எந்த வழி?
கழகத் தொண்டர் கள் காந்திய வழியில், பெரியார் வலியுறுத்திய வழியில், அண்ணா வழி யில், காமராஜர் விரும்பிய வழியில் செயல்பட வேண் டும்.
- கலைஞர் பேச்சு.
தலைவர் என்ன சொல்றாரு? காந்திய வழியிலே, நேர்மையைக் கடைப் பிடிச்சி; பெரியார் வழியிலே, பிடிக்காததையெல்லாம் செருப்பால் அடிச்சு உடைச்சுத்தள்ளி; அண்ணா வழியிலே, காங்கிரசை எதிர்த்து; காமராஜர் வழியிலே, கழகத்தைத் தோக்கடிக்க முயற்சிக்கணும்னு சொல்றாரா? (கலைஞரின் பேச்சுக்கு பேராசிரியர் இப்படி விளக்கம் சொல்கிறாராம்)
(துக்ளக், 30.12.2009, அட்டைப்படம்)
இப்படி வக்கிரப் புத்தியோடு சோவைத் தவிர வேறு யாரால் எழுத முடியும்?
கலைஞர் சொன்ன காந்தி வழி, பெரியார் வழி, அண்ணா வழி, காமராஜர் வழி எல்லாம் சரிபட்டு வராது, இது சூத்ராள் வழி.
பிராமணாள் வழின்னு ஒண்ணுயிருக்கு! அதுதான் சோ அய்யர்வாள் கூறும் வழி! அதுதான் பேஷான வழி! பிறப்பிலேயே தான்தான் உயர்ந்தவன். பிராமணன் என்று நிரூபிக்கணும்; அது எப்படி?
அடுத்த மனுஷாளைப் பாத்தா கிட்டே வராதேன்னு சொல்லணும் தீண்டாமை க்ஷேமகரமானதுன்னு சங்கராச்சாரி யார் சொன் னதை ஏத்துக்கணும்.
தான் நினைத்த காரியத்தை சாதிக்கணும். அது எப்படி?
தேவநாதனான இந்திரன் முறையில்; (காஞ்சி புரம் தேவநாதன் நினைவுக்கு வருகிறதா? கவுதம முனிவரின் மனைவியான அகலிகையை கவுதம முனிவர் போல வேடந்தாங்கி ஏமாற்றி கற்பழிக்கவில்லையா - அதுபோலவே வழிமுறைகள்பற்றிக் கவலைப்படாமல் காரியம் சாதிச்சுக்கணும்.
தனக்குப் பிடிக்காதவனைத் தீர்த்துக் கட் டணும்; அது எப்படி? இராமன் வழிமுறையில், சூத்திரனான சம்புகனை இராமபிரான் கசாப்புக்காரன்போல வாளால் வெட்டிக் கொன்றது மாதிரி!
அல்லது தனக்குத் திருகுவலி கொடுத்துக் கொண்டிருந்த சங்கரராமனை ரூபாய் கத்தைகளை அள்ளிவிட்டு, ஆள்களை ஏவித் தீர்த்துக் கட்டிய பெரியவாள் மாதிரி.
(தனக்குப் பிடிக்காதவற்றைப் பெரியார் செருப்பாலடித்த காரியம்? எல்லாம் இந்தப் படுகொலை, வன்முறைக்குமுன் எம்மாத்திரம்!)
சில காரியங்களைக் காதும், கண்ணும் வைத்தாற்போல அனுபவிக்கணும். அது எப்படி? பெரியவாள் செய்து காட்டியுள்ளபடி அதிகாலையிலேயே சீரங்கம் உஷா, அந்திம நேரத்திலே அசோக் நகர் அனுராதா, அர்த்தராத்திரியிலே ஆந்திராவைச் சேர்ந்த ஜெயா, சொச்ச நேரத்திலே சொர்ணமாலா என்று கைப்பேசியிலே கொஞ்சிக் குலாவி மனக் குரங்கைக் குஷால்படுத்திக் கொண் டால் அப்படியே ரெஃப்ரஷ் (refresh) படுத்திக் கொண்ட மாதிரியிருக்கும். ரிலாஸ்க் பத்தி எல்லாம் அவாள் எழுத ஆரம்பித்திருக்கி றார்களே!
அவாளின் இந்த வழிமுறைகள் இவ்வாறு ஏராளமாக இருக்கும்போது காந்தி வழி, பெரியார் வழி, அண்ணா வழி, காமராஜர் வழி என்றால் சோ கூட்டத்திற்குப் பிடிக்குமா?
--------------- மயிலாடன் அவர்கள் 5-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment