களும் இங்கே நடைபெறும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களைப்போல தங்கள் தங்கள் மாநிலத்திலும் நடத்திடவேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க., மற்றும் பல எதிர்க்கட்சிகளும்கூட நடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகளில் கூறியதோடு, பிரச்சாரமும் செய்தன!


தமிழ்நாட்டின் வரலாற்றில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நாளுந் தவறாது நடத்திவரும் இவ்வாட்சியை ஒழித்துவிட்டு, ஜெயலலிதா தலைமையில் ஆட்சி மாற்றம் வரவேண்டுமாம்! நண்பர் ‘சோ’ இராமசாமி அய்யரும், குருமூர்த்தி அய்யரும், இவாளோடு சேர்ந்துள்ள அவாள் ஏடுகளும், தொலைக்காட்சிகளும், விளம்பரந்தேடிகளான பல கட்சி படையெடுப்பாளர்களான சில விபீஷணர்களும் இப்படி ஒரு கோரஸைப் பாடுகின்றனர்!


சிறிது காலத்திற்குமுன் இவர்களில் சிலர் ‘சோ’ உள்பட ஒரு நடிகருக்குக் கொம்பு சீவிவிட்டுப் பார்த்தனர். ஏனோ அவாள் கணக்கு அதில் சரிவரவில்லை.


‘அம்மா’ ஆட்சி வரவேண்டுமாம்!

இப்போது பச்சையாகவே முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதுக்கு என்று மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற பல்லவியைத் தொடங்கிவிட்டனர்!


காமாலைக் கண்களுக்கு எப்போதும் பார்வை பழுதுதானே! அதுபோல, எதுவுமே தமிழ்நாட்டில் சரி இல்லையாம்; எந்த வளர்ச்சித் திட்டமும் இல்லையாம்; எந்தத் தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லையாம்; நிருவாகம் தற்போது சீர்குலைந்துவிட்டதாம்; தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் அரசின் கஜானா காலியாகிவிடுமாம்! அதனால், ‘அம்மா’ ஆட்சி வரவேண்டுமாம்!
இதைக் கேட்ட மக்கள் எப்படிச் சிரிப்பார்கள் என்பதே தெரியவில்லை. வளர்ச்சித் திட்டங்கள் எவை எவை ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்டன; எவை எவை இவ்வாட்சியில் ரத்து செய்யப்பட்டன. புதுத்திட்டங்கள் எதுவுமே இல்லை என்பது போன்ற ‘கோயபல்ஸ்’ பிரச்சாரம், முழுப் பூசணியை சோற்றில் மறைத்தது போன்று நடந்தேறுகிறது!


நாளும் முதல்வர் கலைஞர் விலாவாரியாக சாதனைப் பட்டியலைத் தொகுத்து மக்களிடையே இத்தகைய விஷமிகளின் வேலை வேரூன்றி விடக்கூடாது என்பதற்காக எழுதியும், பேசியும் வருகிறார்களே!


தமிழக சட்டமன்றத்தில் அண்மையில் நிறைவேறிய ஆளுநர் உரையின் மீதான தீர்மானம் அவ்வுரையில் உள்ள கலைஞர் உயிர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் கான்கிரீட் வீடுகள் திட்டம் போன்ற பல திட்டங்கள், அதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் வந்தார்; ஏதோ பேசினார்; தனது குற்றச்சாற்றுகளுக்கு ஆளுந்தரப்பிலிருந்து வரும் பதில்கள், மறுமொழி என்னவென்பதைக் கேட்க அமர்ந்திருந்தார்களா?


எப்போதும் அதை அவர் கடந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் செய்ததே இல்லையே!


இது ஊரறிந்த, உலகறிந்த உண்மையாகும்.


முதல்வரின் சரியான விளக்கம்


இன்றுகூட தணிக்கைத் துறை அதிகாரியின் குற்றச்சாற்றுக்கு வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட 121 கோடி ரூபாயை தி.மு.க. அரசு இலவசத் திட்டங்களுக்காக செலவழித்துவிட்டது என்பதற்குத் தெளிவான விளக்கத்தினை மறுப்பினை முதல்வர் அவர்கள் அளித்துள்ளார்களே (பக்கம் 3 இல் காண்க) தவறான தலைப்புகளும் சில ஏடுகளால் தரப்பட்டுள்ளன.


