ஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை
காஞ்சிபுரம் மூக்கைத் துளைக்கிறது; கசுமாலம் இப்படியும் ஒரு பக்தியா? ஜென்மங்களா? என்று நாக்கைப் பிடுங்க நாலு கேள்விகளைப் பெண்கள் நடு வீதியில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
மச்சேஸ்வரர் கோயிலாம் - அந்தக் கோயில் அர்ச்சகன் தேவநாதனாம் - கோயில் கருவறையிலே கரு உற்பத்தி பண்ணிக்கொண்டு கிடக்கிறானாம்.
பகவான் கர்ப்பக் கிரகத்தில் சரசமாடினால் முதுமை வந்து முட்டாதாம்- என்றும் இளமையில் சுகிக்கலாமாம்! அர்ச்சகன் தேவநாதனின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி பாவையர் பலர் அவன் மடியில் வீழ்ந்தனராம்.
ஒரு பக்கம் அர்ச்சனைத் தட்டில் காசு விழுமாம். இன்னொரு பக்கம் கர்ப்பக்கிரகத்தில் காமச் சேட்டை பூஜைகள் நடக்குமாம்.
எவ்வளவு கொழுப்பும், வக்கிரமும் இருந்தால் இந்தக் கேவலத்தை கை தொலைபேசி மூலம் படம் பிடித்து வைத்து, பிறகு தனியே போட்டுப் பார்த்து ரசிப்பானாம்.
ஒரு பெண், இரு பெண் அல்ல; 15 பெண்கள் வரை பட்டியல் நீள்கிறது. விஷயம் வெளியுலகுக்கு வரவே, ஆசாமிதன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான்! இப்பொழுது நீதிமன்றத்தில் சரண் அடைந்து கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.
காமகோடி பீடாதிபதியே இந்தத் தரத்தில் உள்ளவர் என்கிறபோது இந்தத் தேவநாதன்தான் எம்மாத்திரம்!
காஞ்சி சங்கரமடத்தில் நடக்காதவைகளா இந்தக் கோயிலில் நடந்து விட்டது?
காமத்தையறுத்த மடாதிபதியே காமக் குளத்தில் விழுந்து நீச்சல் அடிக்கிறார் என்றால், அவாள் சிஷ்யாள் அவாள் வயதுக்கு எவ்வளவு ஆட்டம் போடுவா?
ஒவ்வொரு நாளும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் விடியற்காலை நாலரை மணிக்கு திருவரங்கத்திலிருந்து உஷா என்ற பெண் ஜெயேந்திரரோடு சல்லாப மொழிகளில் உல்லாசப் பேச்சுகளைப் கைப்பேசியில் பேசுவார் என்ற தகவல் எல்லாம் ஊர் சிரிக்கவில்லையா? அனுராதா ரமணன் என்ற பிரபல பார்ப்பனப் பெண் எழுத்தாளர், சங்கராச்சாரி வேங்கையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை கண்ணீரும் கம்பலையுமாக தொலைக்காட்சிகளில் குமுறினாரே கொட்டியழுது வேதனையின் சூட்டைத் தணித்துக் கொள்ளவில்லையா? மைதிலி என்ற பெண்ணுடன் தன் எதிரிலேயே அந்த மடாதிபதி உறவு வைத்தார் என்று ஊருக்கும் உலகுக்கும் அறிவித்தாரே அதைப் பார்க்கும்போது இந்த தேவநாதன் விஷயம் அற்பமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
வடக்கே குஜராத் மாநிலம் தபோயில் உள்ள சவுமியநாராயண் கோயிலில் என்ன நடந்தது?
அர்ச்சகர்ப் பார்ப்பனர்களான சந்த், தேவ்வல்லப் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே கூத்தும் குடியுமாகக் கும்மாளம் போட்ட காட்சிகள் எல்லாம் வீடியோ கோப்புகளாக வெளியில் வந்த,, காரித் துப்பினார்களே!
சபரி மலைக் கோயிலின் மூத்த தந்திரியான மோகனரு விபச்சாரிகளின் வீட்டில் கையும் களவுமாகப் பிடிபட வில்லையா?
இவையெல்லாம் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில் சர்வ சாதாரணமாயிற்றே!
ஓம் என்பதற்கு அவர்கள் கூறும் தத்துவம் என்ன? ஆண் - பெண் சேர்க்கையின் வடிவம் என்றுதானே விளக்கம் சொல்லுகிறார்கள்?
பெண்கள் நெற்றியில் திலகமிட்டால், அது வீட்டு விலக்கான பெண்ணின் குருதியின் அடையாளம் என்று தானே கூசாமல் சொல்லுகிறார்கள். நாமம் தரிக்கிறீர்களே, அது என்ன என்று கேட்டால் அதற்கும் ஒரு தத்துவத்தைத் தயாராகவே வைத்துள்ளனரே!
வெள்ளைக் கோடுகள் இரண்டும், விஷ்ணுவின் தொடைகள் என்றும், நடுவில் உள்ள சிவப்புக் கோடு விஷ்ணுவின் ஆண் குறி என்றும்... அடேயப்பா, எவ்வளவு அட்சரப்பிசகு இல்லாமல் சொல்லுகிறார்கள்.
இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் மும்மூர்த்திகளும் சரி, அவர்களின் சீடகோடிகளும் சரி, தேவாதி தேவர்களும் சரி கற்பழிப்புக் குற்றம் செய்யாத ஒரே ஒரு கடைக்குட்டி சாமியைக் காட்ட முடியுமா?
காஞ்சிபுரம் தேவநாதன் இப்படியென்றால் அந்தத் தேவநாதனாகிய இந்திரன் கவுதமமுனிவரின் மனைவி அகலிகையை மாறுவேடம் பூண்டு கற்பழிக்கவில்லையா! சரசுவதியையே பெண்டாண்டவன் தானே படைத்தல் கடவுளான பிரம்மா.
தாருகாவனத்தில் இருந்த ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி தன் சிசுனத்தை இழந்தவன் தான் முழுமுதற் கடவுளான சிவன். மகாவிஷ்ணுவைப்பற்றி கேட்கவும் வேண்டுமா? அதற்கென்றே ஒரு அவதாரமே எடுத்து (கிருஷ்ணாவதாரம்) காம வேட்டை யாடியவன் ஆயிற்றே!
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் அளித்த மாபாதகம் தீர்த்த புராணங்கள் இந்துமதத்தைத் தவிர வேறு எங்குண்டு?
கோயில்களைப் பாருங்கள் அங்கு கொக்கோகக் காட்சிகள்; தேர்களைப் பாருங்கள் தேவர்களின் லீலா வினோத காட்சிகள்; இந்து மதத்தின் எந்தப்பரப்பை நோக்கினாலும் இத்தியாதி, இத்தியாதி காம சேட்டைகளின் களேபரக் காட்சிகள்தாம்.
அதற்காக வெட்கப்படுவதில்லை; இன்னும் சொல்லப் போனால் அந்தராத்மாவும் பரமாத்வாவும் ஆலிங்கனம் செய்கின்றன என்று அதற்குத் தத்துவ வார்த்தைகள் எல்லாம் தடபுடலாகவே உண்டு.
சாஸ்திர ரீதியாகவே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளனர்.
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சிவனம் பாபநாஸம்
சம்பனம் சர்வ தீர்த்தானாம்
மைதுனம் மோக்ஷ சாதனம்
பொருளும் வேண்டுமா?
வேசிகளைப் பார்ப்பதே புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவங்கள் நாசமாகும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமம்; உடலுறவு கொள்வது மோட்சத்தை அடையும் வழி என்று மோட்சத்திற்குக் குறுக்கு வழிகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளது இந்தக் குள்ளநரிக் கூட்டம்.
இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதையை அவாளின் செல்லப் பிள்ளையான கம்பனே கூறி வைத்திருக்கிறான்.
இராமன் வனவாசம் சென்றபோது உயிர்கள் எல்லாம் அழுதன; மரங்கள் கருகின. ஆனால் பார்ப்பனர்கள் ராமனிடம் தங்களுக்கு இளம் பசுவும் கன்றும் தேவை என்று கேட்டுப் பெறுகின்றனர். ராமன் வனவாசம் முடிந்து நாடு திரும்பும்போது வாடிய பயிர்கள் துளிர்த்தன, உயிர்கள் மகிழ்ந்தன. மக்கள் கூடினார்கள். அப்பொழுது விலைமகள் வீடுகளில் இருந்த பார்ப்பனர்கள் வேசியர்களின் புடவையைக் கட்டிக் கொண்டும், வேசியர்கள் வேட்டிகளை கட்டிக் கொண்டும் வெளியில் வந்தனர் என்கிறான் கம்பன்.
வேசியர் உடுத்த கூறை வேதியர் சுற்ற வெற்றிப் பாசிழை மகளிர் ஆடை யந்தணர் பறித்துச் சுற்ற வாசம், மென் கலவைச் சாந்து என்று இனையன மயக்கந்தன்னால் பூசினர்க்கு இரட்டி ஆனார்
பூசலார் புகுந்துளோரும்
காளமேகப் புலவர் என்ற குடந்தை பார்ப்பான், தான் மோகம் கொண்ட தாசிப் பெண்ணுக்காக தான் வரித்துக் கொண்ட வைணவத்திலிருந்து விலகி சிவத்துக்கு தாண்டினான் என்பதெல்லாம் காமக் குரோதங்களுக்குமுன் கடவுளாவது கத்தரிக்காயாவது வேதங்களாவது வெண்டைக்காயாவது மதங்களாவது மண்ணாங் கட்டிகளாவது சர்வம் சரணம் காம சுகப்பவது.
ஒன்றைக் கவனிக்க வேண்டும்; காஞ்சிக் கோயில் தேவநாதன் அர்ச்சகப் பார்ப்பானின் சமாச்சாரம்பற்றி திருவாளர் துக்ளக் மூச்சு விட்டதுண்டா? கல்கி கண்டு கொண்டதுண்டா? தினமணி தீண்டியதுண்டா?
பக்தி போதைத் தமிழர்கள் சிந்திக்க வேண்டிய நேரமும், இடமும் இது!
இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரல் எரிந்து விடும் என்று விவேகானந்தரிடம் கூறினாராம் மாக்ஸ்முல்லர், எந்த அர்த்தத்தில் கூறினாரோ தெரியவில்லை இதயத்துக்கும், மூளைக்கும் பாயும் ரத்தம் கெட்டுப் போய்விடும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
---------------- மின்சாரம் அவர்கள் 21-11-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
5 comments:
புராணத்தில் நடன போட்டியில் சிவனுக்கும் பார்வதிக்கும் நடனம் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுது சிவன் பார்வதியை எப்படியாவது வென்று விடவேண்டும் என்பதற்காக தனது (சிவன்) இடது காலை தலைக்கு மேல் தூக்கி தன்னுடைய குறியை பார்வதிக்கு காட்டி மலைக்க வைத்தவர் தான் இந்த சிவனார். இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற பார்வதி விரகதாபத்தில் இருந்ததினால் ஒரு முறை ஆண் குதிரையின் குறியை கண்டதும் மேலும் விரகதாபம் கொண்டார். இதனால் சிவன் குதிரை ரூபத்தில் அவதாரமெடுத்து பார்வதியை புணர்ந்தார். அவரின் ஆஸ்தான ஏஜன்ட் பார்ப்பனனுக்கு இதெல்லாம் தெரியும் அதனால் தான் அவரை சாட்சியாக வைத்து கொண்டு இந்த பார்ப்பன தேவநாதன் கோயிலை கொடிய கூடாரமாக்கி புணர்ந்தார். கடவுள் எவ்வழியோ ஏஜென்ட்டும் அவ்வழி. இது ஏதோ செக்ஸ் புத்தகம் போல் உள்ளது, அதைவிட மேலாக உள்ளது, வளரும் இளைஞர்கள், சிறுவர்கள் இப் புராணங்களை படித்தாலே விரகதாபம் கொண்டுவிடுவர். இதை பெண்கள் படித்து விட்டு காரித்துப்பிவிட்டு சென்றனர் (இணையத்தில் உள்ளது). அது முதல் லிங்கத்தை பார்க்கும் பொழுதெல்லாம் இந்த கதை தான் அவர்களுக்கு ஞாபகம் வருகின்றது. இனி காஞ்சி சமாச்சரமும் ஞாபகத்திற்கு வரும். இது அனைத்து பெண்களுக்கும் தெரிந்தால் இனி கோயிலுக்கு போய் சிவலிங்கத்தை வணங்க மாட்டார்கள்.(இப்போதைக்கு இந்த மாறுதல்). தமிழ் ஒவியா அனுராதா சங்கராச்சாரியரால் பாலியல் கொடுமைப் படுத்தப்பட்டதை அவர்களே விவரித்துள்ளதாக கூறியுள்ளீர்கள். இதுபற்றி விரிவாக இணையத்தில் உள்ளதா? முகவரி கொடுத்து உதவ முடியுமா. இடுகை மிக நன்றாக இருந்தது. கலைஞர் தொலைக்காட்சியில் அவர் தந்தையை பரிதாபமாக சித்தரித்திருந்தனர் அவர் காவல் துறைக்கு ஒத்துழைக்கவேயில்லை. அவர்தான் காவல்துறையினரை அசிங்க அசங்கமாக பேசி சபித்து வேறு அனுப்பினராம். இதற்காக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகளில் அறிந்தேன். சாப்பிட்டால் வாய்கொப்பளிப்பதில்லை ஆகையால் போன வருட தயிர், சாம்பார் சாதம் வாயில் ஒட்டிக்கொண்டிருக்கும் அதனால் பற்கள் சீக்கிறமே ஊத்தையாகிவிடும் (யாரும் கிட்டே நெருங்க முடியாது-ஒரு வேளை பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கின்றார்களோ இருக்கும்).(மன்னிக்கவும் இதெல்லாம் உண்மை) கையை உள்நாக்கு வரை உள்ளே விட்டு சாப்பிடுவது, (பக்கத்தில் இருப்பவர்க்கு வாந்தியே வந்து விடும்) இலையை சுத்தமாக வழித்து வழித்து நக்குவது சாப்பிட்ட இலைபோல் இருக்காது. சாப்பிட்டவுடன் இலையில் சிறிது சோறு வைப்பது தமிழர்கள் வெகுகாலமாக பின்பற்றுவது அதை நம்பி பல விலங்குகள் வெளியில் இருக்கும் என்பதற்காக (அது சாபம் விடும்- அது குலைப்பதை தான்). சாப்பாடு தட்டிலேயே கை கழுவுவது, சாப்பாட்டுன் கை கழுவுவது இதை சினிமா திரையில் கூட அனைவரும் பின்பற்றுவது மாதிரி வெட்கமில்லாமல் காட்டுகின்றனர். அவர்களின் எல்லாம் செய்கைகளும் ஒரே அழுக்குதான் (கப்பு). இது வெளிச்சத்துக்கு வந்தது மிக மிக நல்லது இன்னும் தெரியாதது எவ்வளவோ இன்னும் கண்டுபிடிக்கவேண்டும். (மேற்கூறியவை அனைத்தும் உண்மையே பல பாதி பார்ப்பனர்களே இதை கிண்டலடித்துள்ளனர. யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல-புண்பட்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது ஏதாவதொரு கட்டத்தில் சொல்லித்தானே ஆகவேண்டும்).
என்க்குள்ள பயம் போலிஸ்காரங்க சாமி சாமி ன்னு போலிஸ் கஸ்டடியிலேயே அந்த பார்ப்பானுக்கு சாமரம் வீசுவா(னு)ங்க. ஏனா சாமி சாபம் விட்டுடும் என்று இதை தி.க வினர் மிகத்தீவிரமாக எதிர்த்து போராடவேண்டும் தேவைப்பட்டால் பெரிய படை திரட்ட வேண்டும். அப்புரம் காஞ்சி மட ஊத்தாச்சாரியர் வழக்கை இழுத்தடித்து கொண்டிருக்கின்றார்களே அது போல் ஆகிவிடும். இவர்கள் அரசியலுக்காக எப்படி வேண்டுமானாலும் (காம்பரமைஸ்)சமரசம் ஆகிவிடுவார்கள். எனக்கென்னவோ அது அந்தாளுக்கு சாதகமாகத்தான் வந்துடும் என்று உறுத்துகின்றது. எல்லா நீதிபதிகளும் (பார்ப்பனர்கள்) ஊத்தாச்சாரியர்களின் ஜால்ராக்கள் தான். சாமிக்குத்தம் என்று புத்தி போட்டு கொண்டார்கள் என்றால், அவ்வளவுதான். இல்லையென்றால் நம்மாள நாம காப்பத்தாம வேற யார் காப்பத்துவா. நம்மாத்து மானம் தான் போகும் என்று தீர்ப்பை மாற்றி எழுதிவிட்டால். மக்களுக்கு மூடநம்பிக்கை மீண்டும் வேரூன்றி விடும். பார்ப்பன ஊத்தசாமி செஞ்சால் தப்பில்லை ஆசாமி செய்தால் தான் தப்புன்னு. ஜெயந்திர ஊத்தாச்சாரியருக்கும் ஜெயிலில் சிறப்பு உபசரிப்பெல்லாம் நடந்தது. சாமி சாமி என்று. இதை பத்திரிகைகள் கிழி கிழியென்று கிழித்தது (சூத்திர பத்திரிகைகள் தான் வேறு யார் போடுவார்கள்) இதை ஒவியா அவர்கள் சிறப்பு கவனம் எடுத்து ஒரு இடுகை இட்டால் நன்றாக இருக்கும். எவ்வளவோ பார்த்தாச்சு.
(நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு என்று நாம் கத்தி கொண்டிருக்கவேண்டியது தான். சூத்திரர்கள் சொல் அம்பலம் ஏறாது என்பதை பொய்யாக்கவேண்டும்.)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
தோழர் ஓட்டு பொறுக்கிகள் அனைவரையும் தவிர்த்து..கருநாகம் உட்பட ...இளைஞர்கள் தனி தமிழ்நாடு அடைவதற்கான வேட்கையோடு ..சென்றுகொண்டு இருக்கிறோம் அப்போதுதான் தமிழகத்தின் பல இன்னல்கள் தீர்க்கப்படும்..மீனவர்...காவிரி..பெரியாறு என நீட்டிக்க விரும்பவில்லை இந்திக்காரனிடம் கையேந்தி வாழ்வதும் ஒரு வாழ்கையா?
அதற்கு தங்கள் இயக்கத்தின் சார்பில் ஆதரவை வேண்டுகிறேன்..
Happened to just read your blog. Your postings are really good. Even though you dint write this post (you mentioned it from Vidhuthallai), I wonder whether whether it is possible for some of you to have a middle ground? I don't believe in caste, and hate it altogether, I hate when some one speak, behave superior because they think they are born such. But should I not believe in God too? Are we not suppose to punish people for what they have done and not say that they gods are also like this, so thus the disciples. I fear, the more you are alienating by being more radical, or should I read more. I am confused. :)
Post a Comment