Search This Blog

1.8.08

"கற்பு" -நாமும் பார்ப்பனர்களும்....


ஒருபால் கற்பு!

நாசமாகப் போகிற கற்பு! கற்பு! என்று சொல்லி நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கிவிட்டார்கள். பார்ப்பானோ மிகக் கெட்டிக்காரன். ஆயிரம் பேரை அவள் பார்த்திருந்தால் கூட அவளைப் பத்தினியாக்கி விடுவான். சீதை, துரோபதை, தாரை இவர்களே இதற்கு உதாரணம். கற்பு என்றால் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியாக அல்லவா இருக்க வேண்டும்? பைத்தியக்காரத்தனமாக மூடநம்பிக்கைகளைப் புகுத்திப் பாழாக்கி விட்டார்கள். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது! கூடவே கூடாது!!வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காகவும், இருவரையும் கற்பு எனும் சங்கிலியால் எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கின்ற கற்பு மாத்திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவு யோக்கியமும் நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை. பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும், காவலுக்கு பயந்து பதிவிரதையாய் இருப்பவளும்; மானத்திற்குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும் ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள்.

------------------- பெரியார் ஈ.வெ.ரா - வாழ்க்கைத் துணைநலம் என்ற நூலிலிருந்து பக்கம் 45-46

1 comments:

bala said...

//காவலுக்கு பயந்து பதிவிரதையாய் இருப்பவளும்; மானத்திற்குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும் ஒரே//

தமிழ் ஓவியா அய்யா,
அய்யோ என்னங்க இது இப்படி சொல்லிட்டாரு நம்ம தாடிக்கார அய்யா?அப்போ தாடிக்காரரோட தாய்,மற்றும் தமிழ்த் தாய் #1,தமிழ்த் தாய் #2 அனைவரும் யோக்யதை அற்ற பரத்தைகளா?என்ன கொடுமை இது தமிழ் ஓவியா? சாமி கடவுளே, அது மாதிரியெல்லாம் இருக்கக் கூடாதே!

பாலா