Search This Blog
18.11.09
பிராமணீயத்தை ஒழித்தவர்கள் -2
பிராமணீயத்தை ஒழித்தவர்கள்
பார்ப்பனரல்லாதார் வைதீகச் சடங்குகள் என்று பெயர் வைத்துக் கொண்டு தங்கள் குடும்பங்களில் நடக்கும் சுபா சுப காரியங்களுக்கு திதி, திவசம் என்றோ, சிரார்த்தம் என்றோ, தங்கள் முன்னோர்களின் ஞாபகார்த்தமாகச் செய்யும் காரியத்தை , முன்னோர்களை மோட்சத்திற்கு அனுப்பச் செய்யப்படும் கிரிகை என்ற மூட நம்பிக்கையால், அக் காரியத்திற்கு "பிராமணர்'களை அழைத்து அதை அவர்களைக் கொண்டே செய்ய வேண்டுமென, உடம்போ டொட்டிய அழுக்குபோல் தங்கள் மனத்தில் படியப் பெற்று, ஒரு பார்ப்பனனைக் கூட்டி வந்து பலவகைத் தான சன்மானங்களை அப் பார்ப்பனனுக்கு அளித்து, அவன் சொல்லும் பிரகாரமெல்லாம் சொல்லி, அவன் காலில் விழுந்து விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருவதும், அதேபோன்று கலியாணம் முதலிய சுப காரியங்களுக்கும் பார்ப்பனனை அழைத்து, மண மக்களுக்கு ஆயுள் விருத்தியையும் புத்திர சம்பத்தையும் அப் பார்ப்பனன் இரட்சாபந்தனமளித்து வருவதாகப் பிரேமைக்குள்ளாகி பார்ப்பனனைக் கொண்டு செய்து வருவதும் வீண் அர்த்தமற்ற - பொருளற்ற - சுயமரியாதையை இழக்கச் செய்யத்தக்க ஒரு கூட்டத்தார் தங்கள் பிழைப்பைக் கருதி செய்து வைத்து ஏமாற்றி வரும் காரியமாகும்.
இவ்வுண்மையைத் தெரிந்த பலர் சின்னாட்களாக அவ்வித மூடநம்பிக்கைக்குள்ளாகாமல் விழித்துக் கொண்டனர் - விழித்து வருகின்றனர். இவ்வாறு தங்கள் சுபா சுப காரியங்களுக்குள் பிராமணீயம் வந்து நுழையாமல் விரட்டியவர்களுள் 14 கனவான்களின் பெயரை சென்ற இதழில் இதே தலைப்பின் கீழ் வெளியிட்டிருந்தோம். இவ்விதழிலும் பிராமணீயத்தை ஒழித்தவர்களுள் சில கனவான்களின் பெயரைக் கீழே வெளியிட்டுள்ளோம். இனியும் அவ்வாறு சடங்குகள் செய்வதில் நம்பிக்கையில்லாதவர்கள் பெயரைத் தெரியப்படுத்தினால் வாரந்தோறும் பத்திரிகையில் பிரசுரித்து வரப்பெறும்.
மேற்கூறிய பிரகாரம் பிராமணீயத்தை விரட்டிய மற்ற கனவான்களின் பெயர்களாவன:-
15. எஸ்.எ.கே. கலியப்பெருமாள் நாயுடு, ஆஞ்சிநேய வார்ப்படத் தொழிற்சாலை, திருச்சி.
16. ச.ப.சி . பரமசிவன் செட்டியார், கதர் டெப்போ, திருச்சி.
17. அ. சிவப்பிரகாசம் பிள்ளை, தலைமைத் தமிழாசிரியர், அர்ச் சூசையப்பர் கலாசாலை, திருச்சி.
18. தி. திரவியம் பிள்ளை, முனிசிபல் கவுன்சிலர், திருச்சி.
19. பி.ஏ. சுப்பிரமணிய பிள்ளை, இராகவ செட்டித் தெருவு, திருச்சி.
20. ஈ.என். வெங்கடப் பெருமாள் நாயுடு, பி.ஏ., பென்ஷன் தாசில்தார், ஈரோடு.
21. கு.வீராசாமி நாயுடு, ஈரோடு.
22. சி. கந்தசாமி, திருநெல்வேலி கதர் நெசவுச் சாலை, சாவடியகம், திசையன்விளை.
----------------------------"குடி அரசு" 15.8.26
Labels:
பெரியார்-மற்றவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment