Search This Blog

15.1.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்!-2
(கிறிஸ்டோபர் ஹிட்சின்சின் நூலில் 35 ஆம் கட்டுரை இது) கிறிஸ்துவ மதத்தின் தத்துங்கள் உண்மைகள் என்று கொஞ்சம் கூட நம்பத்தக்கவையாக இல்லை எனத் தெரிந்த பின்பும் கண்களை மூடிக் கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம் அல்லவா? பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆதி மனிதர்கள் உலகம் தட்டையென்றும், சொர்க்கம் மேலே உள்ளது என்றும், இந்த உலகத்தை மிகவும் பேராசை கொண்ட சண்டைக்கார தெய்வம் உண்டாக்கி இயக்கி வருகிறதென்றும், அது சொல்கிறபடி நடந்து கொள்ளாவிட்டால் தண்டிக்கும் என்றும் உளறியிருப்பவற்றின் அடிப்படையில் ஒருவர் தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது அடிப்படையான தவறு அல்லவா?

கடவுளுக்கு விடை தருதல் எனும் நூலில் குறிப்பிட்டுள்ள கேள்விகளில் சில மீண்டும் தரப்படுகின்றன. இந்தக் கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

நீங்கள் (எகிப்து நாட்டின்) கெய்ரோவில் பிறந்திருந்தால் 84 கோடி மக்களைப் போலவே நீங்களும் முசுலிமாக இருந்து அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. முகமது அவரின் தூதர் என்று கூறிக் கொண்டிருப்பீர்களா, இல்லையா?

நீங்கள் (இந்தியாவின்) கல்கத்தாவில் பிறந்திருப்பீர்களேயானால், 65 கோடி இந்துக்களில் ஒருவராக, வேதங்களையும், உபநிஷத்துகளையும் புனிதமாகப் போற்றி, எதிர்காலத்தில் நிர்-வாண நிலையை அடையும் எண்ணத்தில் இருந்திருப்பீர்களா, இல்லையா?

நீங்கள் ஜெருசலத்தில் பிறந்திருந்தால், 130 லட்சம் யூதர்களில் ஒருவராக, யேவாதான் கடவுள் என்றும் டோரா தான் கடவுளின் வாக்கு என்றும் சொல்லிக் கொண்டிருப்பீர்களா, இல்லையா?

நீங்களே (சீனாவில்) பீகிங்கில் பிறந்திருப்பீர்களேயானால் கோடிக்கணக்கானவர்களைப் போல, புத்தர் அல்லது கன்பூஷியஸ், அல்லது லாவோட்சே ஆகியோர்களின் போதனைகளை ஏற்று அதனைப் பின் பற்றி வாழ்ந்திருப்பீர்கள்,அல்லவா?

உங்கள் பெற்றோர்கள் கிறித்துவர்கள் என்பதால்தானே நீங்களும் கிறித்துவராக இருக்கிறீர்கள்? (எழுதியவர் தம் நாட்டில் உள்ள மதத்தவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.)

கடவுள் அன்பானவர் என்றால் ஏன் அவர் பூகம்பம், வறட்சி, வெள்ளம், சூறைச் சுழற்காற்று போன்ற இயற்கை இடர்ப்பாடுகளை உற்பத்தி செய்து ஆயிரக் கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வோர் ஆண்டும் சாகடிக்கப்பட அனுமதிக்கிறார்?

சர்வசக்தி வாய்ந்த அன்பு மயமான கடவுள் என்றால் - அவர் ஏன் மூளை அழற்சி, பெரு மூளை முடக்கு நோய், மூளைப் புற்று, குட்டம், அல்ஜிமர்ஸ் போன்ற பல கொடும் நோய்களை லட்சக்கணக்கான மக்களுக்குப் பீடிக்கச் செய்து ஆண், பெண், குழந்தைகள் என்று அமைதியான மக்களைச் சாகடிக்க வேண்டும்?

வானுலகத்தில் வாழும் அன்பே உருவான கடவுள், ஏன் மதக் கருத்துகளை ஒப்புக் கொள்ள மறுக்கிற மனிதர்களைத் தண்டித்துத் தள்ளுவற்காகவே நரகத்தைப் படைக்க வேண்டும்? அப்படி நரகத்தில் தள்ளி கடைசிவரை ஏன் கொடுமைப்படுத்த வேண்டும்?

பைபிள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கிறித்துவ மதத்தில் ஏன் நூற்றுக்கணக்கான பிரிவுகள்? தனித்தனியான மக்கள் கூட்டம் ஏன்? மற்றவரின் நம்பிக்கை பொய்யானது என ஒருவர்க்கொருவர் குற்றம் சாற்றிக் கொள்வதேன்?

கிறித்துவர்கள் எல்லாரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறார்கள் எனும்போது, மதப் பிரிவு சம்பந்தமான வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரோடு ஒருவர் கூட்டுறவு கொள்ளாமல் இருப்பது ஏன்?

கடவுள் அன்புமயமான தந்தை என்றால் தன் குழந்தைகளின் பிரார்த்தனைகளை நிறைவேற்றாதது ஏன்?

தொடங்கிய காலத்திலிருந்து பல கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை உயிரினங்கள் அடைந்துள்ளன என்று அறிவியல் அறிஞர்கள் நிரூபித்திருக்கும் நிலையில், இந்த உலகமும் உயிர்களும் ஆறே நாள்களில் படைக்கப்பட்டன எனும் பைபிள் கருத்தை எப்படி நம்ப முடியும்?

ஆதிமனிதனை கர்த்தர் மண்ணைப் பிசைந்து உண்டாக்கினார் என்றும் அவனது விலா எலும்பில் இருந்து பெண்ணைப் படைத்தார் என்றும் கூறப்படுவதை அறிவுள்ள மனிதர்கள் ஏற்க முடியுமா?

தன் மகனை உலகில் ஒரு மனிதனாக நடமாடச் செய்வதற்காகவே உலகைப் படைத்த கடவுள் ஒரு பாலஸ்தீனப் பெண்ணைத் தாமே பிள்ளைத் தாய்ச்சியாக்கினார் என்பதை நம்ப முடியுமா?

கடவுள் பொறாமை பிடித்தவர் என்று பைபிள் கூறுகிறது. அந்தக் கடவுள்தான, எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, எல்லா ஆற்றலும் படைத்தவராக நிரந்தரமானவராக இருந்து எல்லாவற்றையும் படைத்தவர் என்ற நிலையில் இருக்கும்போது அவர் யாரைக் கண்டு பொறாமைப் படவேண்டும்.

உலகில் பல கோடி மக்கள் பட்டினியாலும் துன்பத்தாலும் துயருறும் போது, கிறித்துவர்கள் ஏன் தேவாலயங்களுக்காகவும் மடாலயங்களுக்காகவும் பெருந்தொகைகளைச் செலவிட்டு, ஏழை எளியவர்களை ஏறெடுத்தும் பார்க்காமல் இருப்பது ஏன்?

வறண்டநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்கள், மழை இல்லாத காரணத்தால் பட்டினியால் சாகும் நிலை இருக்கும்போது, சர்வ சக்தி படைத்த கடவுள் ஏன் மழை-யைக் கூடத் தராமல், அவர்களைச் சாகடிக்கிறது?

மனித குலம் முழுமைக்குமான தந்தை எனப்படும் கடவுள், ஏன் தனக்கு என தெரிந்தெடுக்கப்பட்ட மக்களை பொறுக்கி எடுத்து மற்றவர்களை விட அவர்களுக்கு மட்டும் சலுகை காட்டுவது ஏன்?

திருமண உறவைத் தாண்டி கள்ள உறவு வைக்கக்கூடாது எனக் கண்டிக்கும் கடவுள், 700 மனைவிகளையும் 300 வைப்பாட்டிகளையும் வைத்திருந்த மன்னரை ஆசீர்வதித்து மேலும் வளமாக வாழ்வதற்கு ஏன் அனுமதித்தார்?

கிறித்துவ தேவாலயங்களில் பணி புரிபவர்கள் முழுவதும் ஆண்களாக மட்டுமே இருந்து கொண்டு, பெண்களைப் பாதிரியாக, பிஷப் ஆக, ஆர்ச் பிஷப் ஆக, கர்டினல் ஆக, போப் ஆக வருவதற்கு ஏன் அனுமதிப்பதில்லை?

ஏசு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் கடைசிக் காலத்தில் உலகம் முழுவதும் சென்று பைபிளில் கூறப்படும் வேதக் கருத்தை எல்லா உயிர்களிடத்தும் எடுத்துச் செல்லுங்கள்; நான் எப்போதும் உங்களுடனே இருப்பேன் எனக் கூறினாராம். அதன் பின்னும், 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றைய தேதிவரை, கோடிக்கணக்கான மக்கள் கிறித்துவ வேதத்தைக் கேட்காமலேயே இருக்கிறார்களே ஏன்? எப்படி?

(கிறித்துவக் கொள்கைகளைப் பின்பற்றாமல் இந்து, இசுலாமிய, பவுத்த, பார்சி, சீக்கிய, யூத மதங்களைப் பின்பற்றிடும் கோடானுகோடி மக்கள் இருப்பது ஏன்?)

(கட்டுரையாளர் சார்லஸ் டெம்பிள்டன் 86 ஆண்டுகள் வாழ்ந்து 2001 இல் மறைந்தவர். உலகத்தில் பிரபலமான கிறித்துவ மதப் பிரச்சாரகரான (அண்மையில் பெங்களூரு வந்துபோன) பில்லி கிரகாம் என்பாரின் நண்பர். (மறைந்த டி.ஜி.எஸ்.தினகரன், நம் தமிழர் தலைவரின் நண்பர் என்பது நினைவு கூரத்தக்கது).

----------------நன்றி - சு. அறிவுக்கரசு - “விடுதலை” 5-1-2010

3 comments:

easyjobs said...

kadavul bakthi mooda nambikkai endru solvathu than mooda nambikkai.

thamizhkudi said...

சாதி மத சமயங்கள் அகன்ற சமத்துவ தமிழ்தேசத்தை அமைக்க உத்தேசித்துள்ளோம் ..அதற்கு திக தோழர்களின் ஆதரவு தேவை..செய்வீர்களா?

nathigan said...

thamizhkudi

thangaluku en mulu aatharavum undu
9751233218