மக்கள் வளர்ச்சித் திட்டங்கள் என்று கூறும்போது, அதற்குக் குறுகிய பொருள் காணக்கூடாது. அரசுகளைப் பொறுத்தவரை, வறுமை ஒழிப்பு, நோய் தடுப்பு என்பதெல்லாம் தோற்றத்திற்கு இலவசங்களாக இருப்பினும், உண்மையில் மக்களது வாழ்வின் நீட்டிப்பு வளர்ச்சிக்குரிய வாய்ப்பு என்று கொள்ளவேண்டாமா? ஒருவருடைய செலவு மற்றொருவருடைய வரவு என்பதுதானே மிகப்பெரிய பொருளாதாரத் தத்துவம்.


அம்மையார் ஆட்சியில் மக்கள் பட்டபாடு


அம்மையார் ஜெயலலிதா ஆட்சி எப்படி இருந்தது என்பதை, எலிக்கறி சாப்பிட்ட விவசாயிகள்பற்றி கம்யூனிஸ்ட் நண்பர்கள் சட்டப்பேரவையில் கூறியதை மறந்துவிட முடியுமா?


இரண்டரை லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாள், ஓர் இரவில் பணி நீக்கம் செய்து சிறையில் தள்ளியதை மறந்துவிட முடியுமா?


பத்தாயிரம் சாலைப் பணியாளர்களின் குடும்பம் ஒரு ஆணையால் வேலை இழந்து பல குடும்பங்கள் பிச்சை எடுத்து பட்டினிச் சாவு, தற்கொலைக்கு ஆளான கதை எளிதில் மறக்கக்கூடியதா?


அவ்வளவு ஏன், பத்திரிகைச் சுதந்திரம் பட்டபாடு _ ‘நக்கீரன்’ கோபாலை விரட்டியதை வசதியாக மறந்துவிட்டாலும், ‘சோ’க்களால் இந்து நிருபர் பெங்களூருவரை விரட்டப்பட்டு, வேட்டையாடி, விளையாடப்பட்டதை எளிதில் மறந்துவிட முடியுமா?


எத்தனையோ சோகக் கதைகள், அந்த வரலாற்றில் படிந்த கறுப்புக் கறைகள். இந்த அம்மையார் ஆட்சிபற்றி அன்று வாய் கிழியப் பேசிவிட்டு, இன்று தரிசன தவங்கிடக்கும் பல எதிர்க்கட்சிகளிடம் கேட்டாலே மிகவும் விலாவாரியாகப் பேசுவரே; அவர்கள் பேசாவிட்டாலும், அவர்களது ஏடும், பழைய எழுத்தும் பேசுமே!


திருத்தணிமுதல் குமரிவரை எத்தனை திட்டங்கள்


தமிழ்நாட்டில் திருத்தணி தொடங்கி குமரிவரை எத்தனை வளர்ச்சித் திட்டங்கள்; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமே வரக்கூடாது என்று இன்று தலைகீழ் பல்டியடித்து, உச்சநீதிமன்றத்திற்குப் போய் தடுப்பணை கட்டுவதற்குத்தான் அம்மா ஆட்சி மீண்டும் வரவேண்டுமென்று ‘சோ’வும் ஆசைப்படுகிறார் போலும்!
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி கடந்த மூன்றரை ஆண்டுகாலத்தில் எவ்வளவு என்பதற்கு விரிவான விளக்கம் 3 மற்றும் 4 ஆம் பக்கங்களில் வெளியாகியுள்ளது காண்க!


பார்ப்பன ஆட்சி, மீண்டும் ‘மநுமாந்தாதா’ ஆட்சி திராவிட போர்வையைப் பயன்படுத்தி இந்துத்துவா ஆட்சியை அமைக்கத் துடிக்கிறது இந்தப் பூணூல் கூட்டம்!


காரணம், வெளிப்படை! கலைஞர் ஆட்சி மானமிகு சுயமரியாதைக்காரர் ஆட்சியாகவே நடக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்; அருந்ததியருக்கு உள்பட, இஸ்லாமியர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு, தமிழ்ப் புத்தாண்டு ஆணை, தமிழ் செம்மொழி ஆனது; தமிழ் _ திராவிட இனம் தனது இழந்த அடையாளத்தைப் பெறுவதைக் கண்டு இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.


