Search This Blog

17.9.09

பெரியாரைப் பற்றி ஆச்சாரியாரின் மதிப்பீடு



முக்கியமான தமிழ்நாடு தேச பக்தர்கள் மீது வழக்குத் தொடரப்பெற்று வந்த காலம் 1924 ஜூன். அவ்வாறு வழக்குத் தொடரப்பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ.இராமசாமி ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ.ராமசாமி மீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18ஆம் தேதியன்று வருகிறது என்பதற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவதாஸ் காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப்போகுமாறு சொன்னதைக் கூட அவர் ஏற்கவில்லை.

சென்னைக்கு நான் 18ஆம் தேதி போயாக வேண்டும். அன்றுதான் இராமசாமி நாய்க்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர் மீது அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரஸ் நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக (head and active master) அவர் இருந்து வந்திருக்கிறார் என்று ராஜாஜி இரயிலிருந்து 16.10.1924ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

--------------நூல்:-"தமிழ்நாட்டில் காந்தி" -பக்கம் 391, 392

3 comments:

பித்தனின் வாக்கு said...

நீதிகட்சி என்ற ஒன்றில் வெள்ளையர்களுக்கு ஆதரவாக பெரியார் அடிவருடிக்கொண்டு இருந்த பொழது,சுதந்திரம் கிடைத்துவிடும் என்றவுடன் ஆரம்பித்ததுதான் திராவிடர் கழகம்.
அப்பொழதும் ஒரு பெரியார் தலைவர்களில் பத்துடன் ஒன்றாகத்தான் பார்க்கப்பட்டார்.
இந்திராகாந்தியை எதிர்ப்பற்க்காக சுந்திரா கட்சி ஆரம்பித்த ராஜாஜி அதுக்கு ஆதரவாக பெரியாருடன் ஸேர்ந்தார். அப்பொழது அவர் பிராமனர்களை ஒரு கையில் பூனூலை பிடித்துக்கொண்டு மறுகையில் ஓட்டு போடச்சொன்னார். அவ்ர்களும் ஓட்டு போட்டனர்,அந்த நன்றிக்காகத்தான் இன்றும் திராவிடர் கழகம் பிராமனர்களை தன் மனம் போனவாக்கில் விமர்சித்து வருகிறது. ராஜாஜி பண்ணிய ஒரே தவறு இதுவாகத்தான் இருக்க முடியும்.

தமிழ் ஓவியா said...

பித்தன் தவறான தகவல்களை பின்னூட்டமாக இட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து செய்திகளை நன்றாகத் தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடவும்.

நம்பி said...

Blogger பித்தன் said...

// ராஜாஜி பண்ணிய ஒரே தவறு இதுவாகத்தான் இருக்க முடியும்.
September 18, 2009 6:37 AM //

சரி! ராஜாஜி தவறு பண்ணாரா இல்லையா? என்பதை அப்புறம் பார்த்துக்கலாம்...

ராஜாஜிக்கு நல்லது பன்றதா நினைச்சுகிட்டு அவரை பத்தி தப்பு தப்பா பின்னூட்டம் வைக்கப்பட்டிருக்கிறதே!

ராஜாஜிக்கே தவறு மேல் தவறிழைக்கப்பட்டிருக்கிறதே!

முதல்ல ராஜாஜி பத்தியே தவறான தகவலா இருக்கே...இது தான் எதை தின்னா "பித்தம்" தெளியும் என்ற கதை தான்.

Blogger பித்தன் said...
//இந்திராகாந்தியை எதிர்ப்பதற்க்காக சுந்திரா கட்சி ஆரம்பித்த ராஜாஜி அதுக்கு ஆதரவாக பெரியாருடன் ஸேர்ந்தார்.//

சுதந்திரா கட்சி 1959 இல் நேருவுக்கு எதிராக...நேருவின் சோசலிச கொள்கைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது. இருவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஒருவர் ராஜாஜி இன்னொருவர் என.சி.ரங்கா.

நீதிக்கட்சி அப்போது எங்கே வந்தது?..அப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகமே வந்துவிட்டதே!