Search This Blog

11.1.10

பாலுணர்ச்சி சுவையோடு பாடியவர்களுள் ஆண்களுக்கு நிகர் ஆண்டாளே!


ஆண்டாளின்கொக்கோகம்!


(பக்தர்கள் பாசுரம் படிப்பதன் மர்மம் இப்பொழுதல்லவா புரிகிறது; புகுந்து பாருங்கள் ஆண்டாளின் கொக்கோக ஆவர்த்தனையை! - ஆர்.)

பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண்ணாழ்வார்! அவர்தான் ஆண்டாள் அம்மையார் கோதையென்றும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் நப்பின்னைபிராட்டி பூமிப்பிராட்டி, பெரிய பிராட்டி என்றும் வியப்போடு அழைப்பர். அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் நந்தவனத்தில் துளசிமலரில் பூமிப் பிராட்டியாராக அமசையாய் அயோநிஜையாய் திருவவதரித் தருளினாராம் அதாவது யோனிவழி பிறவாத பூமியில் கண்டெடுத்த சுரும்பார் குழற்கோதையாவார்! அனாதையோவென அய்யுற வேண்டாம்! அவதாரமென மெய்யுணர் வீரே! அவரைக் கண்டெடுத்து, வளர்த்து திருமாலுக்கே கைபிடித்து இட்டவர் விஷ்ணுசித்தர் எனப் புகழ் பெற்ற பெரியாழ்வாரே!

ஆண்டாள் தன்னை அலங்கரித்துக்கொள்வதில் மிக்க திறமையும், ஆர்வமும் கொண்டவர். அவனுக்கு நேரொவ்வா திருக்கிறேனா? ஒத்திருக்கிறானோ? என்று காரை பூண்டு, கூறையுடுத்து, கைவளை குலுக்கி கோவைச் செவ்வாய் திருத்தி எப்படி ஒப்பனை! அவ்வொப்பனை யழகைக் கண்ணாடியிலே கண்டு கண்டு மகிழ்வாராம்!

திருமணப் பேச்சு அடிபடுவதற்கு முன்னமேயே, கட்டிலறைக் கனவுகள் காண்பதில் வல்லவர்! காதல் வேட்கையால் உந்தப்பட்டு பற்பல பாக்கள் பரவசமாய்ப் பாடியிருக்கிறார். உறுப்புகளின்அழகை வருணிப்பதில் ஆண்கள் கெட்டார்கள், அவ்வளவு நேர்த்தியாக, கவர்ச்சியாக பாலுணர்ச்சி சுவையோடு பாடியவர்களுள் ஆண்களுக்கு நிகர் ஆண்டாளே!

அப்படிப்பட்ட ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழியிலோ
அவரைப்பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்தெழுந்த என் தட முலைகள்
உன்னித்தெழுந்த என் தட முலைகள்

சாயுடை வயிறும் என்தட முலைகள் துவரைப் பிரானுக்கே! ஊனிடையாழி சங்கு உத்தமர்க்கே! என்று உருகித் தவிப்பாராம்! கிருஷ்ணன் துகிலைத் திருடிக்கொண்டு மரக்கிளையில் போட்டு அமர்ந்து கோபியரின் கொங்கையழகையும், அல்குலின் கண்கவர் அகலத்தையும் நீச்சலுடை கூட இல்லாத அப்படிப் பட்ட அம்மணக் குட்டிகளைக் கண்டு களிப்பதைப் பெண் ஆழ்வாராகிய ஆண்டாளே பாடுகிறார்:_

தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித் தருளாயே! இதுஎன் புகுந்தது இங்கு அந்தோ!
நீ வேண்டிய தெல்லாம் தருவோம்!
பட்டைப் பணித்தருளாயே!
கோலச் சிற்றாடை பலவும்
கொண்டு நீயேறி யிராதே!
கோலம் கரிய பிரானே!
நீரிலே நின்று அயர்க்கின்றோம்!
நீதியல்லாதன செய்தாய்!

என்று கதறிக் கதறிக் கேட்டும் கண் கொட்டாமல் களித்து இன்புற்ற காட்சியைக் காணாத கண் என்ன கண்ணோ! வென ஏங்குவார்களே வென்றுதான் கற்சிற்பங்களாக, வண்ண ஓவியமாக, வடித்து வைத்து இன்றும் கோகுலாஷ்டமி கொண்டாடி களிக்கிறோம்!

ஏக்கத்தின் உருக்கம்
ஏக்கத்தின் உருக்கத்தால் பாடும்போது:-

முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான் புணர்வதோராசையினால்- _ என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்அங்குயிலே!
கண்ணீர்கள் முலைக்கு வட்டில் துளி
சோரச்சோர் வேனை
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கிலக்காய்
நானிருப்பேனே என்னாகாத்திளங் கொங்கை
விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு
எனப் புரிவுடைமை செப்புமினே!
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து
ஓர் நந்நாள் தங்குமேல் என்னாவி
தங்-குமென்று உரையீரே!

பாம்பறியும் பாம்பின் கால் என்பார்கள். அதற்கொப்ப நுட்பான உட்பொருள்களையெல்லாம் அம்பலப்படுத்திப் பாட இப்படியெல்லாம் ஆணாழ்வார்களால் முடியுமா-? அதற்காகவென்றே அத்தனைபேர்களுள் கொங்கைக் காமத்தைப் பாட அதிருசி, தனிருசியுடன் பாட அவதரித்தார் போலும் ஆண்டாளம்மையார்! மேலும் மேலும் கேட்க படிக்க அவாவுறும் வகையில் தொடருகிறார்:_

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா!
கொங்கைக்கும் செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது! இருக்கட்டும், இதைக் கேளுங்கள்:_

காமப்பாதையில் கண்ணன் நாமம்
குற்றமற்ற முலைதன்மைக் குமரன்
கோலப்பணைத் தாளோடு அற்றகுற்றமவைதீர அணைய அமுக்கிக் கட்டீரே!
எப்படி அணைத்தல் அமுக்கல் வர்ணனைகள்! போதாவோ? சரிகேளுங்கள்.
கொள்ளும் பயனொன் றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
லெறிந்து என்னழலைத் தீர்வேனே!
அப்பாடி! காமவேட்கைத் தீயின் சுவாலையை எப்படித் தான்எழுதுவது? நிற்க,
கொம்மை முலைகள் இடர்தீரக்
கோவிந்தற்கு ஓர் குற்றேவல்

என்றவாறெல்லாம் தவித்து, பக்த கோடிகளையும் ஒழுக ஓழுக உருக வைத்து எப்படி எப்படியெல்லாம் காமத்தினூடே கண்ணன் நாமம் பாடி நம்மையும் வாழவிட்டார் பார்த்தீர்களா?

-------------------------- 9-1-2010 “விடுதலை” ஞாயிறு மலரில் பொன்மலை பதி அவர்கள் எழுதிய கட்டுரை

11 comments:

Rajan said...

நடத்துங்க ! வாழ்த்துகள்

ரவி said...

பகுத்தறிவு பிரசாரம் யார் மனதையும் புண்படுத்தாமல் இருந்தால் நன்று...

UnmaiAlwaysSudum said...

Paambin kaal paambariyum. Evvalavu sariyaana vaarthai... athanall thano ungalukku ithil ulla "antha" arthangal mattum purinthatho!!!. Naathiga rajaji vazhiyail ungal paarvayum iruppathil viyappedhum illai

ரவி said...

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973

Anonymous said...

செந்தழல் ரவி,

Your approach is wrong.

இப்பாசுரங்களைப் படிக்கும் எவருக்கும் எழும் கேள்விகள்தான் இங்கே நாம் காண்கிறோம்.

இறைவனோடு கலவி கொள்ளும் அவா இங்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டாள்.

ஏன் அவர் அப்படிப்பட்ட பக்தி காணவேண்டும்? வேறுவழியில் இருக்க்க்கூடாதா?

என்பவை கேள்விகள்.

இவை உங்கள் மனத்தைப்புண்படுத்தினால், அக்கேள்விகள் படிப்பவர்கள் மனத்தில் எழாமல் இருக்குமா?

இக்கேள்விகளுக்குப் பதில் என்ன? அவற்றைச் சொல்லவேண்டியது யார்?

சொன்னார்களா?

ஆம்...சொன்னார்கள். அதைப்படித்துவிட்டு தமிழோவியாவுக்குச் சொல்வது நுங்கள் கடமை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

rajan RADHAMANALAN

தமிழ் ஓவியா said...

//பகுத்தறிவு பிரசாரம் யார் மனதையும் புண்படுத்தாமல் இருந்தால் நன்று...//

இது குறித்து பெரியாரின் கருத்து தனிப் பதிவாக விரைவில் வரும் செந்தழல் ரவி

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தமிழ் ஓவியா said...

இராமாயணம் பாரதம், போன்ற இதிகாசக் குப்பைகள் எல்லாமே ஆபாசங்களும் அசிங்கங்களும் தான். அதை வைத்து மக்களை மடையர்களாக்கும் செயலை எதிர்க்காம் எப்படி இருக்கமுடியும்.

உண்மைகளை எழுதும் போது சுடத்தான் செய்யும் UnmaiAlwaysSudum

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. UnmaiAlwaysSudum

தமிழ் ஓவியா said...

பெரியார் பிரச்சாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண்படுகின்றதா?


பெரியார்(நாயக்கர்) இப்பிரச்சாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண்படுகின்றது என்பது …..

இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இமயமலை பனியால் மூடப்பட்டு குளிரால் அவஸ்தைபடுகின்றது என்று அதற்கு யார் கம்பளிப் போர்வையைப் போற்றி,குப்பை செத்தைகளை அரித்துப் போட்டு நெருப்பு வைத்து குளிர் காய வைக்க முடியும்?. எரிமலை நெருப்புச் ஜூவாலையில் கஸ்டப்படுகின்றது என்று அதற்கு யார் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சி செய்ய முடியும். அது போல அவரவர்கள் தன்மைக்கு ஏற்ற பலனை அவரவர் அடைய வேண்டியதுதானே ஒழிய வேறில்லை.

பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் எந்த தேச மத அபிமானியையும், யோக்கியமாய் நடந்து கொள்ளும் எந்த தேச மத அபிமானியையும் நாம் கனவிலும் நினைப்பதில்லை.நம்மால் அவர்கள் மனம் புண்படவும் நியாமில்லை. அப்படிக்கில்லாமல், மக்களை ஏமாற்றவென்றே வெளிவரும் போது மாத்திரம் நாம் சும்மா இருக்க முடியவில்லையே ஒழிய மற்றபடி நமக்கு யார் மனதையும் புண்படுத்த நினைத்து இத்தொண்டை நாம் ஆரம்பிக்க வில்லை என்பது உறுதி.

----------தூத்துக்குடி திரு.சோமசுந்தரம் பிளை 7-12-1927 “நவசக்தி” இதழில் எழுதிய “இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்கு தந்தைபெரியார் அவர்கள் எழுதிய மறுப்புக் கட்டுரையிலிருந்து… “குடிஅரசு” 25-12-1927

Anonymous said...

idhai padikkumbodhu migavum dharmasangadamagathan irukkiradhu.

Unknown said...

யார்? மனதும் புண்படாமல் இருக்கவேண்டுமென்றால் நாம் ஒரு அரசியல் தலைவரையும் வசை பாடக்கூடாது...இணையம் முழுக்க ஒரு இடத்திலும் மீறுதலில்லாமல் இல்லை...மிக மீறுதலுடன் தான் இருக்கிறது....உயிருடன் இருக்கும் எவரையும் நாம் விட்டுவைப்பதில்லை...அரசியல் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, என்பதற்காக அவர்களின் குடும்பங்களை பச்சை பச்சையாக நடுத்தெருவிற்கு இழுக்கிறோம். இப்படி இழுக்க எந்த சட்டத்திலும் சொல்லப்படவேயில்லை.

அப்போது அவரின் தொண்டர்கள் மனது எவ்வளவு புண்படும்? என்பதை என்றாவது யோசித்தோமா...? யோசிப்பதில்லை..மாறாக நமது கருத்து அங்கே தாக்கவேண்டும் அவர்கள் கொதிக்கவேண்டும்....என்பதற்காகத்தானே விமர்சனம் என்ற பெயரில் கொச்சைத்தனங்கள் வைக்கப்படுகிறது....அவர்? எவ்வளவு பெரிய மதிப்புமிக்க பொறுப்பில் இருப்பவராக இருந்தாலும், அதைபற்றி கவலைப்படுவதேயில்லையே....இங்கு கதைகள், புராணங்கள் என்றப் பெயரால் மனிதனின் மேல் வைக்கப்பட்ட சுமைகள்...மனிதனை மனிதன் தாழ்த்துவதை தான் பெரியார் சுட்டிக்காட்டுகிறார்...திராவிடர் கழகமும் சுட்டிக்காட்டுகிறது. இது மட்டும் எப்படி புண்படுவதாக இருக்கும். இதனால் ஏற்கனவே புண்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் வாய்மூடி மௌனமாகவே இருக்கின்றனரே! தங்களை தூக்கிவிட ஏதாவது ஒரு கை நீளாதா? என்று ஏங்கி காத்திருக்கின்றனரே?...அவருகளுக்காக திராவிடர் கழகம், அது சார்ந்த இயக்கங்களும் தன் தொண்டர்களுடன் பல கரங்களை நீட்டுகிறது. ஆட்சியாளருகளுடன் சேர்ந்து நீட்டுகிறது...

தற்காப்புக்காக வசை பாடுபவர்களையும் எதிர் வசைபாடலாம்...சட்டம் அறிவுறுத்துகிறது. காரணம் அதுவும் ஒரு தற்காப்புத்தான். குறிப்பாக பெண்களுக்கு இதை வலியுறுத்துகின்றனர். இதையெல்லாம் எல்லா ஊடகங்களிலும் தினமும் சுட்டிக்காட்டிக்கொண்டு வருகின்றனர்.

என்கவுன்டர் என்பது (தற்காப்பு) மனிதனுக்காக ஆங்கிலேயர் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் இதை இப்போது காவல் துறையினர் மட்டுமே கையெலுடுக்கின்றனர். இன்றும் அது மக்களுக்காக வழங்கப்பட்ட சட்டப்படியான ஒன்று தான். காவல் துறையே பலநேரங்களில் இதை தேவைப்படீன் கையெலுடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. மக்கள் தங்களை தற்காத்து கொள்ள...

....மதத்தையும் கடவுளையும் எதிர்த்து மற்றவர்களை எதிர்த்து புண்படுத்தவது அல்ல எங்கள் நோக்கம் என்று கூறிய அவரே...

சுயமரியாதை இயக்கம்

சுய மரியாதை இயக்கமானது – வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.

கடவுள் ஒழிப்பு

சுய மரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால், நமது நாட்டில் அந்தச் செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரர்கள் செய்கின்றார்கள்.
...தந்தை பெரியார்...