ஆனால், தமிழர்கள் ஏமாளிகள் அல்லர்; ஒருபோதும் நிறைவேறாது உங்கள் திட்டமும், ஆசையும்!

சென்னை
16.1.2010

தலைவர்,

திராவிடர் கழகம்

3 comments:

நம்பி said...

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பார்ப்பன சோவை பற்றி எழுதுவது பெருமையான விஷயமாக பலத் தமிழ் இணையத்தளங்கள் நினைத்துக்கொள்கின்றன. என்னைக்கூட அப்படி ஒரு இணையத்தளம் தடை செய்தது, எதற்காக ஜாதி, இனம் பற்றி எழுதுகிறீர்கள். நம் இணையத்தில் எழுதக்கூடாது என்ற விதி இருக்கிறது.. என்று காட்டி... அதற்காக நான் சும்மா இருக்கவில்லை, அதற்குத்தான் வலைப்பதிவு வைத்திருக்கிறேனே, ஆனாலும் இதை பற்றி சொல்லவேண்டுமல்லவா? பார்ப்பன சோ வேதத்தை பற்றி எழுதுவதை மட்டும் உங்கள் பதிவில் அனுமதிக்கிறீர்கள், வடமொழியை அனுமதிக்கிறீர்கள் (தமிழ் பெயர் கொண்ட இணையதளத்தில்) அப்போதே ஜாதியை அனுமதித்து விட்டீர்களே? பிறகெப்படி என்னை தடை செய்ய முடியும். (அதாவது தமிழர் திருமணம்...) இது தவறு என்றால் ஆரிய வேதம் மகா மகாத் தவறு என்று கூறினேன். அதில் பார்ப்பனர், வர்ணாசிரமம் எல்லாம் வந்து விடுகிறதே... அதுவும் தொடர் கட்டுரையாக..அதற்கப்புறம் ஞாயம் என்று அவர்களே ஒத்துக்கொண்டார்கள். இது மாதிரிதான் இன்னும் சிலபேர் இணையத் தளத்தில் ஆரியம், திராவிடம் என்று பிரிவினை வார்த்தைகள் வரக்கூடாது... என்று தடை செய்கின்றனர். அப்படியென்றால் சிங்களம், ஈழம், தமிழ் என்ற வார்த்தைகளும் வரக்கூடாது, அல்லாவா? அதுவும் இனத்தை குறிப்பது தானே...என்றேன்.... பதிலே இல்லை.. (அந்த இணையத் தளம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள தளம்...)அங்கு நானும் இல்லை. எல்லா இடங்களிலும் ஆரியம், வடமொழி, வேதம் இதெல்லாம் புகுத்துவதற்கு இந்த இணையதளங்கள் கச்சை கட்டி கொண்டு வருகின்றன. ஏன் என்று தான் தெரியவில்லை...

Unknown said...

நிகர் நிலைபல்கலை அங்கீகாரம் பெற பெரியார்-மணியம்மை பல்கலை தகுதியானது அல்ல என்று சொல்லிவிட்டார்களே.அரசு விரைவில் அந்த நிகர்நிலை என்று போட்டுக் கொள்ளகூடாது என்று சொல்லப் போகிறதே.வீரமணி இதையும் பார்பனர் சதி என்பாரா இல்லை மெமோரியல் ஹால் எதிரே போராட்டம் நடத்துவாரா.
’மானமிகு’ வீரமணி ஐயா நீங்கள் நடத்தும் ‘பல்கலைகழகத்தின்’
தராதரம் இப்படி வெட்டவெளிச்சமாகிவிட்டதே. இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்.
என்று வீரமணியைப் பார்த்து கேள்வி கேட்பீர்களா?

UnmaiAlwaysSudum said...

Well.. well..well.. Today the cat is out of the bag.. Till date it was told that parpanars were cheating the tamils.
Todays paper revealed 17 deemed universities cheating young aspiring tamil students and bcoz of which their deemed university status was cancelled. And one of the university is run by the great "Naathiga Rajaji" Thiru Veermani ayya avargal...
So what do you say for this?

So did periyar by any chance told our Naathiga Rajaji thiru veermani that Non Paarpans can cheat tamils??????????????