Search This Blog

1.11.09

பிரதோஷம் என்றால் என்ன?


பிரதோஷம்

பிரதோஷம் பிரதோஷம் என்று ஆன்மிகத்தில் சொல்கிறார்களே, அது எத்தனைப் பக்தர்களுக்குத் தெரியும்?

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்களாம். (பால் கடல் எங்கிருக்கிறது புவியியல் படித்த மேதாவிகள் கொஞ்சம் சொல்லக்கூடாதா?).

பாற்கடலை எதைக் கொண்டு கடைந்தார்களாம். மந்தாரமலையைக் கொண்டாம். அதற்குப் பயன்படுத்திய கயிறு வாசுகி என்னும் பாம்பாம்.

சிவபெருமான் அனுமதி பெறாமல் கடைந்ததால் பாம்பு விஷம் கக்கிற்றாம். முப்பத்து முக்கோடி தேவர்களும், விஷ்ணு, பிரம்மா உள்பட அனைவரும் சிவனை சரண் அடைந்தார்களாம். நந்தி பகவானை அழைத்து அந்த நஞ்சைக் கொண்டு வருமாறு சிவன் கட்டளையிட்டானாம்.

கொண்டு வரப்பட்ட அந்த நஞ்சை சிவன் லபக்கென்று விழுங்கினானாம். பார்வதி தேவியாகிய சிவனின் பாரியாள், விஷம் கீழே இறங்காமல் இருக்க தொண்டையை லபக்கென்று பிடித்தாளாம். விஷம் இறங்கியதால் சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றானாம்.

விஷம் அருந்திய சிவன் மூர்ச்சையானானாம். (சிவன் சக்தி இவ்வளவுதானா?) அப்பொழுது நந்தீஸ்வரன் (காளை) சிவனைத் தொழுது மூர்ச்சை தெளிய வைத்தானாம்.

சிவன் விழித்த இந்தக் காலம்தான் பிரதோஷ காலமாம். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 13 ஆம் நாள்தான் பிரதோஷமாம். மாலை 4.30 மணிமுதல் 7.30 மணிவரை உள்ள அந்த நேரத்தில் சிவனைத் தொழுதால் கடன், வறுமை, துர்மரணம், செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடுமாம். சிவனுக்கு உதவி புரிந்த நந்திக்கும் அபிஷேகம் செய்யவேண்டுமாம்.

இந்த விரதத்தை சித்திரை, வைகாசி, அய்ப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் சனிக்கிழமையன்று பிரதோஷ வேளையில் ஆரம்பிப்பது மிகச் சிறப்பாம்.

சிவதரிசனம் செய்த பிறகு உணவு உண்ணவேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் (300 தடவை) இந்தப் பூஜை செய்தால், ராஜாங்க சிம்மாசனப் பதவி கிடைக்குமாம். (அமைச்சர்கள் ஆக விரும்புபவர்கள் கவனிக்க).

இந்தக் கதை கடுகத்தனை அளவாவது அறிவுக்குப் பொருந்துகிறதா? சிவன் அனுமதி பெறாததால்தான் நஞ்சு வந்தது என்பதை, விஷ்ணு உள்ளிட்டோர் சிவனை வேண்டிக்கொண்டனர் என்பதையும் வைஷ்ணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

எந்தப் பாவமும் நீங்குமாம். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு சிவன் மோட்சம் கொடுத்தானாம். (திருவிளையாடல் புராணம் _ மாபாதகம் தீர்த்த படலம்).

இந்தக் கேடுகெட்ட அருவருப்பான பக்தித் துர்நாற்றத்தை என்னென்று தான் சொல்லுவதோ! திருநீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்லுவோரை லாடம் கட்டி அடிக்கவேண்டாமா? சிந்திப்பீர்!

----------------- மயிலாடன் அவர்கள் 31-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

8 comments:

அஹோரி said...

இம்ச தாங்க முடியலடா சாமி. எவண்டா கண்டு பிடிச்சான் "கருத்து சுதந்திரத்த" ?

தமிழ் ஓவியா said...

பிரதோஷம் பற்றிய உண்மையை அறிந்தவர்கள் பிரதோஷத்தை நம்ப மாட்டார்கள் அஹோரி.

உண்மையை அறியச் செய்யும் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் அஹோரி

அஹோரி said...

'பகுத்தறிவ' பயன்படுத்தி கொள்ள அடிச்சவனத்தான் இதுவரைக்கும் பாத்து இருக்கேன். பெரியார் இருந்தா ரொம்ப பீல் பண்ணுவார்.

தோ ... அந்த பக்கம் மாட கொட்டாயில அடைச்ச மாதிரி மனுஷனுங்கள அடிச்சி வச்சி கொடும படுத்துறானுங்க. அத பத்தி எழுதலாம்.

இல்ல இங்க இருக்குற குடும்ப நல தாத்தாவ பத்தி எழுதலாம்.

பகுத்தறிவுல என்ன கரன்ட்டா கண்டு பிடிச்சி புட்டீங்க ? மூடி வச்சிட்டு இன்றைய தேவை என்னவோ அத எழுதி தொலைக்கலாமே.

Web-Hosting said...

பார்ப்பனியம் ஒரு குள்ள நரி கூட்டம்...வேட்டையாடமலே திருடி தின்னும் கூட்டம் ...

Web-Hosting said...

கரண்ட கண்டு புடுச்ச யார்னு தெரி யுமா அகோரி? கண்டு பிடிச்சது ஒனும் பட்டையும் கொட்டையும் போட்ட கோவில் பூசாரி அல்ல ...பகுத்தறிவு வாதி தான்..நீங்க கண்டு புடுச்சது விபுதி பாக்கெட் ...விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சது விண்ணுக்கு ராக்கெட்.

அஹோரி said...

'எடிசன்' னே எதோ ஒரு 'Supreme Intelligence' இருக்குங்கறத மறுக்கவில்லை. அறிவியலால் கூட அனைத்திற்கும் விடை காண முடியவில்லை. அறிவியல் தத்துவம் அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கிறது.

அது கிடக்கட்டும் ... சாமி இல்லைங்கிற ஜென்மமெல்லாம் பகுத்தறிவுவாதியா? கருப்பு சட்ட போட்டவனெல்லாம் பெரியாரா ... ரொம்ப பீ பீ பீ பீ பீ ல் ல் பண்ண வேண்டாம்.

நீங்க கடைபிடிக்க வேண்டிய பகுத்தறிவு " கடவுள் இல்லை " என்பதல்ல ....." புள்ள குட்டிகளை படிக்க வையிங்க " என்கிறதுதான்.

... உரையை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

நம்பி said...

//அது கிடக்கட்டும் ... சாமி இல்லைங்கிற ஜென்மமெல்லாம் பகுத்தறிவுவாதியா? கருப்பு சட்ட போட்டவனெல்லாம் பெரியாரா ... ரொம்ப பீ பீ பீ பீ பீ ல் ல் பண்ண வேண்டாம். //

சொல்லிட்டு சொல்லிட்டு...மீண்டும் மீண்டும் குத்துக்கல்லுக்கு பொணந்திண்ணிகள் தான் பீ பீ பீ பீ பீலோ பீல் பண்ணி கருத்து சொல்லிகிட்டிருக்குது. ஏதோ படிக்குது அது வரைக்கும் போதும்.

Cevu said...

"பிரதோஷம் பற்றி " என்று தேடியதில் நீங்கள் தான் முதலில் தகவல் தருகின்றீர்... மிக்க நன்றி!