Search This Blog

18.11.09

தியாகத்தில்கூட பிராமணன் தியாகம்! சூத்திரன் தியாகம்!!


வ.உ.சி.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இந்நாள் (1936).

சுதந்திரப் போராட்டம் என்று கூறப்படுகிறதே, அதில் வ.உ. சிதம்பரனார் செய்த தியாகத்திற்கான தராசு தட்டின் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொருவர் இந்தியாவில் பிறந்ததில்லை.

ஆனாலும், வ.உ.சி. சூத்திரர்தானே.அதனாலே அவரது தியாகம்கூட மலிவு சரக்காகிவிட்டது.

‘வெள்ளையனே வெளியேறு!’ என்ற தீரக் குரல் வெடித்துக் கிளம்பிய நேரத்தில், கட்சியை விட்டே வெளியேறியவர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், அவருக்குத்தான் “வெற்றிலைப் பாக்கு’’ வைத்து அழைத்து முதல் இந்தியன் கவர்னர் ஜெனரல் என்ற மகுடம் சூட்டப்பட்டது; என்ன செய்வது, காந்தியாரின் சம்பந்தியாகவும் ஆகிவிட்டாரே!

இன்னொரு குறிப்பு “குங்குமம்’’ இதழ் பக்கம் 17 இல் (7.4.2000) வெளியானது.

1973_74 ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளைக் கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது:

“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத் தகவல்!

ஆச்சாரியாரின் தியாகத்தையும், சுதந்திரப் போராட்டத்துக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வ.உ.சி. தமிழரின் தியாகத்தையும் “மனச்சான்று’’ உள்ளபடியே உள்ளவர்கள் எடை போட்டுப் பார்க்கட்டும்!

தியாகத்தில்கூட “பிராமணன் தியாகம்!’’ ‘‘சூத்திரன் தியாகம்’’ என்கிற இரட்டை அளவுகோல் இருப்பதை எண்ணும்போது இதயத்தில் திடீர் தீ பிடித்தது போலவே தகிக்கிறது.

வ.உ.சி. அவர்கள், தந்தை பெரியார் அவர்களிடத்திலும், சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சிகளின் நடவடிக்கைகளிலும் மிகுந்த மதிப்பும், ஈடுபாடும் கொண்ட மாந்தராகத் திகழ்ந்தார்கள்; பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மடைதிறந்த தன் எண்ண நீரோட்டத்தையும் வெளிப்படுத்தியதுண்டு.

“நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் தமிழர்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது. உதாரணமாக முன்பெல்லாம் “இந்து’’ பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது, திரு. கஸ்தூரி ரெங்க அய்யங்கார் “வாடா சிதம்பரம்!’’ என்றழைத்துப் பேசுவார். ஆனால், நீதிக்கட்சி கொள்கை தமிழ்நாட்டில் கோலோச்சிய பிறகு ஒரு நாள் போனேன். “வாங்கோ சிதம்பரம்பிள்ளை, சவுக்கியமா?’’ என்றழைத்தார் என்கிறார் வ.உ.சி.

வ.உ.சி. நினைவு நாளில் இந்த வரலாற்றுக் குறிப்புகளை அசை போடுவோமாக!

----------- மயிலாடன் அவர்கள் 18-11-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

2 comments:

ராஜவம்சம் said...

//வ.உ.சி. சூத்திரர்தானே.அதனாலே அவரது தியாகம்கூட மலிவு சரக்காகிவிட்டது//

சூத்திரனுக்காவது ஒரலவாவது இந்த விசயத்தில் மதிப்பு இருக்கு முஸ்லீமுக்கு!

மாவீரன் சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் அமைச்சரவையில் 5 ந்து முஸ்லீம் மந்திரிகள் இருந்தார்கள் இவர்களின் ஒருவர் பெயரவது தெரிந்தவர்கள் எத்தனை பேர் ???

நம்பி said...

Blogger ராஜவம்சம் said..
//சூத்திரனுக்காவது ஒரலவாவது இந்த விசயத்தில் மதிப்பு இருக்கு முஸ்லீமுக்கு!//

எது? இந்த "சூ...ரனுக்காவது" என்ற வார்த்தை மதிப்பா...? இது தான் அகராதியில மதிப்பா?....பெத்த ஆத்தால கேவலப்படுத்தறதா...?