Search This Blog
18.11.09
பிராமணீயத்தை ஒழித்தவர்கள் - I
பிராமணீயத்தை ஒழித்தவர்கள்
சென்னையில் கொஞ்ச நாளைக்கு முன்பு சிறீமான்கள் டாக்டர் வரதராஜூலு நாயுடுகார், ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியார், திரு.வி. கலியாணசுந்தர முதலியார், ந. தண்டபாணி பிள்ளை, ஈ.வெ.இராம சாமி நாயக்கர் முதலியவர்கள் கூடிப் பேசியதாகவும் அதன் முடிவு என்ன என்பதைப் பற்றியும் முந்திய இதழில் எழுதியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
அதாவது, அரசியல் விஷயத்தைப் பற்றி அவரவர்கள் அபிப்பிராயப்படி நடந்து கொள்வதென்றும், சமூக சமத்துவ விஷயங்களில் எல்லோரும் ஒரே அபிப்பிராயமாயிருக்கிறோம் என்றும் அது விஷயத்தில் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது என்றும் எழுதியிருந்தோம். அதன் பலனாக அதே சமயத்தில் சமூக சமத்துவ விஷயமாய் எல்லோரும் ஒத்துப் பிரசாரம் ஆரம்பிக்கப்படும் முன்பு பார்ப்பனரல்லாதார் வைதீக சடங்குகள் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்ப்பனர்களைக் கொண்டு செய்யப்படும் சடங்குகளை நிறுத்துவதற்கு முதல் முதலாகப் பிரசாரம் செய்யவேண்டுமென்றும், அப்படிச் செய்வதில் தங்கள் தங்கள் பெற்றோர்களையும் மற்றோர்களையும், மோட்சத்திற்கனுப்புவதென்றும், அவர்கள் சுகமாய் இருப்பதற்கென்றும் பார்ப்பனர்களைக் கொண்டு திதி, திவசம் என்றோ சிரார்த்தம் என்றோ சொல்லும்படியான பல வைதீகச் சடங்குகள் செய்வதில் ஒன்றும் பலனில்லையென்றும், அம்மாதிரி சடங்குகள் பார்ப்பனர்களின் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்டதல்லாமல் வேறல்லவென்பதை பார்ப்பனரல்லாதாருக்குத் தெரிவிப்பதற்காக ஒரு பிரசாரம் ஆரம்பிப்ப தென்றும் அதில் அப்பொழுதிருந்து பேசிய ஐவரும் மற்றும் அதற்கு சம்மதித்தவர்கள் பெயரையும் வெளியிட்டு வருவதென்றும் முடிவு செய்து அதன்படியே சென்றவாரத் 'தமிழ்நாடு' பத்திரிகையிலும் "பிராமணீயத்தை ஒழித்தவர்கள்' என்ற தலைப்பின் கீழ் பல கனவான்களின் பெயர் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் தெரியப்படுத்தும் கனவான்கள் பெயரும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டு வரப்படும்.
அதாவது, யார் ஒருவர் பார்ப்பனரைக் கொண்டானாலும் மற்றபடியானாலும் தாங்கள் செய்யும் திதியோ, திவசமோ, சிரார்த்தமோ அல்லது வேறு பல சடங்குகளால் இறந்துபோன தங்கள் பெற்றோர்களுக்கோ, மற்றோர்களுக்கோ "மேலுலகத்திற்கு"ப் போய்ச் சேரும் என்று நினைத்துக்கொண்டு ஒன்றும் செய்வதில்லை, அவ்விதச் சடங்குகளில் நம்பிக்கையில்லை என்று யாருக்கு ஏற்படுகிறதோ அவர்கள் தங்கள் பெயரைத் தெரியப்படுத்தினால் பத்திரிகையில் பிரசுரித்து வரப்பெறும்.
மேற்கூறிய பிரகாரம் பிராமணீயத்தை விரட்டியவர்களாவன: சிறீமான்கள்
1. டாக்டர் வரதராஜூலு நாயுடு, அசோக விலாஸ், சேலம்.
2. திரு.வி.கலியாணசுந்திர முதலியார், 'நவசக்தி' ஆசிரியர், சென்னை.
3. ஈ.வெ.இராமசாமி நாயக்கர், 'குடிஅரசு' ஆசிரியர், ஈரோடு.
4. ஆர்.கே. ஷண்முகஞ் செட்டியார், 'ஹவார்டன்', கோயமுத்தூர்.
5. சனக சங்கர கண்ணப்பர், 'திராவிடன்' ஆசிரியர் , சென்னை.
6. என். தண்டபாணி பிள்ளை, 6-99 பவழக்கார தெருவு, சென்னை.
7. ச. சொக்கலிங்கம் பிள்ளை, 'தமிழ் நாடு' துணை ஆசிரியர், சென்னை.
8. வெ. சுப்பையா பத்தர், 84 முதல் வீதி , ரங்கூன்.
9. திரு. அ.மு. அ.அண்ணாமலை செட்டியார், ஆத்தங்குடி.
10. எம். என். முத்துக்குமாரசாமி பாவலர் , பரோபகார சங்கத்தலைவர், மேல்பாதி, நெல்லிக்குப்பம்.
11. எஸ். இராமநாதன் , காரியதரிசி, தமிழ் மாகாண அ.பா.சர்க்கா சங்கம், ஈரோடு.
12. சா. இராமசாமி நாயக்கர், வியாபாரம், ஈரோடு.
13. ஓ.சி. முத்துசாமிக் கவுண்டர், வியாபாரம் , ஈரோடு.
14. மணவை ரெ. திருமலைசாமி, 'குடிஅரசு' துணை ஆசிரியர், ஈரோடு.
------------------- "குடிஅரசு" 8-8-26
Labels:
பெரியார்-மற்றவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment