Search This Blog

13.1.10

கடவுள் சக்தி உள்ளவரா? கிருமிகள் சக்தி உள்ளனவா?


'புனிதம்!'


திருப்பதி மூலஸ்தான பிரகாரத்திற்கு ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கிணற்றின் அருகில் சமையல் கூடம் உள்ளது. இங்குதான் திருப்பதி லட்டு தயாரிக்கப்படுகிறது. கிணற்றுத் தண்ணீரில் கிருமிகள் இருக்கும் என்பதால், கிணற்று நீரில் குளோரின் தூளைக் கலந்தார்களாம்.


அபசாரம்! அபசாரம்! தண்ணீரின் புனிதத் தன்மை கெட்டே விட்டது என்று தலையில் அடித்துக் கொண்டார்களாம் அர்ச்சகர்கள்!


தண்ணீரைத் தூய்மைப்படுத்த, கிருமிகளை அழிக்க குளோரினைப் பயன்படுத்தினால் புனிதம் கெட்டுப் போய்விடுமாம். அப்படியென்றால் அழுக்கடைந்து நோய்களை உண்டாக்கும், கிருமிகள் குடியிருக்கும் நீர்தான் புனிதமானதா?


புனிதத்தின் யோக்கியதை எந்தத் தரத்தில் இருக்கிறது பார்த்தீர்களா! கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படும் அந்தத் தண்ணீரில் உள்ள கிருமிகளைஅழிக்க ஏழுமலையானுக்கு சக்தியில்லை என்றால், கடவுள் சக்தி உள்ளவரா? கிருமிகள் சக்தி உள்ளனவா என்ற கேள்விதான் எழுகிறது.


திருப்பதியில் லட்டு வாங்கி சாப்பிடும் பக்தர்களுக்கும் ஒரு தகவல் இதன் மூலம் கசிந்துள்ளது. திருப்பதி லட்டு கிருமிகள் உள்ள தண்ணீரைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அதன் சுற்றுச் சூழல் பற்றி இந்திரா காந்தி என்ற பெண்மணி ஓர் ஆய்வு செய்தார்.


கோயில் கருவறையில் மூல விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்யப்படும் தண்ணீரில், பால், சந்தனம் வகையறாக்கள் ஒரு சாளரத்தின் வழியாக வெளியே வரும். பிரகாரத்தைச் சுற்றி வரும் பக்தர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெளியில் வரும் அந்தத் தண்ணீரைப் புனித நீர் என்று மதித்து கையில் பயபக்தியாக எடுத்து, மொடுக் மொடுக்கென்று குடிப்பார்கள்.
அந்த (சாக்கடை)த் தண்ணீர் தப்பித் தவறிக் கூட கீழே சிந்திவிடக் கூடாது என்பதற்காக (பகவானைக் குளிப்பாட்டிய ஜலமாயிற்றே!) இரு கைகளையும் அப்படியே தலையில் தடவிக் கொள்வார்கள்.


ஆய்வாளர் இந்திரா காந்தி என்ன செய்தார்? அந்தத் தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்து கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்குப் பரிசோதனைக்காக அனுப்பினார்.


பல கொடிய நோய்க் கிருமிகள் அதில் இருப்பதாகத் தெரிவித்தனர் .


உண்மை இவ்வாறு இருக்க, அழுக்கடைந்த நீரை சுத்தப்படுத்த குளோரினைப் பயன்படுத்தினால், தண்ணீரில் புனிதம் கெட்டுவிடும் என்று கூச்சல் போடுகிறார்கள் என்றால் இவர்களின் பம்மாத்தை என்னவென்று சொல்ல! பக்தியின் பெயரால் இந்தப் பயங்கரம்! பக்தர்கள் கொஞ்சம் புத்தியைச் செலவழிக்கக் கூடாதா?

--------------------- மயிலாடன் அவர்கள் 12-1-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

Unknown said...

ungal nathigam nanraga ulladu, ana onnu neenga prunchikkonga modukku modakunnu kudich yarum padi ,vanthinu hospital pogala,adukkaka nan ada sarinnu sollala,mansula unnmaiyana pakthi irrunda kalla sapittalum karrium.neenga unmaiyana periyar kolkaiya pinpattrina kasu panam pakkama wall post adichu ella edthulayu ottunga intha thanniya kudich teengunu ,makkalidiya poi pesunnga vzhipunnarvu errpaduthunga adn neega seiura nalla oru visayam

tamilnanbarkal.com said...

கிருமிகளின் வேலையை இன்னும் இவர்கள் அறிந்திருக்கவில்லை தான், நாத்திகத்துக்கும், கிருமிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது தான் சரியான பதிவு தான் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு
athiradenews.blogspot.com