Search This Blog

4.11.09

பார்ப்பனியம் எல்லாவற்றையும் ஏப்பமிட்டு விடும்!


இஸ்ரோ தலைவர்

இந்திய விண்வெளி ஆய்வு மய்யத்தின் (இஸ்ரோ) தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள கே. இராதாகிருட்டினன் தாம் பொறுப்பை ஏற்குமுன் அவசர அவசரமாக குருவாயூர் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை வாழைப் பழங்களைக் கொடுத்து பகவானின் ஆசியைப் பெற்றுக்கொண்டிருக்கிறாராம்.

அறிவியலில் நோபெல் பரிசு பெற்றவரான சி.வி. ராமன் கூறிய கருத்துக் குறித்து பொது உடைமைவாதியான ஏ.எஸ்.கே. தாம் எழுதிய "கடவுள் கற்பனையே _ புரட்சிகர மனித வரலாறு" எனும் நூலின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

முதல் மனிதன், யூரி காரின் 1962 இல் விண்வெளி அகண்ட காஸ்மாசில் (Cosmos) சென்றதை விஞ்ஞானியாக இருந்தும் கடவுள் நம்பிக்கைக் கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிகமிகப் பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்று பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண்ணங்கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்கள் நிலையை நான் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை; கூறாமலேயே விளங்கும் என்று தம் வேதனையை வெளிப்படுத்தினார் தோழர் ஏ.எஸ்.கே.

நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கான ஒரு லைசென்சு என்று தந்தை பெரியார் அவர்கள் துல்லியமாகக் கணித்துக் கூறியதை இந்த இடத்தில் பொருத்திப் பார்ப்பது பொருத்தமானதே!

ராகேஷ் சர்மா பெயர் நினைவிருக்கிறதா? முதல் விண்வெளி வீரரான இந்தியர் (1984) அவர்.

அப்பொழுது பார்ப்பனர்கள் நடத்திய தாம்பிராஸ் என்ற ஏடு என்ன எழுதியது தெரியுமா?

ராகேஷ் சர்மா ஆம் வான்வெளியில் பறந்த உலகத்தின் உச்சியிலே பறந்த முதல் இந்தியர்.

பாரதமே தலை நிமிர்ந்து நிற்கிறது!

நாமும் தலைவணங்கி நிற்கிறோம்.

எதற்காக? அவன் நம் இனத்தைச் சேர்ந்தவன் என்பதனாலா?

விண்வெளி கலத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் உதிர்த்தானே மூன்று முறைகள் அந்தக் காயத்ரி மந்திரத்துக்காக! என்றது பார்ப்பன ஏடு. சென்றவனின் அறிவுத்தீட்சண்யமும், தாம்பிராசில் எழுதுபவர்களின் புத்தியும் எப்படி மேய்கின்றன பார்த்தீர்களா?

இந்நிலையில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டியது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவதையும் எண்ணிப்பார்ப்போம் (51ஏ).

இஸ்ரோ விஞ்ஞானக் கூடத்தின் தலைவரே குருவாயூரப்பனுக்கு வாழைப்பழம் (அல்வா கொடுக்கிறாரோ) கொடுக்கிறார். இந்தியாவின் பார்ப்பனியம் எல்லாவற்றையும் ஏப்பமிட்டு விடும், எச்சரிக்கை!

-------------- மயிலாடன் அவர்கள் 4-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

6 comments:

Unknown said...

அது அவருடைய நம்பிக்கை.நாத்திகர் அவ்வாறு செய்யமாட்டார். இஸ்ரோ தலைவராக ஒரு ராபர்ட் பதவியேற்று அவர் வேளாங்கண்ணிக்கு சென்று வணங்கினால் அதையும் பார்பனியம் என்பீர்களா.அப்துல்கலாம் நாத்திகர் அல்லவே.அவர் இறை நம்பிக்கை கொண்டவர், இந்திய மரபை மதிப்பவர்.பல அறிவியலாளர்கள் தத்தம் மத நம்பிக்கைகளை பின்பற்றியபடி சிறந்த அறிவியலாளர்களாகவும் இருக்கிறார்களே. நாத்திகம் வேறு,
அறிவியல் வேறு.பிழை உங்கள் புரிதலில் அவர்களிடம் இல்லை.

பல்லவநாடன் said...

vaasagan சரியாக சொல்லியிருக்கிறார்! பார்பனிய கண்ணாடி அணிந்து பார்த்தால் எல்லாம் பார்பனியமாகத்தான் தெரியும்!

தமிழ் ஓவியா said...

//அது அவருடைய நம்பிக்கை.நாத்திகர் அவ்வாறு செய்யமாட்டார். இஸ்ரோ தலைவராக ஒரு ராபர்ட் பதவியேற்று அவர் வேளாங்கண்ணிக்கு சென்று வணங்கினால் அதையும் பார்பனியம் என்பீர்களா.//

யார் செய்தாலும் தவறு தான்.

ரவி said...

&&&&&

ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ^^^

முகப்பில் நீங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள எழுத்துப்பிழையை மாற்றுங்கள் என்று கெட்டுக்கொள்கிறேன்.

தமிழ் ஓவியா said...

எழுத்துப் பிழையை சரி செய்து விட்டேன் ரவி

அசுரன் திராவிடன் said...

கீழ்கட்டளை இலிருந்து திருவான்மியூர் செல்லும் பேருந்தில்(M1) ஒட்டப்பட்டுள்ள வாசகம்...நன் படித்தது இதை 5-11-2009(10 AM)
**************************************************************
இந்துத்துவம் என்பது இந்தியதுவமே
இந்து விரோதம் இந்திய விரோதம்
இந்தியனாய் இருக்க இந்துவாய் வாழுங்கள் ...
********************************************************
இதை எந்த கண்ணாடி கொண்டு பார்ப்பது ...

இந்திய ஒரு மதசார்பற்ற நாடு...என்பது மேலே உள்ள வாசகம் நல்ல எடுத்துகாட்டு...இதை அப்படியே எல்லா இடங்களிலும் ஒட்டி விடலாம்.